To search this blog

Thursday, August 26, 2021

Energy ! ~ achieving impossible !! - *அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி*

ஒரு காரியத்தை வெற்றியுடன் முடிப்பதற்கு என்ன செய்யவேண்டும்.  அச்செயல்வல்லனது வெற்றி அவனது ஆற்றலை சார்ந்தது அல்லவா!  செயற்கரிய செயல்களை முடிக்க என் செய்ய வேண்டும் ? - நம் பூதத்தாழ்வார் 'அரியதை எளிதாக்கும் வழியை' தமது இரண்டாம் திருவந்தாதி பாசுரத்திலே எடுத்துரைக்கின்றார்.


ஆற்றல் என்பது ஒரு வேலையை  செய்யவல்ல திறமை.   ஒரு மின் விளக்கு எரிய மின்னாற்றல் தேவை படுகிறது.  ஒலிம்பிக் போட்டிகளில் இதற்கு முன் இருந்த சாதனைகளை தாண்டி புது சாதனைகள் ஏற்படுத்துதல் கண்டோம்.  ஒரு ஓவியனின் சிறப்பு, அவனுக்குள் இருக்கும் திறமை மற்றும்   அவனுடைய தளராத கைப்பயிற்சியினாலே வந்தது. அது போலவே வீரர்கள், தங்கள் திறமைகளை, மென்மேலும் பயிற்சி மூலம் சீர்படுத்தி, புது சாதனைகளை அடைகின்றனர்.

On August 1,2021 – Yulimar Rojas jumped 15.67 meters, breaking the record of 15.50 set by Inessa Kravets of Ukraine in 1995. "I knew. I already knew. I knew from the run. I knew I couldn't miss that one. I knew it was right there," Rojas was to say later.  "I didn't even have to look. My head, my heart, my body."

The sporting extravaganza at the Tokyo Olympics drew to a close after over two weeks of high-octane action. The Indian contingent at the Games returns with seven medals, including a historic first gold medal in athletics for Neeraj Chopra in men's javelin throw. Weightlifter Mirabai Chanu won silver while the Indian men's hockey team won a bronze medal, ending a 41-year wait for an Olympic medal. The Indians aside, there were several Olympic and world records broken at the Games, including the men's and women's 400m hurdles and women's team pursuit in cycling among others. Every participant not only tries to top the event and win Gold but also has in mind – creating a newer World record ie., doing the ‘impossible’.  Impossible is – seemingly an impossible task, that which cannot be accomplished ! – yet people do that !!  - for achieving greater heights, one has to change their body, have a very strict practice routine, change life, embrace hard things, push the limits and believe that impossible is indeed possible.  

It is all about ENERGY.  Over the last decade, the nuclear power industry has successfully rebranded an appallingly toxic energy industry as “zero carbon” and even “clean” (Zero-carbon electricity outstrips fossil fuels in Britain across 2019, 1 January 2020) by never mentioning the terrible legacy of nuclear waste. Nuclear energy is neither clean nor zero-carbon when you consider its complete fuel cycle, from uranium mining overseas to the energy-intensive production of fuel rods to the management of highly toxic radioactive waste products such as plutonium.

In physics, energy is the quantitative property that must be transferred to a body or physical system to perform work on the body, or to heat it. Energy is a conserved quantity; the law of conservation of energy states that energy can be converted in form, but not created or destroyed. The unit of measurement in the International System of Units (SI) of energy is the joule, which is the energy transferred to an object by the work of moving it a distance of one metre against a force of one newton.  In philosophy, potentiality and actuality  are a pair of closely connected principles which Aristotle used to analyze motion, causality, ethics, and physiology in his Physics, Metaphysics, Nicomachean Ethics and De Anima, which is about the human psyche. No Physics post this, nor one on  Sports !

ஆற்றல் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன : ஊக்கம் - vigour; வலிமை - force; வீரியம் - stamina; ஆற்றல் - ability; சாரம்; வல்லமை; திறமை  போன்றன.  ஆற்றல் என்பது  வேலைத்திறன், இயக்கம் அல்லது மாற்றத்தை மேற்கொள்ள உடல்களின் உள்ளார்ந்த திறன் -  அது ஏதாவது மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. ஆற்றல் என்ற சொல் இயற்பியல், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம், வேதியியல் போன்ற பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது,

ஆற்றல் அழிவின்மை விதி (Law of conservation of energy) கூறுகிறது : ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றலை மற்றோரு வகை ஆற்றலாக மாற்றலாம். ஒரு தொகுப்பில் உள்ள ஆற்றலின் கூட்டுத்தொகை ஒரு மாறிலி.  இயற்பியலில் ஆற்றல் / சக்தி (energy) ,   என்பது வேலை செய்யத்தகு அளவு என்று எளிமையாக வரையறை செய்வர். அதாவது ஒரு பொருளின் ஆற்றல் அதனால் செய்ய இயலும் வேலையின் அளவைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும். அனைத்துலக முறை அலகுகள் முறையில் ஆற்றலின் அலகு யூல் ஆகும். 





செய்வதற்கு அரிய செயலும்  மஹாபுருஷனான எம்பெருமானை பெற்றால்  எளிது ஆகும்.

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி*

பெருக முயல்வாரைப் பெற்றால்* - கரியதோர்

வெண்கோட்டு மால்யானை வென்று முடித்தன்றே*

தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து. 

                                               ~    ஸ்ரீ பூதத்தாழ்வார் பாசுரம். இரண்டாம் திருவந்தாதி. 

சேதனன் முதலில் செய்ய வேண்டியது, புரிந்து கொள்ளவேண்டியது.  எம்பெருமான் ஸர்வசக்தனென்பதை அறிந்து கொண்டு, அப்படி ஸர்வசக்தனான அவனே நம்முடைய பாரங்களைத் தன் தலைமீது ஏற்றுக்கொண்டு உதவுவான் என்பதை உணர வேண்டும்.  அத்தகைய எம்பெருமானிடத்திலே சரணடைதல் வேண்டும்.   மிகவும் உத்ஸாஹமும்  அளவிலா ஆற்றலும்  கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை கிடைக்கப்பெற்றால் - " செய்வதற்கு மிகக்கடினமான எந்த செயலும் எளிது ஆகும்  - வெண்ணிறமான தந்தங்களையுடைய  கருநிறமுள்ள கஜேந்திராழ்வான் எனும் யானைகளின் தலைவன்,  குளிர்ந்த பொய்கைக் கரையிலே, சிறந்த தாமரைப்பூக்களைக் கொண்டு, மடுவின் கரையிலெழுந்தருளின எம்பெருமான் திருவடிகளிலே தாழ்ந்து வணங்கியடிமை செய்ததனால்  விரோதியை ஜயித்துத் தன் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டதன்றோ !   சேதநன்  தானும் அதுபோலவே எம்பெருமானை சரணடைந்தால் போதுமானது. 

There is nothing  impossible for the devotee who has sought refuge in Sriman Narayana.  The most powerful Emperuman  accepts all with love just as He did for that elephant Gajendra. That beautiful white elephant battling life, offered fragrant flowers, bowed low and attained desired fruit by surrendering to Sriman Narayana.

Reminiscing the good olden days,  here are some photos of Sri Parthasarathi Emperuman on day 2 of Theppothsavam at Thiruvallikkeni divyadesam on 9.3.2016.

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
26.08.2021

நன்றி:  கட்டற்ற அற்புத சம்பிரதாய களஞ்சியம் : திராவிட வேதா இணையம் ; கச்சி ஸ்வாமிகள் - திரு உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி விளக்க உரை. 









1 comment: