To search this blog

Wednesday, September 1, 2021

celebrating birth of Bhagwan Sree Krishna - Uriyadi thiruvizha ! - Varagur

 

The most acclaimed day  ~  hailing the birth of Lord Sri Krishna occurred on 31st Oct 2021    ~  when our Emperuman Sri Krishna was born  -  Sri Periyazhwar sings that – people living in those beautiful mansions, spilled oil and turmeric powder on one another, in celebrations thus slushing the portico of Sri Krishna’s house.  .. .. .. Uriyadi is an important celebration on Sri Jayanthi day.    


கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது ? - மக்கள் வழக்கம் போல வீதிகளில் நடமாடுகிறார்கள்.  எல்லா கடைகள், பொது இடங்களில் கூட்டம்.  பெரும்பாலோனோர் முகக்கவசம் அணிவதில்லை.  பீச் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. வாழ்வின் அதிமுக்கியமான சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுவிட்டன .. .. .. ஆனால் கோவில்களில் கட்டுப்பாடு !  .. வெள்ளி, சனி, ஞாயிறு - கோவில்கள் விடுமுறை !!!  .. .. இந்து சமய விழாக்களுக்கு தடை !! 

தமிழகத்தில் இரு தினங்கள் முன்  1,523 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், நேற்று 1,512 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  சென்னையில் 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று  189 ஆக அதிகரித்திருக்கிறது.  இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது கேரள மாநிலத்தில்தான். கேரளாதான் கொரோனாவை மிகச் சிறப்பாகக் கையாண்டது என்றும் பெரிதும் பாராட்டப்பட்டது நினைவில் இருக்கலாம். . கடந்த மாதம் பக்ரீத் பண்டிகைக்காகக் கேரளா முழுவதும் பல்வேறு தளர்வுகளை அந்த மாநில அரசு அறிவித்திருந்தது.  சில மாதங்கள் இந்த மாநிலத்தில் தான் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம்.  தற்போது தொற்றின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது. கேரளாவில் கடந்த 22-ம் தேதி 10,402-ஆக இருந்த தொற்றின் எண்ணிக்கை 25-ம் தேதி 31,445-ஆக அதிகரித்திருக்கிறது.  

கொரோன பீதியில் சற்று நல்லவற்றையும் நோக்குவோம்.  ஒரு கோடிக்கும் மேலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைத்திருந்த இந்தியா, தனது சொந்த சாதனையை மீண்டும் முறியடித்திருக்கிறது.  நேற்று இந்தியா முழுதும் ஒரே நாளில் 1.09 கோடி பேருக்கும் மேல் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் இந்தியா தனது சொந்த சாதனையை முறியடித்திருப்பதாக சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.  


To mark the beginning of Sreekrishna Jayanthi celebrations in Kerala, flags were  hoisted in 15 lakh homes in Kerala. Celebration flags were hoisted in  Balagokulam temple areas and in public places.  Celebrations including Krishna Kuteeram at homes, Gau puja(worshipping cows), vriksha puja(worship of trees), dance of gopis, river worship, feeding little Krishna, Uriyadi(breaking pots containing butter) etc  all were held with pious and gaiety.  

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்த தினம் "ஸ்ரீஜெயந்தி"   "கிருஷ்ண ஜெயந்தி" என உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.  திருவல்லிக்கேணியில் இன்று (1.9.2021) வீதி புறப்பாடு கிடையாது, கோலாகல உறியடி திருவிழாவும் கிடையாது.  



கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோலாகலமாக நடைபெறும் உறியடி திரு விழாவை நடத்த வேண்டாம் என்று விழா ஏற்பாட்டாளர்களிடம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.  குறிப்பாக மும்பை, தானே, புனே மற்றும் கொங்கன் பகுதிகளில் இந்த கொண்டாட்டம் களை கட்டும். கிருஷ்ண ஜெயந்திக்கு நடைபெறும் தஹி ஹண்டி என்னும் உறியடி திருவிழாவில் கோவிந்தாக்கள் பனை உயரத்திற்கு பிரமிடு அமைத்து அந்தரத்தில் தொங்கும் தயிர் பானைகளை உடைத்து அசத்துவார்கள்.தயிர்பானைகளை உடைக்கும் கோவிந்தா குழுக்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பரிசுகளை அள்ளி கொடுப்பார்கள்.   

தமிழ்நாட்டில்தளர்வு நீட்டிப்பு குறித்தும் கொரோனா பாதிப்பு குறித்தும் மருத்துவத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.  இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில், சமய விழாக்களை முன்னிட்டு மத சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்களுக்கான தடை தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டது.    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து விழா கொண்டாடுவதற்கும், உரியடி போன்ற விழாக்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Few years ago read this news item in The Hindu – Tamil  “உரி அடிக்கும் விழாவில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை” : உச்ச நீதிமன்றம்.. .. திருக்கோவில் பஞ்சாங்கத்திலும்  - உரியடி  என்றே உள்ளது.  இது தமிழில் தவறான சொல்லாடல் !! கண்ணனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் முக்கியமான ஒன்று உறியடி  திருவிழா உரியடி  அல்ல !! திருவல்லிக்கேணியில் உள்ள யாதவர்கள் இந்நாளில் உறியடி திருவிழாவினை சிறப்பாக கொண்டாடுவர்.   உரிச்சொல் என்பதுஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல்.  தமிழில், உரி என்கிற வினைசொல்லுக்கு, தோலை நீக்கு' அல்லது ஒரு  முகத்தல் அலகு'  என்றே பொருள்படும்.  உறி என்ற பெயர்ச்சொல் பண்டங்கள், தயிர் போன்றவை வைக்கும் பொருட்டு தொங்கவிடும் உறி – எனவே இது உறியடி.

பெரியாழ்வார் திருமொழியில் - திருவாய்ப்பாடியிலே ஆயர்கள்,  கண்ணன் பிறந்த ஸந்தோஷம் உள்ளடங்காமல், நெய்யும் பாலும் தயிருமிருக்கிற உறிகளை அறுத்துக் கொண்டுவந்து முற்றத்திலே உருட்டிவிட்டு ஆடினார்கள் என்கிறார்.  ஆயர்கள் வீட்டில் பால், வெண்ணை, தயிர் நிறைய இருக்கும் - அவற்றை வியாபாரமும் செய்து பெருக்குவர்.  அவற்றைக்கூட தள்ளி உடைத்து கொண்டாடினர் என்றால் அன்று அவர்கள் எவ்வளவு ஆனந்தித்து இருக்க வேண்டும் ! இதோ ஒரு பாசுரம் :  

உறியை முற்றத்து உருட்டி  நின்றாடுவார்

நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்

செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து  எங்கும்

அறிவழிந்தனர் ஆய்ப்பாடி   ஆயரே.  

திருவாய்ப்பாடியிலுள்ள  ஆயர்கள் - தங்கள் இடைச்சேரியில் கண்ணபிரான் பிறந்து இருப்பதை கேட்டு ,  பால் தயிர் சேமித்து வைத்துள்ள உறிகளை,  வீட்டு  முற்றத்திலே உருட்டிவிட்டு,  நறுமணம் மிக்க நெய்யையும் பாலையும் தயிரையும் பலருக்கும் தானம் பண்ணியும் , பெண்கள் தமது நெருங்கி மெத்தென்றிருக்கிற கூந்தல் அவிழ்ந்து கலையும்படி நர்த்தனம் பண்ணியும்  - கோகுலமெங்கும்  தங்கள் மெய் மறந்து கூத்தாடி ஆனந்தம் கொண்டாடினர்  

Having celebrated the birth of Lord Krishna ,  lot more flows.   Lord Krishna was born in every house of His devotees; everyyear , on the next morning  there would be purappadu of Bala Krishnan [Kalinga Narthana kannan] visiting various places.  At Thiruvallikkeni,   dancing Krishna would have purappadu  in Sesha vahanam – ‘butter and milk’ is offered to Him.   In the evening, occurs  the grand purappadu of Sri Parthasarathi, as ‘Krishna with flute’ in beautiful sitting posture on ‘Punnai tree’  .. .. sadly this year there is no purappadu or ‘Uriyadi’.

Varagur is situated on the bank of the River Kudamurutti, tributary of river Cauvery. In this beautiful hamlet near Thirukkattupalli, reachable from Thiruvaiyaru or from Kallanai, the Great Saint Narayana Theertha Swamigal (who composed the Krishna Leela Tharangini) attained Deva Mukthi after he received the Viswaroopa Darshan of Lord Venkatesa Perumal.

Sri Krishna Leela Tarangini is a  Sanskrit opera authored by Narayana Teerthar.  The songs are in chaste Sanskrit, clear diction and are rich in poetic quality. Tarangini is an opera highly suitable for dance drama and it has been very well utilized by Indian classical dancers over the last two centuries.  Its author Narayana Tirtha, a great scholar, lived in the 17th century AD.   He was born in Andhra Pradesh but later by divine direction moved to Thanjavur and was attracted to Varagur temple.  By divine intervention he reached the village of Bhupatirajapuram and the temple of Venkatesvara there.  He is believed to have completed the composition of the Krishna Leela Tarangini at Varagur. Varagur is situated on the bank of the River Kudamurutti, tributary of river Cauvery, near Thiruvaiyaru.  

During his life, in this village, he used to celebrate “Krishna Astami” popularly known as Uriyadi. Even today the “Krishna Astami” festival being celebrated by the inhabitants of the village in the same traditional way which Great Saint Narayana Theertha Swamigal started during his later period of his life. The Festival starts on the next day of “Yajur Upakarma” i.e on “Gayathri Japam Day”.

During this 11 day festival Veda Parayanam of Rig, Yajur, Sama and Atharvana is  recited by the Great and Learned Sanskrit Scholars. Bajans and Divyanama Samkirthanams   and  upanyasams  by Sanskrit Pandits.  Sri Narayana theerthar is belived to have attained siddhi in 1745 at   Thirupoonthuruthy under a huge mango tree, on the banks of river Kudamurutti. 

Here are some photos of the Temple festivity thanks to Sri Arunachalam Chandramouli who hails from this place – every year Uriyadi would be conducted very grandly but following Govt restrictions this year it was a low-key affair.. ..

Before concluding,  you may have heard – “Mangalaalaya mamava Deva Pankajaasana Bhaavitha Bhaava” – a beautiful keerthana depicting the birth Bhagwan Sree Krishna – here is a melodious rendition in raag ‘kEdaara gowla’ sung by Malladi Brothers – the composition of Swami Narayana theerthar.  https://www.youtube.com/watch?v=p1qUfIpL-tE

adiyen Srinivasa dhasan
1st Sept. 2021.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

PS : the first 5 photos are Uriyadi celebrations at Thiruvallikkeni of yesteryears and the later photos are of Varagur this year -  courtesy Mr A Chandramouli.












1 comment:

  1. Very nice. Nice narration of Narayana theerthar and for uriyadi(உறியடி ). Beautiful photos.

    ReplyDelete