To search this blog

Tuesday, September 21, 2021

Thiruallikkeni Pavithrothsava Sarrumurai 2021 - மறப்பின்மை யான் வேண்டும் மாடு.

 

Today 21.9.2021 is the concluding day (Sarrumurai) of Thirup Pavithrothsavam being conducted at Thiruvallikkeni divaydesam.  There would be purnahuthi of the homams conducted – daily there is rendering of Vedas and Thiruvaimozhi.சண்டை சச்சரவுகள், பிணக்கங்கள் இல்லாத வீடில்லை.  புலவி நுணுக்கம் என்று ஒரு அத்தியாயம் திருக்குறளில் - இதில் ஊடல் (செல்ல பிணக்கு)  உண்டாவதற்குக்   நுட்பமான காரணங்கள் உரைத்துள்ளார்  திருவள்ளுவர். 

உள்ளினேன் என்றேன் மற்றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.
 

Pavithrotsavam is an annual ritual - the word itself is a derivative from the combination of two words - 'Pavithram (holy) and Uthsavam (Festivity).    This Uthsavam is penitential as also propitiatory  ~ for sure, there is nothing good or bad for the Ultimate Benefactor, the Lord who gracefully blesses in all our endeavours.   It is our own attempt to get rid of the evils that might have been caused by the omissions and commissions in the performance of various rituals throughout the year.   

Sriman Narayanan in Sri Vaishnavaite philosophy beholds the Best of everything and cannot in any manner be having anything in short. The festivals are only intended to be error correction [dosha nirvana] of the rituals that we, the humans conduct and fail in some manner.  Lord only accepts them with Divine Grace, blessing us all the time beyond what we deserve.  For a Srivaishnavaite, nothing needs to be done by self as Sriman Narayana with His abundant opulence will shower his blessings and guide us to do kainkaryam to Him.   

முன்கண்ட திருக்குறளின் உரை :     கணவன் தனது அன்பு மனைவியிடம், நின்னையே நினைத்தேன் என்றான்.  அதற்க்கு இன்புறாமல் - ஏன் மறந்தீர்!  மறந்தால் அல்லவோ நினைப்பு என பிணக்கம் கொண்டாளாம் காதலி.  மனம், நினைவுகள், மறத்தல்  - போன்றன பல மனித இயல்பு !  உள்மனம், நனவிலி மனம் அல்லது நனவில் மனம் (Unconscious / subconscious  minds) மனிதனின் மனதில் தானாகவே நடைபெறும் செயல். இவை  பரிசோதனைக்கு உட்படுத்த முடியாதன.   கசப்பான அனுபவங்களும், துன்பங்களும் விரைவில் மறக்கும்படி மனதின் அமைப்பு உள்ளது. அவைகள் மறக்காமல் இருந்தால் அவை மனிதனை செயலற்றவனவாக்கிவிடும்.  
ஆழ்வார்கள் எம்பெருமானிடத்தில் ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டவர்கள்.  எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன் உடைய பரமபோக்யமான திருக்குணங்களிலே முழுமையாக  ஆழ்ந்த ஸ்வாமி   நம்மாழ்வார்  - எம்பெருமானிடம் 'மறப்பின்மை' அருளவேணுமென வேண்டியது - எம்பெருமானது  திருக்குணங்களை மறவாமலிருக்குமத்தனை' !!!  

With age, one’s memory starts failing ! ‘brain-fade’ !  .. .. I still remember so vividly that Deodhar Trophy finals at Chepauk on 14.9.1980 – Krish Srikkanth, the darling of the crowd opened with V. Sivaramakrishnan, the tall left-hander.  Thirumalai Echambadi Srinivasan walked in at 0/1 and played a scintillating innings of 129, perhaps much better than IPL innings we see these days ! – no Cricket post this – often these days, I forget lot of things – mobile charger, laptop charger, keys and more !  .. ..

Memory refers to the processes that are used to acquire, store, retain, and later retrieve information. There are three major processes involved in memory: encoding, storage, and retrieval. Human memory involves the ability to both preserve and recover information we have learned or experienced. As we all know and have experienced too,  this is not a flawless process. Sometimes we forget or misremember things.  Memory problems can range from minor annoyances like forgetting where you left your  vehicle  keys to major diseases  that affect the quality of life and the ability to function. Memory slips are aggravating, frustrating, and sometimes worrisome.   

Forgetfulness is a persistent failure to remember. It results from changes in the brain and can be a normal part of aging or a symptom of another condition or disease. When you experience forgetfulness, you may find it harder to recall information or events, learn new things, or form new memories.  .. .. what would you pray to God – on forgetfulness !! – Swami Nammalwar certainly has better thoughts !  

இதோ இங்கே சுவாமி நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி பாசுரம் :  

மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது

பாலேபோல் சீரில் பழுத்தொழிந்தேன்,-மேலால்

பிறப்பின்மை பெற்று   அடிக்கீழ்க்  குற்றேவலன்று,

மறப்பின்மை யான் வேண்டும் மாடு.  

மறப்பின்மை யான் வேண்டும் மாடு :  எம்பெருமானே !  திருமாலே! உன்னுடைய பால்போலப் பரம போக்யாமன திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து விட்டேன்;  இனிமேல் வீடு பேறு  எனும் பிறப்பு இன்மை பெற்று உந்தன்  திருவடிவாரத்திலே  கைங்கரியம் பண்ணுவது  அடியேன் தங்களிடம் யாசிக்கும் செல்வமன்று !!உந்தன்  திவ்யமங்கள விக்ரஹ தேஜஸ்ஸை  அடியேன் எந்த க்ஷணமும் மறக்காமல் நிற்கும் நித்யானுபவ   விஷயமாக்க வேணும் ;  உன்னை மறவாதிருத்தல்  என்பதே தான் எப்போதும்  ஆசைப்படும் செல்வம் என உரைக்கின்றார் சுவாமி நம்மாழ்வார். .

Reminiscing the good olden days, here are some photos of Sri Parthasarathi Perumal Pavithrothsava purappadu   Thiruvallikkeni divyadesam on  21.8.2010.   

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21st  Sept. 2021.
  

பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை  களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.     2 comments:

  1. சூப்பர் சுவாமி அடியேன் bahksyam

    ReplyDelete