To search this blog

Sunday, June 6, 2021

Praise Paeans for only the ultimate benefactor ! : பண்ணினின்மொழி யாழ் நரம்பில் பெற்ற !!

 

ஓய்மானாடு  என்ற நாட்டை கேள்வியுற்று இருக்கிறீர்களா ?  - உதாரன் என்ற சொல்லுக்கு : கொடையாளி; பேச்சுத்திறமை உள்ளவன் என்று பொருள். - மிக சிறந்த வள்ளல் யார் ?? 



“It would not be an exaggeration to say human race in general is facing an existential crisis” in the COVID-19 pandemic, said the Delhi High Court on Friday while expressing anguish over the way things have transpired in the second wave.  

Former US President Donald Trump on Saturday called on America and all the nations to demand reparations from China due to the damage caused by Covid-19.  Speaking at the North Carolina Republican Convention, Trump said: “The time has come for America and the world to demand reparations and accountability from the Communist Party of China. We should all declare within one voice that China must pay. They must pay.” He also stressed that the US should immediately take steps to impose a 100 per cent tariff on all Chinese products, which can stop them from pulling their military and move a lot of companies back to the US. In addition, all nations should work together to present China for a bill of minimum USD 10 trillion to compensate for the damage they have caused and that is a very low number, the damage is far far greater. As a first step, all countries should collectively cancel any debt that they owe to China as a downpayment on reparations,” he said at the convention.  “The nations of the world should no longer owe money to China. China has destroyed so many nations… China should owe money to the nations of the world… These nations have been destroyed,” Trump added.

Something is endemic if it is found in a particular geographic area, population or region. An endemic disease is constantly present in a particular area: for example, AIDS is endemic in parts of Africa. When used to describe a species, however, endemic refers to being native to a specific location and found naturally nowhere else. The words pandemic, epidemic and endemic often come to public attention in relation to infectious diseases. They share a common root from the Ancient Greek word demos (people), but have distinct meanings. This can be seen clearly in relation to the rise and spread of covid-19.

In late 2019, the disease emerged in Wuhan, China. At first, it was an epidemic, a sudden outbreak that spread rapidly among the people in that city. Despite strict quarantine measures, public health officials were unable to contain the virus, SARS-CoV-2. In March 2020, the World Health Organization declared it to be a pandemic, meaning that it had spread widely around the world. A year later, the covid-19 pandemic was still raging.   Hopefully, this too gets contained and becomes a thing of the past !!



ஓய்மானாடு என்பது சோழநாட்டுக்கும், தொண்டைநாட்டுக்கும் இடையில் பரந்து கிடந்த சங்ககால நாடுகளில் ஒன்றாகும். இதன் கிழக்கில் வங்கக்கடலும், மேற்கில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்ட மலாடு என்னும் மலையமானாடு ஆகும். இடைக்கழி நாடு எனவும் இதனை வழங்கினர். 

தமிழ் இலக்கணத்தில் "  ஆற்றுப்படை"  என்பது புலவர் ஒருவர் மன்னர் ஒருவரைப் புகழ்ந்து பாடி, தான் பரிசில் பெற்று வந்தது குறித்து, வழியில் சந்திக்கும் வேறொரு புலவரிடம் / ஏனைய கலைஞர்களிடம், தாங்களும் சென்று மன்னனைப் பாடினால் உமக்கும் பரிசில் கிடைக்கும் என்று ஆற்றுப்படுத்துவது.  தொல்காப்பியர் கூற்றின்படி ஆற்றுப்படை என்பது வறுமைச் சூழலில் உள்ள கலைஞர்களான கூத்தர், பாணர், பொருநர், விறலியர் போன்றோரை வளம் பெற்ற மற்றொரு கலைஞர் தான் பெற்றது போன்றே வளமும் வாழ்வும் பெறும் வகையில் வள்ளல் ஒருவரிடம் செல்வதற்குத் துணை புரிவதே ஆகும்.  ஆற்றுப்படை என்றால் வழிபடுத்துதல்; நல்வழி காட்டுதல் எனவும் கொள்ளலாம். 

நல்லியக்கோடன் கடையெழு வள்ளல்களுக்குப் பின்னர் வாழ்ந்த வள்ளல்களில் ஒருவன். ஓய்மான் நாட்டு அரசன்.   இவனது தலைநகர் நன்மாவிலங்கை. இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் ஏழு நரம்பு கொண்ட யாழை மீட்டிப் பாடும் சிறுபாண் என்னும் இசைவாணர்களை இவனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.  அவ்வமயம் இந்த மன்னனை - சேர, சோழ, பாண்டிய, மற்றைய கொடையாளிகளை விட - சிறந்தவனாக கூறுகிறார்.  நல்லியக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய 269 அடிகள் கொண்ட அகவற்பாட்டு - சிறுபாணாற்றுப்படை.    நல்லியக்கோடன் சிற்றரசன் ஆயினும் அவன் சேர, சோழ, பாண்டியன் என்னும் முடியுடை வேந்தர் மூவரைக் காட்டிலும் கொடைத்தன்மையால் ஓங்கி நிற்பவன் என்பதை இந்நூலில் புலவர் தெளிவுபடக் கூறியுள்ளார்.  தன்னை நாடி வரும் பாணர்தம் வறுமை நீங்கும் வண்ணம் வாரி வாரி வழங்குபவன். அத்தகையவன் உங்களுக்குச் சிறந்த தேர்களையும் குதிரைகளையும் பின்னடையச் செய்யவும் வலிமை மிக்க எருதுகளையும் அவற்றைச் செல்லுத்தும் பாகனுடன் உங்களுக்குக் கொடுப்பான் என்று கூறி கலைஞர்களை அவரிடம் செல்லுமாறு தமது பாடலில் கூறுகின்றார் . 

பொருநராற்றுப்படையில், பாலை யாழினால் வாசிக்கப்படும் பண் பகைமை கொள்வோரையும் மாற்றும் இயல்பு கொண்டது என்கிறார் புலவர் முடத்தாமக் கண்ணியார்.



 

Sweetness may overflow from the strings of lyre Yazh ~ for us Srivaishnavaites, it is Emperuman Sriman Narayana who is the most benevolent donor, who is capable of removing all our sins and ensuring good health by providing the ultimate medicine ‘Amrut’ as he provided for Devas by churning the Ocean. Thirumangai Mannan categorically advises that our tongue should sing paeans in praise of Sriman Narayana only and not of anybody else .. .. .. when the greatest Benefactor is available, why waste time in praising the lesser mortals ??   

பண்ணினின்மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து*,என்

கண்ணும் நெஞ்சும் வாயுமிடங்கொண்டான் கொண்ட பின்

                                                                             மறையோர் மனம் தன்னுள்*,

விண்ணுளார் பெருமானை  எம்மானை வீங்கு நீர்மகரம்  திளைக்கும் கடல்

வண்ணன்* மாமணி வண்ணனெம்மண்ணல் வண்ணமேயன்றி வாயுரையாதே!

 பண்  என்பது இனிய இசை.  இராகங்களுக்குள்ளே இனிமையான  சொல்லையுடைய யாழ் வீணையினுடைய  தந்திகளில் திறமையுடன் இசைக்க உண்டான பாலையென்கிற சிறந்த பண் போலே மிக இனியனாய்க் கொண்டு , எம்பெருமான் என்னெஞ்சில் வந்து புகுந்து, என் கண்ணும் நெஞ்சும் வாயும் ஆகிய எல்லா அவயங்களையும்  தனக்கு இருப்பிடமாக அங்கீகரித்தான்.  அவ்வாறாக என்னை ஆட்கொண்டபின்  வைதிகர்களினுடைய மனத்தை தனது உறைவிடமாக கொண்டவனும்,  நித்யஸூரிகளுக்குநாதனும் எனக்கு ஸ்வாமியும், நிரம்பிய நீரையுடையதாய் மீன்கள் துள்ளிவிளையாடா நி்ன்றுள்ளதான மாகடல் போன்ற திருநிறத்தையுடையவனும் நீலமணி நிறத்தவனும் எமக்கு நாதனுமான திருநறையூர் நம்பியீனுடைய சிறப்புகளை மட்டுமே  என்வாய் சொல்ல வல்லது.  வேறு எவரையும் புகழவல்லேன் அல்லன் என்று அறுதியிட்டு தாமும் ஒரு ஆற்றுப்படை உரைக்கின்றார் நம் கலியன் நமக்கு. 

Here are some photos of the great benefactor Emperuman Sriman Narayana – the Lord who ensured victory for the good over evil at Gurukshetra – the charioteer of Arjuna – Sri Parthasarathi taken on day 6 of Special brahmothsavam at Thiruvallikkeni on the morning of 8th Feb 2021.  Let us fall at the lotus feet of Sri Parthasarathi Perumal, praying for the welfare of the humanity, praying that Corona shall end sooner and all of us live happily doing kainkaryams at His feet in the divine land of Thiruvallikkeni. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
6
th June 2021 

பாசுர விளக்கம் : ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி - ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம்.











No comments:

Post a Comment