To search this blog

Saturday, June 12, 2021

worshipping Sriman Narayana at Vridha Badri (Pancha Badri yatra)

நமது திவ்யப்ப்ரபந்தம் - திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழியுடன் துவங்குகிறது.  இது  பிள்ளைத்தமிழ்  எனும்  இலக்கிய வடிவில் உள்ளது.  கண்ணபிரான் பிறந்தது, காப்பு,  செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, அம்புலி, காது குத்த அழைத்தல், மலர்களால் அலங்கரித்தல், நீராட்டு என பல பருவங்களில் கண்ணனை, பெரியாழ்வார் சீராட்டுகிறார்.   கண்ணன் திருவவதாரச் சிறப்பை கொண்டாடும்   இப்பாசுரங்களில்    'புனித கங்கையின்' பெருமையும் சொல்லப்படுகிறது !   கலியனோ தமது திருமொழி பாசுரத்தில் ஸ்ரீராமபிரானே இங்கு எழுந்து அருளியுள்ளதாக ஆனந்திக்கின்றார்.

இமயமலை பனி படர்ந்தது.  பொதுவாகவே மலைகள் மீது ஏறிச்சென்று வழிபடுதல் கடினம்.  திருமங்கை மன்னனோ - திருவதரி பாசுரங்களில் - அங்கே செல்வது மிக கடினம் என்பதை தெளிவுபடுத்துகிறார்.  

           உறிகள்போல்  மெய்ந்நரம்பெழுந்து ஊன் தளர்ந்துள்ளமெள்கி .. … …. …..

~ சரீரத்திலுள்ள நரம்புகள், வயோதிகத்தில் புடைத்து, உறிகள் போல்   வெளியே தோன்றி  - உடலில் சதை கட்டுக்குலைந்து, வலிமையின்மையால் உள்ள உறுதியும் குலையும் காலமும் வருமுன்பேயே வதரியாசிரமம்  சென்று வணங்க வேண்டும் என்கிறார் கலியன்.  நாம் பாவங்கள் நிறைய செய்கிறோம் !  ~  இந்த பிறவியிலும், அதற்க்கு முந்தைய பிறவிகளிலும் தெரிந்தும், தெரியாமலும்  சேர்ந்து திரண்ட பாவங்களை யெல்லாம் எப்படி போக்குவது ? - பெரியாழ்வார் நமக்கு வழி காட்டுகிறார்.

 

The story of Yayati  is mentioned in Bhagavata Puranam as also in Maha Baratham. Yayati,  the son of king Nahusha,  one of ancestors of Pandavas. He ruled over this place.  It is here that the most important rivers of the Nation ~ the Ganges and Yamuna originate. It has the religiously most significant places of Badrinath and Kedarnath.   It is Uttarakhand known  "Land of the Gods" due to the many holy Hindu temples and pilgrimage centres.   This became a State in Nov 1999. The state is divided into two divisions, Garhwal and Kumaon, with a total of 13 districts. The provisional capital of Uttarakhand is Dehradun, the largest city in the region, which is a railhead.  These places were affected so badly due to flash floods and cloud bursts in 2012.  With pilgrims and tourists stranded in flash floods in Uttarakahand, Govts  rushed teams to the hill state to help bring back the affected persons and also announced aid. Good administration by the Central & State ensured that the holy places  recovered so well now. 

ஸ்ரீராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில்  பஞ்சவடியில்  சீதாபிராட்டி தங்க மானை பார்த்து ஆசைப்பட, ஸ்ரீராமபிரான்  மாயமானாக வந்த மாரீசன் பின் சென்றார்.   இலக்குவணன் -  “இது மாரீசனுடைய மாயை' என்ற போதிலும், சீதையின் ஆணைக்கு கட்டுப்பட்டு அவரும் அதன் பின் ஏகினார்.  திருமங்கை மன்னன் இந்த த்ருஷ்டாந்தத்தை வதரிகாச்ரமம் திவ்யதேச பாசுரத்தில் உரைக்கின்றார்.  கம்பர் தனது இராமாயணத்தில் இதையே :

நெற்றிப் பிறையாள்;      முனம் நின்றிடலும்*,

முற்றிப் பொழி;      காதலின் முந்துறுவாள்,

'பற்றித் தருக என்பென்';      எனப் பதையா,

வெற்றிச் சிலை -      வீரனை மேவினளால் !!  என உரைக்கிறார்.

 

இளம் பிறை போலும் நெற்றியை உடைய சீதை முன் மிக அழகான மாய மான் வந்து நிற்கவும்;  நிறைந்த ஆசை ததும்பி - அம்மானை  'பற்றித் தருக என இராமனை கேட்க, 'வில்லால் வெற்றி கொள்ளும் வீரனாகிய இராமன் அதன் பின் தொடர்ந்தான்.  மண்ணிலும் சரி விண்ணிலும் சரி தனக்கு ஒப்புமையில்லாத ஒர் பொன்மான் உருக்கொண்டு சீதையை நாடி இராமன் இருந்த காடு சென்றான் மாரீசன்.

 

கானிடையுருவைச் சுடுசரம் துரந்து கண்டுமுன்  கொடுந்தொழிலுரவோன்,

ஊனுடையகலத்தடுகணை குளிப்ப  உயிர்க் கவர்ந்துகந்த வெம்மொருவன்,

தேனுடைக்கமலத்து  அயனொடு தேவர் சென்று சென்றிறைஞ்சிட, பெருகு

வானிடை முதுநீர்க்கங்கையின்  கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.

 


மரங்களும் கொடிய காட்டு மிருகங்களும் அடர்ந்த வனத்தில்  மாரீசனாகிய  மாய மானை கண்ணெதிரில் பார்த்து,  அதன் பின்னே சென்று அந்த மிருகத்தின் மேல்  தீக்ஷ்ணமான பாணத்தைப் பிரயோகித்தவனும்  கொடுமையான தொழிலையுடையவனாய் பலசாலியான வாலியினுடைய மாம்ஸமான மார்விலே தனது தீக்ஷ்ணயமான பாணத்தை அழுத்தி அவனது உயிரை அபஹரித்து சுக்ரீவனுக்கு மற்றைய வானவர்களுக்கு வாழ்வும் மகிஷ்ச்சியும் அளித்த  அதீத சௌந்தர்ய விலக்ஷணனான அஸ்மத்ஸ்வாமி  தேனையுடைய திருநாபிக்கமலத்தில் பிறந்த பிரமனோடு கூட மற்றுமுள்ள தேவர்களும் பலகால் வந்து வணங்கப் பெற்றதும்  பெருகுகின்ற புராதனமாக ஆகாசகங்கைக் கரைமீது உள்ளதுமான ஸ்ரீபதரிகாச்ரமத்திலே எழுந்தருளியிருக்கிறான் என மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கை மன்னன் தமது திருமொழி பாசுரத்திலே .

It perhaps is the ultimate dream of a Srivaishnavaite – darshan at the most holy Sri Badrinath.  It is not easy even in the modern World.  As we travelled, the bus would stop – one would find hundreds of vehicle in a line  (mostly disciplined !) – the gorges on the mountain would offer a very pleasant at the same time a fearsome view !  One could see river flowing all the way – yet the vehicle passing on a ridge could evoke fear.  At many cross-points only one vehicle can go – so vehicles would stop for an hour or so. Then traffic would flow from one side – then from the waiting side.  One could see bolsters falling down; they might fall on the vehicles, at times they would close the road.  Army and Govt agencies would work effectively clearing the debris – everyone will have to wait.  .. .. and if it were to rain, the work could be hampered, vehicles would have to remain as they are – at times they would return back to the nearest city and continue the next day.  

The fortunate ones cross this difficult terrain and chilly weather – reach the abode of God, have great darshan.  When we started back and 45 mins travelling hit road block, falling rocks – had to wait for an hour or so – it became too cloudy and had to abandon the return journey. Returned back to the holy Badrinath – the evening looked like night – the cold was not bearable – that offered another opportunity for worshipping at the temple ! 

Apart from the mesmerizing holy Badrinath main temple, there are more places to be worshipped. 

Sapta Badri constitutes a group of seven sacred temples of Sriman Narayana   located in Garhwal Himalayas in the Indian state of Uttarakhand. The Badrinath temple, called the Badri Vishal (altitude 3,133 m (10,279 ft)) is the primary temple among the seven shrines. The other six being Adi Badri, Bhavishya Badri, Yogadhayan Badri, Vriddha Badri, Ardha Badri and Dhyan Badri.  There is also another classification of ‘Pancha Badri temple circuit’ comprising of  five temples, omitting Ardha Badri and usually Dhyan Badri (or sometimes Vriddha Badri).   Since the early times, approach to the main temple of Badrinath was only along a bridle path passing through badri van (forest of berries). Thus, the word "Badri", meaning "berries", is suffixed to the names of all the Sapta Badri (seven) temples.

The main shrine of Badrinath is closed during the winter season due to snow conditions, from October–November to April–May depending on the astrological dates fixed by the Temple Committee; the Raj Purohit (Royal priest) decides the auspicious day for opening the temple kapat (doors) on Vasant Panchami day in end of April/early May while the closing day is Vijayadashami day in October/November. The other six temples are located in villages, largely in remote locations.  

On the way to ‘Jai bolo Badrinath’ is the beautiful Devaprayag.   Devaprayagai is divyadesam ‘Kandam enum Kadinagar’ and next is ‘Thirupiruthi, Thirupriti – Thiru pireethi’ – aka Joshimut.  Joshimath, also known as Jyotirmath, is a city and a municipal board in Chamoli District in  the  state of Uttarakhand.   It is home to one of the four cardinal pīthas established by Adi Shankara. Joshimath is nestled in the Himalayas at a height of 6150 feet above sea level, enroute to Badrinath from Rishikesh.   On the way one crosses Sri Nagar, which is a relatively bigger city with facilities. 

Vridha Badri is located at Animath in Chamoli district of Uttarakhand. The Vridha Badri temple dates back to the times when it India was ruled by the Gupta Dynasty.  Vridha Badri holds a very high significance and the name  is derived from the form of an old man in which Sriman Narayana  is worshiped here. It is situated ahead of the Kalpeshwar Mahadev Temple, ahead of Helang. The elevation of Vridha Badri is of 1,380m in Animath.
Sage Naradha muni did penance here praying for Sriman Narayana and pleased with his penance, Emperuman appeared in the form of an elderly person and answered the penance of Naradha.  The idol here at this holy temple was made   by the divine craftsman Vishwakarma and was worshiped here.  Adi Shankaracharya too worshipped here.   found a partially damaged statue in Narada Kund and installed it in the Main  The temple is open all year round. Here are couple of videos – the first the Purohit of the temple talking about the temple and the second an overview of the temple taken by me.https://youtu.be/MsGZ4l3wKHM  &  https://youtu.be/DsBCDlNVS1s

One has to get down a few steps and walk for a shortwhile (say 10 mins) to reach this beautiful small temple on the hill – one can similarly walk a few more steps to descend to the motorable road.  At the time of our visit, the main Purohit and his wife were taking care of this temple so well – and there was a beautiful nandavanam with flowers and vegetables. The priest lives a life in isolation and stated that wild animals including bears would visit once a while.

On 5.10.2019 had the fortune of worshipping at this place.  Here are some photos & video of the place, Temple and Perumal. It is exceptionally divine and pleasant to have darshan at such holy places where many sages, our Purva Acaryas and sampradhayic elders have visited and offered submission to the Lord.

Pray that Emperuman provides another opportunity in life, to visit these holy places again.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
12th June 2021. 

Badri Yatra : The tour was well organized by Thirumayilai Seshadri @ 9677126311; Thiru Karnataka BR Raghavan Vadhyar Swami @ 9840562920; Govindarajan Mamandur (Tour Operator)  @ 9042963544 


1 comment: