To search this blog

Tuesday, January 19, 2021

Thiruvallikkeni Thelliya Singar Thai Swathi purappadu 2021~ பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான்


** மணிக்கதவம் தாழ் திறவாய் !** ~ the ill-effect of Corona - from Mar 20, 2020 till Jan6 2021 - the gopura vasal of Sri Azhagiya Singar at Thiruvallikkeni divyadesam remained closed. Happy for the devotees - it is fully open now and  on Margazhi Swathi day -  Sri Azhagiya Singar had Swathi purappadu coming out of this gate





மார்கழி 24 - ஜனவரி 8ம் தேதி 2021  வெள்ளிக்கிழமை தை ஸ்வாதி ~ அன்று திருவல்லிக்கேணியினிலே தெள்ளியசிங்கப்பெருமாள் கோபுர வாசலில் திரளான பக்தர்கள் குவிந்து இருந்தனர். இயல்புக்கு மாறாக சற்று வித்தியாசமான மனா ஓட்டம் இருந்தது.  ஆம். கிட்டத்தட்ட  பத்து மாதங்களுக்கு மேலாக மூடியிருந்த மேற்கு வாசல் இன்று முதல் திறப்பு.  திருப்பாவையில் 'மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் ' !!:  விழித்து எழுந்து வீறுநடை போடுவதை ஆண்டாள் விவரித்தது போலே  ஸ்ரீ அழகியசிங்கர் மார்கழி ஸ்வாதியில் திருவீதி புறப்பாடு கண்டு அருளினார். 

When will the Covid end and when will the World step back to normalcy were the Questions uppermost in the minds of people for almost an year now !!  Physicians, nurses, researchers, medical staff, volunteers and countless others have been battling the COVID-19 pandemic on the frontlines for months. Now, with the COVID-19 vaccine starting to be distributed to eligible groups, the community is one step closer to seeing an eventual end to the pandemic.  We are indebted and express our thanks and gratitude to all of them as also the Government of India, our respected Prime Minister for those right steps, for hard work, sacrifice and dedication that it took to get this point of vaccine distribution.

The word gratitude is derived from the Latin word gratia, which means grace, graciousness, or gratefulness (depending on the context). In some ways gratitude encompasses all of these meanings. Gratitude is a thankful appreciation for what an individual receives, whether tangible or intangible. With gratitude, people acknowledge the goodness in their lives. In the process, people usually recognize that the source of that goodness lies at least partially outside themselves. As a result, gratitude also helps people connect to something larger than themselves as individuals — whether to other people, nature, or a higher power.

In positive psychology research, gratitude is strongly and consistently associated with greater happiness. Gratitude helps people feel more positive emotions, relish good experiences, improve their health, deal with adversity, and build strong relationships. Gratitude opens the door to more relationships. Not only does saying “thank you” constitute good manners, but showing appreciation can help  win new friends. For years, research has shown gratitude not only reduces stress, but it may also play a major role in overcoming trauma.





Swami Nammalwar feels indebted and expressed his gratitude to all those – who fall at and uphold the feet of those bagavathas who are indebted, surrendered to and holding the feet of Sriman Narayana.  Here is a pasuram from Thiruvaimozhi.

ஸ்வாமி நம்மாழ்வார் -  எம்பெருமானுடைய தோளும் தோள்மாலையுமான அழகிலே தோற்றவர்களான பாகவதர்களுக்கும் பக்தராயுள்ளவர்கள் எனக்கு ஸ்வாமிகளென்கிறார். நாதன் என்பதற்கு யாசிக்கப்படுபவன் என்றும் யாசிப்பவன் என்றும் ‘இருவகையாகவும் பொருள் கொள்ள வியாகரண சாஸ்த்ரம் இடந்தரும்.  தெள்ளியசிங்கர் கம்பீரம், அழகு, ஸ்வரூபலாவண்யமயமானவர்.  அன்று ஊதா பட்டு,  ஆரஞ்சு நிற மேல் கபாயம், மிக நேர்த்தியான பனிக்குல்லா என உள்ளம் கவர்ந்தார். 

இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத திருவாய்மொழி பாசுரம் : 

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்

போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்

பாதம் பணிய  வல்லாரைப் பணியுமவர்  கண்டீர்

ஓதும் பிறப்பிடை தோறு  எம்மை ஆளுடையார்களே.

தலைவனும், பூமியும் தெய்வ உலகமும் ஏத்துகிற வாசனை பொருந்திய திருத்துழாய் மலரைத் தரித்தவனும், அழகிய நீண்ட சக்கரத்தையுடைய எந்தையும், எல்லார்க்கும் உபகாரகனுமான எம்பெருமானுடைய பாதங்களை வணங்குகின்ற அடியார்களை வணங்குகின்ற அடியார்கள்தாம் சொல்லப்படுகின்ற பிறப்புகளில் எல்லாம் எம்மை அடிமை கொண்டவர்கள் ஆவார்கள்,’ என்கிறார் - சடகோபன் இந்த பாசுரத்தில்.

Here are some photos of Thai Swathi purappadu of Sri Azhagiya Singar at Thiruvallikkeni on 8.1.2021

Adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
19.1.2021

















1 comment: