பக்தி காவியங்களிலே திருப்பாவை ஒரு உயர்ந்த இடத்தைக்கொண்டது. ஸ்ரீமன் நாராயணனிடத்திலே அபரிமிதமான காதல், மிக அழகான சொல்லாடல், எளிய நடை, ஒரே தடவை படித்தவுடன் புரியக்கூடிய அர்த்தம் எனினும் பல்லாயிரக்கணக்கான வியாக்கியானங்கள் ~ எல்லாம் கோதைப்பிராட்டியின் திருப்பாவைக்கே உரியன.
ஆண்டாள்
நீராட்ட உத்சவத்தில் நான்காம் நாள் இன்று
(8.1.2021) .. திருப்பாவையில், இன்றைய நாள் பாசுரம் = “அன்று இவ்வுலகம்
அளந்தாய்! அடி போற்றி!” !!
In the debate
of Science Vs Religion – non-believers often try to present themselves as most
rational but forget the fact that Science evolves, changes and presents itself
anew – right from the shape of the World, planets, Universe, on treating
disease, there have been varied views – and every discovery seemingly disproves
and pushes out the firmly held theories – then is religious belief a myth or
Science too !!
Earth is part
of Milkyway Galaxy - The Milky Way contains hundreds of billions of stars like
our sun. (and like our sun, most of these stars have at least one planet
orbiting them.) Earth is located about halfway between the center of the Milky
Way and its outer edge. Given the size of the universe - there are
at least 100 billion stars in our home galaxy alone and perhaps 100 billion
galaxies of much the same size scattered throughout deep space - few scientists believe that the Earth is not the only home of life. But until quite
recently, the field of exobiology - the study of extraterrestrial life also
known as astrobiology - was almost moribund. It could come up with some
interesting speculations but that was about all.
A former Israeli space
security chief recently sent eyebrows
shooting heavenward by saying that earthlings have been in contact with
extraterrestrials from a "galactic federation." "The
Unidentified Flying Objects have asked not to publish that they are here,
humanity is not ready yet," Haim Eshed, former head of Israel's Defense
Ministry's space directorate, told Israel's Yediot Aharonot newspaper.
Is mankind
alone in the universe? Or are there somewhere other intelligent beings looking
up into their night sky from very different worlds and asking the same kind of
question? Are there civilizations more advanced than ours,
civilizations that have achieved interstellar communication and have
established a network of linked societies throughout our galaxy? Such
questions, bearing on the deepest problems of the nature and destiny of
mankind, were long the exclusive province of theology and speculative fiction. Since
intelligence and technology have a high survival value it seems likely that
primitive life forms are there elsewhere too.
Harvard astrophysicist Avi
Loeb says he has found good evidence for alien technology in the solar system,
what could be called alien garbage, and that some other scientists don't take
his ideas seriously because of "groupthink." In his new book
"Extraterrestrial: The First Sign of Intelligent Life Beyond Earth",
set to be published Jan. 26, Loeb describes his journey to a radical position
on the strange interstellar visitor that’s been dubbed 'Oumuamua — a
disc-shaped object that whizzed through our solar system in 2017. When
'Oumuamua flashed through the sun's neighborhood in 2017, scientists didn't get
a very good look at it, as it moved through so quickly. Loeb
published a paper in 2018 arguing that the data showed an object unlikely to
exist in nature: a wide, super-thin disk being pushed by sunlight and moving 16
miles per second (26 kilometers per second) through interstellar space relative
to the sun. The solar system, according to Loeb, was possibly being visited by
an alien light sail — possibly one that had been thrown out like technological
trash by an intelligent alien civilization.
In our Ithihasa
puranas, there are so many wide oriented concepts that have proven to be true
by Scientific research over the years.
In good times and in tough times, let us fall at the merciful feet of
Lord Sriman Narayana and pray to Him to give us the strength, good heart, good
thinking and all goodness in the manner Andal prayed for the welfare of the
Universe through her verses in Thiruppavai which are gleefully sung in this month
of Margazhi.
முந்தைய
பாசுரத்தில் சீரிய சிங்காதனத்தில் அமர்ந்து யாம் வந்த காரியத்தை ஆராயவேண்டும் என்று
கேட்ட ஆண்டாள், அன்றும் இன்றும் என்றென்றும் என்று முக்காலத்தையும் இப்பாசுரத்திலே
அடக்கி விட்டாள். ஆண்டாள் நாச்சியார் இந்த
பாடலில் கோபியர்கள் கண்ணன் மேல் வைத்திருக்கும் வாத்சல்யமும், பரம பக்தியும், அவர்கள்
'பல்லாண்டு' பாடுவதில் வெளிப்படுகின்றன. எம்பெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் பெண்பிள்ளையான
கோதைப்பிராட்டி மணிமண்டபத்தில் சிம்மாசனத்தில்
கம்பீரமாக வீற்றிருக்கும் கண்ணபிரானுக்கு பக்திப் பரவசமாக மங்களாசாசனம் செய்கிறாள்! இப்பாடலில் எம்பெருமானை பல்வேறாக 'போற்றுகிறாள்". - “அடிபோற்றி, திறல்போற்றி, புகழ்போற்றி, கழல்போற்றி, குணம்போற்றி,
வேல்போற்றி!” என்று நாவினால் பாடி
மனத்தினால் சிந்திக்கின்றாள்.
அன்று
இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி!
சென்று
அங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!
பொன்றக்
சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று
குணிலா எறிந்தாய்! கழல் போற்றி!
குன்று
குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று
பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்று
என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று
யாம் வந்தோம் இரங்கு — ஏலோர் எம்பாவாய்.
இப்பாசுரத்திலே ஸ்ரீமன் நாரணனின் அவதார மகிமைகளையும், சிறப்புகளையும் சிலாகிக்கிறார். இந்திரன் முதலானவர்கள் மஹாபலியால் கஷ்டப்பட்ட அக்காலத்திலே எம்பெருமான் தனது இரண்டடியாலே லோகங்களை அளந்த பிரபாவம்; பிராட்டியைக் களவுசெய்த இராவணனிருக்குமிடத்தில் கன்றாய் நின்ற ஒரு அஸுரனை (வத்ஸாஸுரனை,) எறிதடியாக் கொண்டு எறிந்தது; கபித்தாஸுரன் மீது எறிந்தருளியது; இந்திரா விழவில் ஆயர்களை பெருமழையில் இருந்து காக்க கோவர்த்தனகிரியை குடையாக எடுத்தது; ஆநிரைகளையும் அவற்றை மேய்ப்போரையும் கைப்பற்றியது; சகடாஸுரன் ஆயுள் முடியும்படி உதைத்தது என பல வைபவங்களை செய்த கண்ணபிரானது : கீர்த்தியானது போற்றி ! ; அவர்தம் திருக்கரங்களிலே பொருந்திய வேல் போற்றி !; என்றிப்படிப் பலவாறாக மங்களாசாஸநம் பண்ணிக்கொண்டு, உந்தமையே புகழ்ந்து பாட வந்த அடியோங்களுக்கு பறை தர வேண்டும் என விழைகிறார் ஆண்டாள்.
Here is a
photo of Lord Parthasarathi as Govardhanagiri dhari (குன்று குடையாய் எடுத்தாய்) (earlier year Irapathu photo) and photos of Sri Andal Neeratta Uthsava (day
4) purappadu at Thiruvallikkeni this morning.
The purappadu now takes around 15 minutes only and devotees along the
mada veethis feel immensely happy in being able to worship.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
8.1.2021.
No comments:
Post a Comment