To search this blog

Saturday, September 25, 2021

kainkaryam to Emperuman - வைகலும் மாத்திரைப் போதுமோர் வீடின்றி

ஸ்ரீவைஷ்ணவம் ஒரு எளிய மார்க்கம்.  எம்பெருமானை நினைத்து, அவனுக்கே கைங்கர்யங்கள் செய்து, அவனடி திருத்தாளினை வணங்கி அவனடி சேர்வது வாழ்க்கையின் இலட்சியம்.  எம்பெருமான் ஸ்ரீமந்நாரணனை நாம் கை கூப்பி வணங்கி கைங்கர்யங்கள் செய்தல் க்ஷண நேரமும் இடைவிடாமல் இருக்க வேண்டும் என்கிறார் மாறன் சடகோபன் தம் திருவாய்மொழி பாசுரத்தில்.


 

கொரோனா இன்று கட்டுப்பாட்டில் உள்ளதா !  - எங்கெங்கு நோக்கினும் மக்கள் கூட்டம்,  எல்லா இடங்களும் திறந்து விடப்பட்டுள்ளன.  இன்று 25.9.2021  புரட்டாசி சனிக்கிழமை.  - திருவல்லிக்கேணியில் ஸ்ரீஅழகியசிங்கர் புறப்பாட்டை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு களித்திருப்பர் .. .. அய்யகோ, ஆனால்  இன்றோ  அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் புறப்பாடும் கிடையாது; நாம் திருக்கோவிலுக்கு சென்று  சேவிக்கவும் இயலாது !!  - இந்நிலை என்று மாறும் ??  

கொரோனா முன்னரும், பின்னரும், மனிதகுலம் தங்கள் நோய்க்கு மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு குணம் அடைய முயற்சிக்கிறது.   மருந்து  என்பது ஒரு நோயைக் கண்டறிய, குணப்படுத்த, சிகிச்சை செய்ய அல்லது நோய் வராமல் தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சையளித்தல் என்பது மருத்துவத்துறையின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது.  நோய்வாய்ப்பட வேண்டுமென்று யாருமே விரும்புவதில்லை. அதனால்தான் சளி, காய்ச்சல், தலைவலி போன்ற என்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் முடிந்தவரை அதனை விரைவில் மாத்திரைகள் மூலமே  குணப்படுத்த  முயல்கிறோம்.   



அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம் என மூத்த குடிமக்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சராசரியாக மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரும் தினசரி 8 மாத்திரைகள் சாப்பிடுவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.  ஆரோக்கியம் குறித்த விழிப்புஉணர்வு இன்று அதிகமாகிவிட்டது... உண்மை! உடல்நலம் குறித்த அக்கறையோடு பார்த்துப் பார்த்து காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து, அளவு பார்த்துச் சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களேகூட ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். அது, மாத்திரை, மருந்துகள் சாப்பிடும் தருணம். `இவற்றில் சிலவற்றை உட்கொள்ளும்போது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும்போது, மாத்திரை, மருந்தின் தன்மை பாதிக்கப்படும்; அவற்றின் பணி தடைப்படும்; சில நேரங்களில் நோய்க்கு மருந்தாவதற்கு பதிலாக, ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.    இது மருந்து மாத்திரை பற்றிய பதிவு அல்ல !  .. .. கொஞ்சம் தமிழ் இலக்கணம்; முக்கியமாக - சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம். 

தமிழ் இலக்கணத்தில் - உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துக்களின் அளவு :  ஒரு மாத்திரை;  நெடில் எழுத்துகள் அளவு -இரண்டு மாத்திரை  !!!  தமிழ் இலக்கணத்தில்  மாத்திரை என்பது ஓர் எழுத்தை எவ்வளவு நேரம் ஒலிக்கிறோம் என்று கூறுவதாகும். ஒவ்வோர் எழுத்தையும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்று வரையறை செய்து வைக்கப்பட்டுள்ளது. மாத்திரை என்பது கால அளவைக் குறிப்பதாகும்.  மாத்திரை எனப்படுவது ஒருவன் இயல்பாகக் கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும்.  நாம் ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண் இயல்பாகவே மூடித் திறந்துகொள்ளும். இப்படி நம்மை அறியாமல் கண் இமைத்துக்கொள்ளும் கால அளவுதான் மாத்திரை.  எனினும், இந்த வரையறை சில இடங்களில் மீறப்படுவதும் உண்டு. இசை பாடும்போதும், ஒருவரை விளிக்கும்போதும், பொருள்களைக் கூவி விற்கும் போதும் இந்த வரையறையை மீறி ஒலித்தலும் உண்டு. 

இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத திருவாய்மொழி பாசுரம் : 

கைகளால் ஆரத் தொழுது தொழுதுன்னை,

வைகலும் மாத்திரைப் போதுமோர் வீடின்றி,

பைகொள் பாம்பேறி உறைபரனே, உன்னை

மெய்கொள்ளக் காண விரும்புமென் கண்களே.  

படங்கொண்ட திருவனந்தாழ்வான் மீதேறி உறையும் பரமபுருஷனே! -  எனது கண்களானவை எம்பெருமானாகிய உம்மை   கையாரப் பரிபூர்ண நமஸ்காரம் செய்து, ஒரு மாத்திரை அவகாசம் கூட இல்லாமல்  க்ஷணகாலமும் இடைவிடாமல் நாள்தோறும் உன்னை மெய்யாகவே காண்பதற்கு  விரும்புகின்றன.  அப்படி இவ்வாறாக எம்பெருமானிடத்திலே ஆழ்ந்து பக்தி செலுத்துகிறார் ஸ்வாமி நம்மாழ்வார்.  திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ஸ்ரீபார்த்தசாரதி  ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள்  இரவு  கம்பீரமான  யானை வாகனம்.  



Uthsavams are great festivities providing opportunities for kainkaryam to Emperuman and Brahmothsavam is grandiose.  Reminiscing the good olden days, here are some photos of  Yanai vahana   purappadu of Sri Parthasarathi Perumal during special brahmothsavam at  Thiruvallikkeni divyadesam on 8.2.2021.    

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
25th   Sept. 2021.
  

பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை  களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.       













No comments:

Post a Comment