To search this blog

Friday, November 26, 2021

famed Kairavini Pushkarini @ Thiruvallikkeni after rains today !

கைரவிணி  புஷ்கரிணி   - திருவல்லிக்கேணி திருக்கோவிலின்   இந்த திருக்குளம் மிக புனிதமானது.  இப்பொய்கையை கண்டாலே ஆனந்தம் மிகுந்து, தீவினைகள் எல்லாம் அகலும். பருகிலினாலே மிக பேறு  கிட்டும்; குடைந்தாடுவோர்க்கு மறு பிறவியே கிடையாதாம் ! - அவ்வளவு சிறப்பு பெற்றது இந்த குளம்.  திருவல்லிக்கேணி என்ற பெயர்க்காரணம் ஆன  தடாகை.  கைரவம் என்றால் செவ்வல்லி - ஆம்பல் வகை பூவினம். இந்த தடாகத்தில் செவ்வல்லி மண்டி நீரை மறைத்து இருந்து வந்தது. 

The tank of Sri Parthasarathi Swami is famous ~ it is  ‘Kairavini Pushkarini’… the pond of Lily – ‘allikkeni’ from which the place itself derives its name .. .. today’s incessant rains have  added loads of water and here is a look of the beautiful pushkarini and a close-up of the neerazhi mantapam.  


திருவல்லிக்கேணி பெயர் அமையக் காரணமானது  திருக்கோவில் குளம் - கைரவிணி  புஷ்கரிணியில் இருந்து.   நம் பகவத் ராமானுஜர் பிறக்க சோமயாஜி வேண்டி தவம் இருந்த குளம் இது.  இதன் மையத்தில் சிறிய அழகான 'நீராழி மண்டபம்' உள்ளது.  தண்ணீர் தளும்பும் நாட்களில் இதனுடைய கீழ் படிக்கட்டுகள் தெரியாது.    

adiyen Srinivasadhasan – S. Sampathkumar
26.11.2021 @ 18.30 hrs. 

Thursday, November 25, 2021

Lifco Vijayasarathi is no more !!

From my childhood, I have been a great fan of Lifco dictionaries !

புஸ்தகங்கள் அரிய பொக்கிஷங்கள்.  .... .,.மனிதனை நல்வழிப்படுத்த வல்லன. இந்த நிறுவனம் புத்தகங்களின் மூலம் சம்பிரதாயத்தை வளர்த்து வரும் நிறுவனம்   ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவ இல்லத்திலும் இவர்கள் வெளியீடு நிச்சயம் இருக்கும்.  இன்றும் உபநயனம் என்றால் இவர்களது "ஸ்ரீவைஷ்ணவ சந்தியாவந்தனம்" (வழிமுறை படங்களுடன்) நூலும், இல்லத்து கல்யாணங்களில், "சகல காரிய சித்தியும் - ஸ்ரீமத் ராமாயண பாராயணமும் - ஸ்ரீமத் திராவிட வேதங்களும் (ஸ்தோத்ர மாலையுடன்) நூலும் பலர் பரிசாக வழங்குவர். 

இந்த பதிவை மிகுந்த  வருத்தத்துடன் இடுகிறேன். !!

லிஃப்கோ நிறுவனத்துக்கு புதிதாக முன்னுரை தேவையில்லை.  ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி சர்மா அவர்கள் 1929-ல் தொடங்கிய ‘லிப்கோ’ என்ற ‘லிட்டில் ப்ளவர் கம்பெனி’ பல அரிய நூல்களை வெளியிட்டுத் தமிழ் நாட்டுக்குச் சேவை செய்துவருகிறது.   மக்களிடையே நல்ல இயல்புகளையும், அமைதியான வாழ்க்கை முறைக்கேற்ற மனப்பக்குவத்தையும் உருவாக்கி வளர்க்கக்கூடிய ஏராளமான நூல்களைக் குறைந்த விலையில் லிப்கோ வெளியிட்டு வருகிறது.  மிக எளிய முறை விளக்கங்களும், சம்பிரதாய செய்முறைகளை விளக்கப்பட்டு தலைமுறையினருக்கு சென்றடைய செய்வதில் இந்நிறுவனத்தின் பங்கு அளப்பரியது.

Web searches reveal :  Lifco Publishers Private Limited as a Private Company Company, registered with Registrar of Companies, Chennai on 11-06-2008. It has two directors Mrs Radha Vijayasarathy & Mr Thirumalai Nallan Chakravarthi Vijayasarathi.   

               About a century ago, in 1920s, when literacy levels were not high, a man hailing from a conservative family in Cuddalore with encouragement from his school principal printed books and supplied them widely. Thus was born The Little Flower Company or Lifco, which is 100+ now and still publishing books that delight readers.  

“My grandfather V. Krishnaswamy Sarma would print books in presses that were under British control at night and take out slim volumes on learning English on his bicycle. The books were priced very low and if people could not afford them, he would give them for free. His lone aim was to educate people and not make money out of it. When he was in Secunderabad in government service and fell ill, he and my grandmother decided they have to do something for the public,” explained T.N.C.Vijayasarathy, Chairman of Lifco.  

The Little Flower Co. (LIFCO Books) a renowned Publishing House was founded by Late Krishnaswamy Sarma in 1929, now known as LIFCO Publishers (P) Ltd is well known for its innumerable low priced Publications both on Religious & Education. It specializes in its various types of Dictionary’s & earlier it was well known for its school guides.  Even today, LIFCO continues to adopt low pricing strategy, thereby creating an immense reputation for them in entire South India.

LIFCO also runs a charitable trust which has been contributing to various spiritual & religious activities by donating Sri Sataris to various Vishnu temples commenced in 1930’s by Sri. Kanchi Paramcharya. It has donated more than 2000 SRI Sataris i.e Lotus feet of Lord Vishnu to various Vaishnav Shrines including most of the 108 Divya Desams. LIFCO takes pride to have offered them throu Eminent Scholars, Veda Pada Shalas, & many Renowned Saints.  In one of the functions, the Managing trustee said - We have donated more than 2700 “Sri Sataris” (Divine Lotus Feet) commencing from 1931 to various Vaishnav Temples including the 106 Divya kShetrams.

Our Emperumanar Swami Ramanujar sahasrabdi vaibhavam was celebrated grandly and Lifco had a commendable role in organizing it – that included   Exhibitions, Bharath Darshan – Rath yatra, free medical camps and Vedic Global Conference at Chennai.

The man with lofty ideals and hefty accomplisnments  would not share the limelight but remained ever humble.  Shocked and saddened by the untimely demise of Sri.TNC Vijayasarathy, Chairman of Lifco Books, recently. He was just 48. #OmShanti.


Last year in Mar 2020, he obliged for a photograph at Thirumalai Ananthazhwan nanthavanam.  Some more photos of the function where he too was felicitated are here. 



Sad, Emperuman snatches some good souls young – this month has been pretty bad for our Sampradhayam as we lost “ Thirukkovalur Jeeyar Swami”; Swami Mudaliandan too.  

With profound grief – adiyen S. Sampathkumar
25.11.2021.

Tuesday, November 23, 2021

Sri U Ve Koil Kandadai Vadhoola Annavilappan Kumara Ramanujacharya Swami !!!

இன்று ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு, நம் சம்பிரதாயத்துக்கு பேரிழப்பு.  இன்று மதியம் - ஸ்ரீ உ.வே.கோவில் கந்தாடை வாதுல அண்ணாவிலப்பன் அழகிய சிங்கர் என்கிற குமார ராமானுஜாச்சார்ய ஸ்வாமிகள் (வர்த்தமான முதலியாண்டான் ஸ்வாமி) திருநாடு அலங்கரித்தார் என்று கேள்விப்பட்டு மிகுந்த வருத்தத்தில் உள்ளோம்.  அனைவரது அபிமானத்துக்கும் உகந்த நம் ஸ்வாமி - பரம சௌலப்யர்,  பரம காருணிகர் - இளவயதில் திருநாடு அலங்கரித்தது பேரிடியாக பெரு வருத்தத்தை தந்துள்ளது. 


It is with shock and a sense of disbelief that Srivaishnavaites today received the sad news of  Acaryar - Sri U Ve Koil Kandadai Vadhoola Annavilappan Kumara Ramanujacharya Swami (Varthamana Sri Mudaliandan Swami) reaching the lotus feet of Emperuman.  

Sure you have travelled many a times on this road by-passing the town of Poonamallee, situated at a distance of 23 kilometres from Fort St George and 17 kilometres from Sriperumbudur on the Chennai-Bangalore highway.  The name "Poonamallee" is derived from "Poovirundavalli", meaning "the place where flowers are cultivated".  Much  nearer is another place of significance as the birth place of Acaryar -many may know as Pettai [there are some references as Nazarathpettai – changed for obvious reasons now !] 

In our Srivaishanava Sampradayam, Pontiffs carry tridandam signifying our philosophy - chit, achit and easwara.    Chithirayil Punarpusam ~ is  the  day of significance associated with Aandan considered as Trithandam of Swami Ramanujar.     

padhuke yathi rajasya kathayanthi yadhakh yaya |

thasya daasarathe: paadav Sirasa dhaarayaam yaham || 

Meaning: Yathiraja paduka (Swami Ramanujar's Lotus feet) is what he is known as. Hence we pay our respect to Daasarathi's (Mudaliandan) Lotus feet.  

எம்பெருமானாரின் த்ரிதண்டமாயும் அவரது திருவடியாயும் விளங்குகின்ற நம் தாசரதி (முதலியாண்டான் சுவாமி); எம்பெருமானாரின் (ஸ்ரீராமானுஜர்) ஸஹோதரியின் குமாரராக பச்சைவாரணப் பெருமாள் கோவில் என்னும் ஊரில் அவதரித்தவர்.    எதிராஜரான ஜகத்குரு இவரைத் திருதண்டமாக (முக்கோல் மதித்திருந்தார்.  இவரோ, ஜகதாசார்யரான சுவாமியின் (ஸ்ரீராமானுஜர் பாதுகங்களாகவே (திருவடி நிலைகள்)  தம்மை நினைத்திருந்தார்.  எம்பெருமானார் ஸன்யாஸ்ரமம் புகும்போது, "நமது முதலியாண்டானைத் தவிர அனைத்தையும் துறந்தோம்" என்று அருளியதாக இவரது புகழ் பேசப்படுகிறது.  இவரது  வரலாறு ஆசார்யரான ஸ்ரீராமானுஜருடைய வாழ்க்கையுடன் பிணைந்தே உள்ளது.   குருபரம்பராப்ரபாவம் தவிர, கோயிலொழுகு, வார்த்தாமாலை முதலிய நூல்களிலும் வாழ்க்கைக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.  

ஸ்வாமி முதலியாண்டான்  உடையவர் திருவடிகளிலே கைங்கர்யத்தைச் செய்து,  வாதூல தேசிக பதம் நிர்வஹித்து ஸ்ரீரங்க ஸ்ரீயை அபிவிருத்தி செய்தவராய்க்கொண்டு 105 திருநக்ஷத்ரம் (கி.பி.1027 - 1132)  உடையவரின் பாதுகாஸ்தானியராக எழுந்தருளியிருந்தார்.   எம்பெருமானுடைய திருவடி ஸ்தானமாக இருந்து அவருக்கு அந்தரங்க கைங்கரியங்களை செய்தமையால் எம்பெருமானுடைய திருவடியை முதலியாண்டான் என்றே அழைப்பது மரபு. 





Continuing in his lineage and guiding us was  Sri U Ve Koil Kandadai Vadhoola Annavilappan Kumara Ramanujacharya Swami (Varthamana Sri Mudaliandan Swami) who attained acharyan thiruvadi this day.  Swami had been doing great kainkaryam at many divyadesams and more particularly at Singaperumalkovil, where Acaryar thirumaligai is located now. 

At this hour of grief, We pray our Emperuman to give strength to all to bear his passing away and to Kumara Bakthisarachaar, his thirukkumarar to have strength and guide us further in our sampradhayam. 

adiyen  Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.11.2021.

Saturday, November 20, 2021

Swami Nampillai @ Thiruvallikkeni

 

Swami Nampillai - @ Thiruvallikkeni – karthigaiyil karthigai avathara uthsavam 2021

                                             – 5 day photos collage !