To search this blog

Sunday, July 2, 2023

Sri Azhagiya Singar Yanai vahanam 2023 - ven samara !!

திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் தெள்ளிய சிங்கர் ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள்  இரவு 2.7.2023  கம்பீரமான  யானை வாகனம். திருவல்லிக்கேணி யானை வாஹனம் அமர்ந்த நிலையில், தங்க பூச்சுடன் ஜொலிக்கும். வாகனத்தின் மீது வெண்பட்டுடுத்தி, பெருமாள் பின்பே பட்டர் அமர்ந்து சாமரம் வீசி வருவது தனி சிறப்பு. யானை வாயில் வாழை மரங்கள் வைத்து, நிஜமான களிறு ஓடி வருவதைப் போல் இருக்கும்.    

நானமா என்றும் கஸ்தூரி மான் என்றும் அழைக்கப்படும் மானினம் அரிதாகக் காணப்படும் ஒரு மானினம். இது இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு விலங்கு. இவற்றுக்குக் கொம்புகள் கிடையாது, ஆனால் மேல் தாடையில் இருந்து நீண்ட கோரைப்பற்கள் கீழ்நோக்கி வளர்ந்து இருப்பதும் (ஆண் மான்களுக்கு), இதன் பின் புறம் மணம் தரும் பொரு'ட்கள் வெளியிடும் சுரப்பிகள் இருப்பதும் இவற்றின் சிறப்புக் கூறுகள்.  

சாமரம் அல்லது சவுரி என்பது  தெய்வங்கள் மற்றும் அரசர்களுக்கு  மரியாதைப் பொருளாக வீசப்படும் விசிறி ஆகும். இது இதமான சூழலை ஏற்படுத்த வீசப்படுகின்றது. இது கவரிமானின் மயிரில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.  கோயில் வழிபாட்டில் "சோடசோபசாரம்' என்ற 16 வகையான வழிபாடுகளை ஆகமங்கள் கூறுகின்றன. அதில்,  சாமரமும் முக்கிய இடம் பெற்று விளங்குகிறது. சைவ சமய அடியார்களின் வரலாற்றான பெரியபுராணத்தை தொகுத்து எழுதிய சேக்கிழாரை இரண்டாம் குலோத்துங்க சோழனான அநபாய சோழன் தனது பட்டத்து யானை மீது ஏற்றித் தானும் அவர்பின் அமர்ந்து கவரி வீசினார். அந்நிகழ்ச்சி வேதாரண்யம் கோயிலில் ஓவியமாகத் திகழ்கிறது.



 



Couple of photos taken this evening – Sri Azhagiya Singar on yanai vahanam with battar spreading samaram for Emperuman.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
2.7.2023 

No comments:

Post a Comment