To search this blog

Monday, August 23, 2021

Avani Sadayam ~ Thirumylai Sri Peyalwar 2021

 

Sri Peyazhwar thiruvadigale saranam ! – Avani Sadayam 2021



சில வருஷங்கள் முன்பு திருவல்லிக்கேணியில் பல வீடுகள் இருபக்கமும் திண்ணை வைத்து ரேழியும் கூடமும்  கொண்ட நீளமான வீடுகளாக இருந்தன !  - வாசலில் பெரிய திண்ணை, அடுத்து ரேழி, ஒரு தாழ்வாரம் (துணிகள் உலர்த்தப்பட்ட இருக்கும்); பெரிய ஹால், ஒன்றிரண்டு ரூம்கள்,  உக்கிராண அறை, சமையல் அறை, புழக்கடை, சில மரங்கள், குளியல் அறைகள், கழிப்பறைகள் .. .. [ரேழியிலும் நடு ஹாலிலும் துணிகளை உலர்த்த ஒரு நீண்ட கழி ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் - மிக லாவகமாக துணிகளை உலர்த்துவர்  !] சில வீடுகளில், பின்புறம் செல்ல ஒரு சிறிய பாதை (சந்து) -  இன்று அடுத்து  அடுத்து பலமாடி கட்டிடங்கள்.  குறைவான வெளிச்சம், பிளாட்களில் எந்த சுவருமே - கீழே பூமியோ, மாடியோ எதுவுமே நமதில்லை - இதுதான் நகர வாழ்க்கை !!

For someone travelling by air for the first time is an exciting experience – far difference from bus travel or train travel – the few moments that one gets to see the people, vehicle on roads as it ascends and slowly the buildings becoming small dots and if sea is nearer, the beauty of water from up above in the sky is truly an exhilarating experience but wait – not all the time and the timing matters.  Night travel is a different cup of tree – the city lights would still be beautiful but one could fall sleep momentarily not seeing anything and then it is pitch dark outside and the light of focus bulbs inside the flight !  .. ..

For many  air travellers, the choice of economy-class airline seat — window or aisle — is an enduring question, if not a source of countless arguments. It would not matter, if you are booking at last minute and rushing to airport whence your lookout is only travel and not preferred seat !   - life has changed a lot with Covid 19 onset on the globe – while planes are flying less full and the airline industry is predicted to make what's called a "soft" landing (industry-speak for "the fee-fuelled profit boom is ebbing"), air travelers have a choice. The debate is real.

Window proponents say a view and a fuselage to sleep against make theirs the superior choice. Passengers who prefer the aisle seats say it's better because they have easy access to the restrooms, the possibility of a little extra legroom, and they're first to exit the aircraft. There is only one thing both sides agree on: the intense dislike of the middle seat.  .. .. there is another Q – when you in the middle seat – which arm rest is yours ?  some would agree that   the person in the middle seat on an airplane gets to use both armrests.  The one sitting in window seat   can lean on the wall of the cabin; the passenger in the aisle seat can lean into the aisle, but the passenger in the middle seat has nowhere to go and will have to sit erect ! – and they get dibs on the shared armrests.   Airlines are silent on the matter, including unions representing flight attendants. Offering the armrests to a middle passenger is like offering your seat to a pregnant woman: You should do it, but you don’t have to. Etiquette experts say the armrests are technically up for grabs, but the person most inconvenienced – generally the person in the middle – should have first choice. The same goes for movie theatre seats.

No post on airplane, air travel, etiquettes et al – but on ‘rezhi’ – the aisle. An aisle is, in general, a space for walking with rows of seats on both sides or with rows of seats on one side and a wall on the other. Aisles can be seen in airplanes, certain types of buildings, and more. Their  floors may be flat or, as in theatres, stepped upwards from a stage. Aisles can also be seen in shops, warehouses, and factories, where rather than seats, they have shelving to either side.  Aisles are distinguished from corridors, hallways, walkways, footpaths/pavements/ sidewalks, trails, paths and (enclosed) "open areas".

ரேழி என்ற சொல் இப்போது அநேகமாக வழக்கொழிந்து விட்டது !  - இது இடைகழி  - பழைய வீடுகளில் வீட்டின் வெளிவாசலுக்கும் உள்வாசலுக்கும் இடையில் உள்ள பகுதி !  [passage or the space between the entrance and the second doorway in old style houses].  நமக்கு இவ்விடம் ஒரு அற்புதமான இடம் - நம் சம்பிரதாயத்தில் ஒரு அற்புத இடம்.  முன்னொரு நாளில், திருக்கோவலூரில் - ஒரு மழை நாளில்,  ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஒவ்வொருவராக சேர - அவ்விடத்திலே மேலும் நின்ற எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனை அவர்கள் தம் ஞானக்கண்களால் கண்டு - மூன்று திருவந்தாதி நமக்கு அளித்தனர். பொய்கைபிரான் வையத்தை அகலாக   வார்கடலை நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக;   பூதத்தார் அன்பை விளக்காக, ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியாக -  உலகத்தில் அஜ்ஞாநம் என்ற இருள் விலக மெய் விளக்கை ஏற்றினார்கள்.  இடைகழி என்பது வீட்டுக்கு வெளியேயும் இல்லை, வீட்டுக்கு உள்ளேயும் இல்லாத நடுவில் இருக்கும் இடம். அங்கே அன்புடன் தீபம் ஏற்றினால் வெளிச்சம் இரண்டு பக்கமும் தெரியும்.   தமிழ்த்தலைவனான பேயாழ்வார் இவ்விளக்குகளின் ஒளியில் எம்பெருமானைக் கண்டு 'திருக்கண்டேன்' என மூன்றாம் திருவந்தாதி அளித்தார். 

இன்று  ஆவணி மாதத்தில் 7ம் நாள் -  சதய  நக்ஷத்திரம்.  நேற்று யஜுர் உபாகர்மா முடிந்து இன்று 'காயத்ரி ஜபம்' -   ஸ்ரீபேயாழ்வாரின்  மாச திருநக்ஷத்திரம்.  


பரபக்தி பரக்ஞான பரமபக்தியையுடையராய், 'ஞான திருப்தஸ்ய யோகின' எனும்படியே, லோக யாத்திரையில் கண்வையாதே அலௌகிகராய், முதல் ஆழ்வார்களில், மாடமாமயிலை என புகழ்பெற்ற தலத்திலே அயோனிஜராய்   அவதரித்து 'மஹ்தாஹ்வயர்' என்கிற தமிழ் தலைவன் பேயாழ்வாரின் அமுத வரிகளில் மூன்றாம் திருவந்தாதி பாடல் இங்கே (இரண்டாம் பாடல்) 

இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யான் அறுத்தேன்*

பொன்தோய் வரை மார்பில் பூந்துழாய்*  அன்று

திருக்கண்டு கொண்ட திருமாலே *  உன்னை

மருக்கண்டு  கொண்டு என் மனம்  ..  

At Thirukkovalur idaikazhi, standing alongside Poigaippiran and Boothathazhvaar, Sri Peyalwar has darshan of Sriman Narayan with the aid of the lamps lit by the two Azhwaars.  Having had good darshan of that complete Sriman Narayana  along with pirattiyar, holding divine arms – Alwar declares that – the moment, he realized Sriman Narayana, he could rid of all sins as also the continuing trouble of rebirth – the very thought of realization takes him to moksha, is what Alwar proudly declares.  

மூன்றாம் திருவந்தாதியின் முதல் பாசுரத்தில், மற்றைய ஆழ்வார்கள் ஏற்றிய வையம் மற்றும் அன்பு எனப்படுகின்ற திருவிளக்குகளின் ஒளியாலே திவ்யமங்கள ஸ்வரூபனனான  எம்பெருமான்  கண்ட பேயாழ்வார்,   "திருக்கண்டேன்" என்று தொடங்கி, பகவானைத் தரிசிக்கப் பெற்றேன்; அவனுடன் கூடிய பிராட்டியைத் தரிசிக்கப் பெற்றேன்; அவனோடு கூடிய திவ்ய ஆயுதங்களைத் தரிசிக்கப் பெற்றேன் என்று தான் கண்ட தரிசனத்தை அறிவித்தார். ஆக, அந்த ஆயனான கண்ணனின் தரிசனத்தைப் பெற்றேன் என்று தொடங்கி, "இன்றே கழல் கண்டேன்" என்பதன் மூலம், கண்ணனே! உனது திருவடிகளை வணங்கப் பெற்றேன் என்றும், "ஏழ்பிறப்பும் யான் அறுத்தேன்" என்பதன் மூலம் ஜென்ம பரம்பைரைகள் இனி என்னைத் தொடரமுடியாதபடி ஒழித்திட்டேன் என்றும் உரைக்கிறார். கண்ணன் எம்பெருமானின் திருவடிகளைச் சரண் பற்றியதால் கிடைத்த பலன், பிறவித் துன்பம் முடிந்தது என்று அறுதியிடுகிறார் பேயாழ்வார்.  

ஸ்ரீமன் நாராயணனைக் கண்டுகொண்ட அந்த க்ஷணத்திலேயே மற்ற  எல்லாப் பிறவிகளையும் இனித் தொடரமுடியாதபடி அறுத்துவிட்டேன், என்று உள்ளம் மகிழ்ந்து பாடுகிறார். அவன் தரிசனம் கண்ட அடுத்த கணமே பிறவாப் பெருவீடு நிச்சயம் கிடைத்துவிடும் என்பதை உணர்த்துகிறார் இந்தப் பாசுரம் மூலம்.  

Here are some photos of Thamizh thalaivan Sri Peyazhwar at Thirumylai Madhava Perumal thirukovil  taken during recent Thirupavithrothsavam and  thirumanjana avasaram on sarrumurai of yesteryear.  

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathukmar
23rd  Aug 2021.
  

நன்றி :  ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் சுவாமியின்  விளக்க உரை from dravidaveda.org









 

No comments:

Post a Comment