To search this blog

Tuesday, August 10, 2021

Sri Andal Thiruvadipura uthsava sirappu 2021

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே 



Sure have heard many a times – ‘Patience is virtue’.  The word virtue comes from the Latin root vir, for man. At first virtue meant manliness or valour, but over time it settled into the sense of moral excellence. Virtue can also mean excellence in general.   Patience” is best described as a state of forbearance or restraint in the face of delay or provocation, without becoming overwhelmed by annoyance or anger. It is the ability to endure something negative that’s found its’ way into our environment, without letting it control our behavior. Patience is a person’s ability to wait something out or endure something tedious, without getting riled up. Having patience means you can remain calm, even when you’ve been waiting forever or dealing with something painstakingly slow or trying to teach someone how to do something and they just don’t get it. It involves acceptance and tolerance. Are we living in a Society that is turning more and more intolerant ! 

A great day today  (11th Aug 2021 ) ~ the concluding day of Andal Uthsavam – Thiruvadipuram.  இன்று 'திருவாடிப்பூரம்,' மிகச் சிறந்த நன்னாள் !  ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தினம்.     ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார்  பெண்பிள்ளையாய், நந்தவனத்தில், துளசி மலரில் பூமிப்பிராட்டி அம்சமாய் தோன்றிய கோதைப் பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த  பிரபந்தங்கள்  'திருப்பாவை; நாச்சியார் திருமொழி". 





  ~ the asterism of the day marks fragrance as our Acharyan Sri Manavala Mamunigal says :

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த

திருவாடிப்பூரத்தின் சீர்மை, ஒரு நாளைக்கு

உண்டோ? மனமே உணர்ந்து பார், ஆண்டாளுக்கு

உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு. 

பொறுமை சிறப்பானது ! காத்திருத்தல் இனிப்பானது !  பொறுமை கடலினும் பெரிது !  தற்போதய உலகம் மிகமிக அவசரமானதாக மாற்றப்பட்டுவிட்டது. காலையில் விதைத்ததை மாலையில் நல்ல லாபத்தோடு அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கும் மக்களை அதிகம் கொண்ட உலகம் இது. எந்தத் தொழிலில் இறங்கினாலும் லாபத்தை மட்டுமே நோக்கமாக வைத்து செயல்படுவதால், மனசாட்சிக்கு உட்பட்ட தர்மத்தை பெரும்பாலானோர் மறந்தே போய்விட்டனர். நல்ல விஷயங்கள் நிகழ ‘காத்திருத்தல் முக்கியம்.  சற்று பொறுமையாக அமர்ந்து இருத்தல்  என்ற  அம்சத்தை வெறுக்கும் மனோபாவம், இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்றிக்கொண்டுள்ளது.  

கோதைப்பிராட்டி ஆண்டாள் நாச்சியார் எம்பெருமான் மீது மையல் கொண்டு, அவனையே வரித்து காத்திருந்தாள்.  இதோ இங்கே அவரது நாச்சியார் திருமொழியில் இருந்து ஒரு அற்புத பாசுரம். எம்பெருமானோடு சேர்வதற்க்காகவே தன்னுடைய மூச்சினை தாங்கி இருப்பேன் ~ ஆவி காத்திருப்பேனே என்கிறார். 

ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோடு  இவையெல்லாம்

எளிமையால்  இட்டென்னை ஈடழியப் போயினவால்

குளிரருவி வேங்கடத்து  என்  கோவிந்தன் குணம்பாடி

அளியத்த மேகங்காள் ஆவி காத்திருப்பேனே 

இப்பாசுரத்திலே, ஆண்டாள் மேகங்களை விளிக்கிறார்.   அருள்புரியக்  கூடிய கறுத்த  மேகங்களே!  தேஹத்தின் காந்தியும், வண்ணமும்  நிறமும், வளைகளும், சிந்தை , நெஞ்சும்  உறக்கமும் ஆகிய இவையெல்லாம் என்னுடைய மனா ஈடுபாட்டினால்   என்னை உபேக்ஷித்துவிட்டு என் சீர் குலையும்படி  நீங்கி விட்டன !  குளிர்ந்த அருவிகளையுடைய  திருமலையிலே எழுந்தருளியிருக்கிற  என் கோவிந்தன் - கண்ணபிரானுடைய திருக்கல்யாண குணங்களை, மனமுருகி வாயார   பாடிக்கொண்டு, அவற்றையே தாரகமாக கொண்டு என்னுடைய  பிராணனை காத்திருப்பேனே !  அவ்வாறு ரக்ஷித்திருக்க என்னால் முடியுமோ? என வினவுகிறார் ஆண்டாள். 

பலவருடங்களாக  திருவாடிப்பூர உத்சவத்திலே சிறிய மாட வீதி புறப்பாடு, மாலை மாற்றல், திருவாய்மொழி சாற்றுமுறை, வாகன புறப்பாடுகள், திருத்தேர், சாற்றுமுறை என கண்டு களித்து வந்தோம்.  கொடிய கொரோனவால் போன வருஷமே இது தடையானது.   திருவல்லிக்கேணி திருவாடிப்பூர சிறப்பு நிகழ்ச்சிகளை  இணையத்தில் கண்டு களிக்கவே முடிந்தது.  போயின வருஷம், . நான்கு மாதங்களாக பெருமாளை கண்ணுறாத நமக்கு அது  ஒரு விருந்து.  எனினும் இதை பாக்கியம் என கொண்டாடும் நாம்  - உண்மையில் இந்நிலை அவநிலை என்பதன் உணர்ந்து,  நாம் மிக மிக வருத்தமுறவேண்டிய விஷயம்.  

சென்ற சில ஆண்டுகளை நினைத்து பாருங்கள்.  திருவல்லிக்கேணியில் மாலை சாற்றுமுறை முடிந்து தீர்த்த பிரசாதம் பெறுவதற்கு ஆயிரக்கணக்கானோர் குழுமி இருப்பார்கள்.  பிறகு ஒரு அற்புத சேர்த்தி புறப்பாடு - ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளும் ஆண்டாளும் ஏக ஆசனத்தில், ஒரே கேடயத்தில் எழுந்தருளும் புறப்பாடு நடைபெறும்.  இவை எதுவும் இப்போது நமக்கு இல்லையே !  இந்நிலை என்று மாறுமோ ? - கடைகள், அலுவலகங்கள், தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்பு எல்லாம் நடைபெறலாம்,  ஆனால் திருக்கோவில்களில் மட்டும் பெருமாள் சேவிக்க பக்தர்களுக்கு தடை .. .. அய்யகோ என்ன கொடுமை ! 

ஆண்டாள் பிறந்ததனால் கோவிந்தன் வாழும் ஊரான வில்லிபுத்தூர் பெருமை பெற்றது.  ஸ்ரீவில்லிபுத்தூர் மண்ணை மிதித்தாலே நமது அனைத்து பாவங்களும் விலகும்.  ஆண்டாள் பிறந்த இந்நன்னாளில் திருப்பாவை முதலான திவ்யப்ரபந்தங்களை பாடி திருமால் அடியார்களை மகிழ்வித்து, ஸ்ரீமான் நாராயணின் அருள் பெறுவோமாக !! 

Reminiscing the glorious past, here are some photos of Andal thiruther vaibhavam at Thiruvallikkeni on 14.1.2016. 

வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
11th Aug 2021.









1 comment:

  1. வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம். Very nice.

    ReplyDelete