To search this blog

Friday, July 21, 2023

Thiruvallikkeni Thiruvadipura Uthsavam 8 2023

Thiruvallikkeni Sri Andal Thiruvadipura  Uthsavam 8 2023

 


திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலும் மற்ற திருக்கோவில்களிலும் திருவாடிப்பூர உத்சவம் சிறப்புற நடந்து வருகிறது. கோதைப் பிராட்டி  எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் மீது அளவற்ற  பற்றும் ப்ரேமையும் கொண்டவள்  - மானிடவரான தம்மை ஸ்ரீமன் நாராயணன் வந்து ஆட்கொள்ளுவான் என்று ஐயமற நம்பினாள் - அதன்படியே வாழ்ந்தாள் - திருமாலிருஞ்ச்சோலை அழகிய மணவாளனையே மணாளனாக மணமுடித்தாள். 

ஆண்டாள் எம்பெருமான் மீது கொண்டிருந்த அளப்பரிய மையலை அருகே இருந்தோர் சிலர் அறிவுரை சொல்லி திருத்த எண்ணினார். அவர்களுக்கு கோதை பிராட்டி தன நாச்சியார் திருமொழியில் உரைக்கும் பதிலானது :  தாய்மார்களே! நீங்கள் எனக்கு ஹிதஞ்சொல்வதாக நினைத்துப் பல பேச்சுக்களைப் பேசுகிறீர்கள், எப்படியாவது என்நெஞ்சைக் கண்ணபிரானிடத்தில் நின்றும் மீட்கவேணுமென்று பார்க்கிறீர்கள்,  ஆனால் நான் எம்பெருமானை மட்டுமே எண்ணியிருப்பேன், அவனிடம் நிச்சயம் சென்று சேர்வேனாக !!

 

பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை

வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே

கோலால் நிரைமேய்த்தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி  நீலார்

தண்ணந் துழாய் கொண்டென் நெறிமேன் குழல்மேல் சூட்டீரே

 

மிக இளமையான பருவத்து ஆலந்தளிரிலே  துயில் கொண்ட பராமனுடைய   வலையிலே தானாக வலிய  அகப்பட்டுக் கொண்டிருக்கிற என்னை பற்றி, கூரிய வேல் ஆயுதத்தை கொண்டு கொடுமையாக துளைத்தது போலே  உங்களுக்குத் தோன்றின படியெல்லாம் சொல்வதைத் தவிர்ந்து இடைச்சாதிக்கு உரிய கோலைக் கொண்டு பசுக்கூட்டங்களை மேய்த்தவனாய்  திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுமவனாய் குடக்கூடத்தாடினவனுமான கண்ணபிரானுடைய பசுமை பொருந்திக் குளிர்ந்து அழகிய திருத்துழாயைக் கொண்டுவந்து எனது கூந்தலிலே சூட்டுங்கள் என வேண்டுகிறாள்.  




At Thiruvallikkeni divyadesam, today was day 8 of Thiruvadipura Uthsavam.  Sri Kothai piratti Andal had siriya mada veethi purappadu and it was Periya thirumadal in the goshti.  Here are some photos taken during the purappadu. 

அடியேன்   ஸ்ரீனிவாச தாசன்.
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
20th July 2023 

பாசுர விளக்கம் : ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி - ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம். 












No comments:

Post a Comment