To search this blog

Monday, August 30, 2021

celebrating the birth of Lord Krishna .. ..

தண்ணன் தாமரை கண்ணனே !  கண்ணா !  வேய்ங்குழல் ஊதும் ஆயனே ! எங்கள் போரேறே - இவ்வுலகத்தோர் அனைவரையும் காப்பீராக !  -  திருமயிலை மாதவப்பெருமாள் அழகு திருக்கோலம் இன்று

 


கிருஷ்ணனின் புகழ் கீதம் பாடு .. .. இல்லங்களில் அவன்  திருப்பாதம் வரைந்து, அலங்கரித்து, கண்ணனது பிறப்பை கொண்டாடுவோம்.  இந்த திருநாட்டிலே - சந்தனம்  எங்கள் நாட்டின் புழுதி - சிறுமியர் எல்லாம் ராதையின் வடிவம் !! சிறுவர் அனைவரும் கிருட்டிணனே !!  .. .. 




குழந்தைகளுக்கு 'கண்ணன், ராதை' வேடம் இட்டால் மட்டும் போதாது - அவர்களுக்கு கண்ணபிரானின் மகிமையையும் - அவர் வாழ்ந்த லட்சிய வாழ்வையும், அவர் நமக்கு தந்த நல் உபதேசமாம் பகவத்கீதையையும், நாம் கடைபிடிக்க வேண்டிய நல் ஒழுக்கங்களையும் அவர்களுக்கு கற்று தருதல் நம் கடமை. 

இதோ இங்கே ஸ்ரீ உ.வே. அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமியின் அருளுரை :

 

ஜந்மாஷ்டமீ / ஸ்ரீஜயந்தீ அன்று வீட்டுக் குழந்தைகளை, கண்ணனைப் போல நன்கு

அலங்கரித்து ஒப்பனைகள் செய்து மகிழ்வெய்துங்கள். அவை செய்யத்தக்கனவே..

மறுப்பாரில்லை.. ஆனால்.. சில விஷயங்களை குழந்தைகளுக்குச் சொல்ல மறவாதீர்கள்.

பிள்ளாய் ! குழலும் குரவைக் கூத்தும் ( ஆட்டமும் பாட்டமும் ) மட்டுமே கண்ணனின் அடையாளங்கள் என்றெண்ணி விடாதே !   அவன் ஏழை ஏதலன் கீழ்மகன் போன்றோருக்கும் சுலபன். குசேலனிடமும் பழைய நட்பை மறவாமல் அதனைப் பேணிப் போற்றிய பெம்மான் அவன்.. அதுவே அவன் அடையாளம். அதனைக் கற்க வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்குச் சொல்லுங்கள்.

கீதையை உபதேசித்து ஜகத்குரு என்று போற்றப்படுகின்றவன் அவன். நெறியெல்லாம் எடுத்துரைத்தவன் அவன். குழந்தைகளும் அவனைப் போல் அறிவாளியாதல் முக்கியம்.

தோலாத பெருவீரன் அவன். கம்ஸ சாணூராதிகளை அநாயாஸமாக வென்ற திறலுடையவன் அவன். குழந்தைகளும் அவனைப் போல் வீரத்திற் சிறந்தவர்களாதல் முக்கியம்.

பெருமான் ஸர்வஜ்ஞன் .. அவன் அறிவோடே ஒப்பிட்டால் மொத்த ப்ரஹ்மாண்டத்தின் அறிவையும் சேர்த்தாலும்; அவை அணு மாத்ரமென்னவும் போகாது !

குழந்தைகளுக்கு இவற்றைச் சொல்லுங்கள்.  அவனைப் போல் குழந்தைகளும் நிறை ஞான மூர்த்திகளாக ஆகட்டும். 

1 comment: