To search this blog

Saturday, January 2, 2021

Thiruchengannur Thiruchirraru divyadesam : திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரையானை,

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் நீராடிச்செல்வார்கள்.  பம்பை ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்சமலைப்பகுதியில் உற்பத்தியாகிறது. ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களின் வழியே பாயும் இந்த ஆறு இறுதியாக வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது. சுமார் 176 கி.மீ பாய்ந்து கேரளத்தை செழிப்பாக்கும் இந்த நதி புராண வரலாற்றில் மிகப்பெரிய இடத்தினைப் பெற்றுள்ளது.  ஸ்வாமி நம்மாழ்வார் - திருச்சிற்றாறு எனும் நதி தீரத்தில் உள்ள இமயவரப்பர் எனும் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்.  இராப்பத்து  உத்சவத்தில் எட்டாம்  நாள் திருவாய்மொழி எட்டாம் பத்து  சேவிக்கப்பெறுகின்றது.  திருசெங்கன்னூர் திருச்சிற்றாற்றரங்கரையின் மீபால் நின்ற எம்பெருமான் என நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமாள் பற்றிய விஷயங்கள் இன்று.

 On Makara Sankaranthi day, millions of devotees would have darshan of Swami Aiyappan at Sabarimala.  Those travelling by train would get down at Chengannur or Chengannassery.  They would take bath in holy Pamba river,   third longest river in  Kerala after Periyaru and Bharathappuzha and the longest river in the erstwhile former princely state of Travancore. Sabarimala temple   is located on the banks of the river Pamba.  The river is also known as 'Dakshina Bhageerathi'. During ancient times it was called 'River Baris'.  The River Pamba enriches the lands of Pathanamthitta District and the Kuttanad area of Alappuzha District and few areas of Kottayam  .. .. on its banks is located Thiruvaranvilai divyadesam (Aramula) and on the banks of ‘thiruchitraru’ is located another divyadesam – “Thiruchengannur’ sung by Swami Nammalwar.
                  Chera dynasty popularly ruled South India in an era whence Cholas, Pandyas and Pallavas too were the rulers.   Cheras ruled from Kerala and the Chera country was geographically well placed to profit from maritime trade via the extensive Indian Ocean networks. Exchange of spices, especially black pepper, with Middle Eastern and Graeco-Roman merchants are attested in several sources.   

Changanassery is a municipal town in Kottayam district in the state of Kerala.  Changanassery is the gateway to the Western Ghats and Kuttanad. It is one of the major educational   centres of Kerala, with nearly 100% literacy. The first recorded history on the origin of Changanacherry is obtained from Sangam period literature. According to Sangam era documents, Uthiyan Cheralathan (Perum Chorru Udiyan Cheralathan, Athan I, or Udiyanjeral - AD c. 130) is the first recorded Chera dynasty ruler.   He had his capital at a place called "Kuzhumur" in Kuttanad and expanded the kingdom northward and eastward from his original homeland.   Nearer lies – Chengannoor, a  municipal town   located in the extreme eastern part of the Alappuzha district, on the banks of Pamba River.  Chengannur is 117 kilometres (73 mi) north of the state capital Thiruvananthapuram on the MC Road (State Highway 1). Chengannur is connected to Kollam and Kottayam by NH 220.

Sriveli at Chengannur Mahadeva temple

Chengannur is famous  for the Chengannur Mahadeva Temple as also the Srivaishnavaite shrine of Imayavarappan thirukovil.  The taluk comprises villages such as Kurattissery, Mannar, Ennakkad, Pandanad, Thiruvanvandoor, Chengannur, Mulakuzha, Ala, Puliyoor, Cheriyanad, Budhanoor and Venmony. The name Chengannur (chen - kunnu- ur/noor) is derived from the words 'Che' (Malayalam) which means red soil 'kunnu' (Malayalam) means hill and 'ur/oor' (Malayalam) that means land. Land of red hills ... Almost all those red hills are gone now due to excessive soil mining for land filling. This red soil is different from the soil of surrounding taluk of mavelikara & Kuttanad. In early modern period, Chengannur was a part of Kayamkulam dynasty and which later came under Travancore kings when Kayamkulam was ceded by Marthandavarma in the 18th century.  Pepper, popularly known as "black gold", was a major export item of Chengannur.   

Of the 108 Divyadesams sung by Azhwaars and reverred by Sri Vaishnavaties, 13 are situated in Kerala and known as “Malai Nattu Divyadesangal” –  the one of the day is around 120 kilometers away from Thiruvananthapuram on way to Cochin and as you travel from Chennai – after Ernakulam, comes Thirupunithura, Kottayam, Chenganacheri, Thiruvalla – then the Railway Station of Chenganoor.  In fact one can have darshan of Divyadesams – Thiruchenganur, Kuttanattu Thirupuliyur, Thirukodithanam, Thiruvaranvila, Thiruvanvandur and Thiruvallavazh in a day by staying in Chenganur / Chenganassery / Thiruvalla.  

கேரளாவில் உள்ள செங்கன்னூர் ஒரு பிரசித்த பெற்ற ரயில் நிலையம். சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கே இறங்குவர்.   இதிகாசம் மஹாபாரதத்துடன் தொடர்புள்ள ஊரிது  !  பாரதப்போர் முடிந்தவுடன் தனது குரு மரணத்துக்கு காரணம் ஆனதை நினைத்து வருத்திய தர்மர் தனது சகோதரர்களுடன் இங்கே வழிபடு செய்தார்.  தேவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி ஸ்ரீமந்நாரணனை  நினைத்து பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு அதே இடத்தில் எம்பெருமான் காட்சியளித்து அருளினார். இந்தப் பெருமையுடன் பாண்டவர்களில் ஒருவரான தருமர் புதுப்பித்து வழிபட்ட கோவில் என்கிற சிறப்பும் பெற்ற கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செங்கண்ணூர் அருகே உள்ள திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) விஷ்ணு கோவில்.

 மகாபாரதப் போர் நிறைவடைந்ததற்குப் பின்பு,  கேரளப்பகுதிக்கு  தனது சகோதரர்களுடன் வந்த தர்மர் இங்கிருந்த  பழமையான வைணவக்கோவிலில் வணங்கினார்; இத்திருத்தலத்தை  புனருத்தாரணம் செய்தார் என்று இந்தக் கோவிலின் தல வரலாறு தெரிவிக்கிறது. இத்தல எம்பெருமானான  இமையவரப்பன் மேற்கு நோக்கி, நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் இருக்கிறார். வலதுபுறத்தில் இருக்கும் இரு கரங்களில் ஒன்றில், சக்கரமும், மற்றொன்றில் செந்தாமரை மலரும் வைத்திருக்கிறார். இடது புறத்தில் இருக்கும் கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் தரையில் ஊன்றிய கதாயுதத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார். இங்கிருக்கும் தாயார், ‘செங்கமலவல்லி’ என்றழைக்கப்படுகிறார். கோவில் வளாகத்தில் கோசால கிருஷ்ணன், தருமசாஸ்தா ஆகியோருக்கும் தனிச்சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தலவிருட்சமாக ஆலமரம் இருக்கிறது. கோவிலுக்குச் செல்லும் பாதையில் வலதுபுறம் ‘சங்குதீர்த்தம்’ என்ற தீர்த்தக்குளம் உள்ளது.  

திருச்சிற்றாறு ஆற்றின் கரையில் அமைந் திருக்கும் இந்த ஆலயத்தில், ஸ்ரீமன் நாராயணனுக்கான அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி, மீனம் (பங்குனி) மாதம் ஹஸ்தம் நட்சத்திர நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கி, திருவோணம் நட்சத்திர நாளில் ‘ஆறாட்டு’வுடன் நிறைவடையும் முதன்மை விழா (பிரம்மோற்சவம்) பத்து நாட்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதே போன்று, சிங்ஙம் (ஆவணி) மாதம் அஷ்டமி ரோகிணி நாளில் தொடங்கிப் பத்து நாட்கள் வரை தசாவதாரப் பெருவிழாவும் நடைபெறுகிறது.   இவ்விழா நாட்களில் சாக்கியார் கூத்து, கொடியாட்டம் உள்ளிட்ட மலையாள மரபு வழி நடனங்கள் இடம் பெறுகின்றன.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.  நம்மாழ்வார் பாடிய பாசுரத்தில் ‘திருச்செங்குன்றூர்’ என்று அழைக்கப்படும் இத்தலம், இக்கோவிலின் அருகே ஓடும் சிற்றாறுவின் பெயரால் ‘திருச்சிற்றாறு’ என்று அழைக்கப்படுகிறது.  

இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் ஒரு பாசுரம் :  (திருவாய்மொழி 8ம் பத்து 4ஆம் திருவாய்மொழி)

 

திகழவென் சிந்தையுள்ளிருந்தானைச்  செழுநிலத்தேவர்  நான்மறையோர்,

திசைகைகூப்பி ஏத்தும்  திருச்செங்குன்றூரில்   திருச்சிற்றாற்றங்கரையானை,

புகர்கொள்  வானவர்கள் புகலிடந் தன்னை அசுரர்  வன்கையர்  வெங்கூற்றை,

புகழுமாறறியேன்  பொருந்து மூவுலகும் படைப்பொடு கெடுப்புக்காப்பவனே.

 

என்னெஞ்சினுள்ளே  எப்பொழுதும் சிறப்பாய்  விளங்கிக்  கொண்டிருப்பவனும்,  நான்கு வேதங்களையும்    ஓதின விலக்ஷண ப்ராஹமணர்கள் திசைகள் தோறும் நின்று கைகூப்பித் துதிக்கும்படியான திருச்சிற்றாற்றுப் பதியிலுள்ளவனும் சிறந்த தேவர்களுக்கும் புகலிடமாயிருப்பவனும் மிடுக்கரான அசுரர்களுக்கு வெவ்விய யமன் போன்றவனும்  தன்னோடு பொருந்திய மூவுலகத்தினுடையவும் ஸ்ருஷ்டி ப்ரளய ரக்ஷணங்களுக்குக் கடவனுமான பெருமானை புகழும் விதம் இன்னதென்று அறிகின்றிலேன் என இம்யவரப்பனை புகழ்கின்றார் நம்மாழ்வார்.

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
2.1.2021

பாசுர விளக்கம் :  கட்டற்ற சம்பிரதாய களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.

Chengannur Thiruchirraru Goshala Krishnan sannathi

2 comments:

  1. Very nice.அழகிய போட்டோக்களோடு சம்பந்தப்பட்ட புராண, சரித்திர,பூகோள செய்திகள் மிகவும் சுவையாக உள்ளது.

    ReplyDelete
  2. மிக அற்புதமான பதிவு. விரிவான தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete