To search this blog

Tuesday, September 12, 2017

Sri Periyazhvar Vaibhavam ~ Kaithala SEvai at Sri Villiputhur Divyadesam

The  day (2nd Sept 2017) was a great day in my life as  it provided the  fortune of partaking in Thirupallandu, Thiruppavai goshti at Sri Periyalwar sannathi ~ hearing and seeing the ‘thala abinaya composition’ of Sri Villiputhur Arayar Swami – in the lineage of our great Acharyar Nadhamunigal – and kaithala sevai of Sri Periyazhwar !!


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு * பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு **

Sri Periyaazhwaar was born as ‘Vishnu chithar’ at Sri Villiputhur.  With exceptional commitment, he rendered  floral service to the Lord Vada Bhathrasayee.  With the blessings of Lord, he proved before the Pandya King, the uniqueness of Sriman Narayanan.  He was honoured by the King and was taken around atop bridled elephant.  To honour him Lord Sriman Narayana along with Pirattiyar appeared on Garuda vahanam and Vishnu Chithar instead of asking for favours [which any other normal human would have done] started singing paeans in a manner that he sought that HIS wealth and other blessings should remain as they are without diminishing in any manner.  Such was his devotion that he was called ‘Periyaazhwaar’ –the big among all others.  

His renditions are “Thirupallandu” and “Periyazhwaar Thirumozhi”.  Though they were not the ones made first, in Sri Vaishnavism, they are considered to be the initial ones in  ‘Naalayira Divyaprabandham’ compiled by Sriman Naathamunigal and everytime ‘Naalayira Divyaprabandham’ is rendered, it begins with ‘Thirupallandu’ only and here is something I learnt on its greatness.

ஸ்ரீவைணவனுக்கு திருமண் காப்பு அடையாளமாக (உண்மையில் இது நமக்கு ரக்ஷை) இருப்பதை போல; ஸ்ரீமன் நாராயணனை தொழும் அனைத்து அடியார்களும் ஏனையோரும் அறிந்தது  **'திருப்பல்லாண்டு'**

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு * பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு

- இந்த அரிய பொக்கிஷத்தை நமக்கு அளித்தவர் தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆணி மாசம் சுக்லபக்ஷம், ஏகாதசி கூடின ஸ்வாதி நக்ஷத்திரத்தில் கருடாம்சராய், அந்தணர் குலமான வேயர் குலத்தில்முகுந்தபட்டர் என்பவருக்கும் - பதுமவல்லி நாச்சியாருக்கும்  புத்திரராக அவதரித்தவர் விஷ்ணு சித்தர்.  .  ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனிமாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில்  வேயர்குலம் என அழைக்கப்பட்ட வம்சத்தில் இவர் கருடனின் அம்சம் என்று வணங்கப்படுகிறவர். 


வடபத்திரசாயி என பள்ளிகொண்ட கோலத்தில்  இருக்கும் வடபெருங்கோயிலுடையான் கோயிலுக்கு தெற்கே நந்தவனம் அமைத்து தினம் பகவானுக்கு பூமாலை  சாற்றி கைங்கர்யம் செய்து வந்தார்.   பாண்டியன் சபையில் ' பரம்பொருள் யாது' என்ற போட்டியில் ஸ்ரீமந்நாராயணின்  கடாட்சத்தால் ஸ்ரீமந்நாராயணனே எல்லாருக்கும் தலைமையான கடவுள் என பரத்துவத்தை  நிர்ணயம் செய்து வெற்றி கண்டார்.   இதனால் அவரை யானை மீது ஏற்றி அவருக்கு பட்டர்பிரான் என்று பட்டம் சூட்டி நகர்வலம் வந்தபோது அதைக் கண்டுகளிக்கத் திருமாலே கருடன் மேல் ஏறி  பிராட்டியுடன் வந்து தரிசனம் தந்தாராம். ஆழ்வார் யானையின் கழுத்தில்  உள்ள மணிகளைத்  தாளமாகக் கொண்டுபரவசத்தில் திருப்பல்லாண்டைப் பாடினார் என்பது குருபரம்பரைக் கதை.

ஸ்ரீவைகுண்ட ஸபரிவாரனாய் கருட வாஹனத்திலே எம்பெருமானே எழுந்தருளி எதிரே ஸேவைஸாதிக்க, ஆழ்வார்  இந்நிலத்திலே எம்பெருமானுக்கு  யாராலே என்ன தீங்கு விளைந்துவிடக்கூடுமோ என்று அதிசங்கைப்பட்டு ‘ஒரு அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு; பல கோடி பல்லாண்டு என வேண்டினவர்.    எப்படிப்பட்ட எதிரிகளையும் ஒரு விரல் நுனியாலே வென்றொழிக்கவல்ல தேஹவலிவுகொண்டவனும்  மல்லர்களை  புறந்தள்ளினவனுமான  புஜபல பராக்கிரமசாலியை கண்டும் மீண்டும் மங்களாசாஸநம் பண்ணின பரிவாளர் நம் பெரியாழ்வார்.   சேஷபூதனுக்குத் திருவடியே உத்தேச்யம் என்பதைக் காட்டவே சேவடி செவ்வி திருக்காப்பு என்றார்.
   
பெரியாழ்வார் இயற்றியவை "திருப்பல்லாண்டும் - பெரியாழ்வார் திருமொழியும்".  

கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் - வேதத்துக்கு
ஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்த்
தான் மங்களம் ஆதலால்*-- ~~~~

                                  'ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில்' உள்ள எல்லா பாடல்களுக்கும் ஓம் என்ற பிரணவம் போலே- மற்றயவை யாவற்றுக்கும் சுருக்கமாகவும் மங்களாசாசனமாகவும் திகழ்கிறது -" திருப்பல்லாண்டு" என நம் ஆச்சார்யன் மணவாளமாமுனிகள் உபதேசரத்தினமாலையில் அருளிச் செய்துள்ளார்.  ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம் எப்போது சேவிக்கப்பெற்றாலும்திருப்பல்லாண்டுடன் துவங்குவது ஸ்ரீவைஷ்ணவ மரபு.  திருப்பல்லாண்டு மொத்தம் 12  பாசுரங்கள் ; பெரியாழ்வார் திருமொழி - 461 பாசுரங்கள்*.


அற்புத திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில் - ஆண்டாள் நாச்சியார் சூடிக்களைந்த பூமாலை  வடபத்ரசாயீ எம்பெருமானுக்கு; பின் அம்மாலை  பெரியாழ்வாருக்கும் சாற்றப் பெருகிறதாம். 


அனுதினமும், காலை திருப்பாவை சாற்றுமுறை சந்நிதியில் நடந்தபின், பட்டர் தமது கைத்தலத்தே பெரியாழ்வாரை ஏளப்பண்ணிக்கொண்டு  சந்நிதி வாயில் அருகே வந்து - எம்பெருமானை சேவிக்கப்பண்ணுவது இங்கே நடைபெறும் அற்புத சேவை.  அடியேனுக்கு அன்று கிடைக்கப்பெற்ற அந்த அரிய  சேவை புகைப்படங்கள் இங்கே.





ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம். ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம். 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் : ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.

Saturday, September 9, 2017

Revathi Sri Ranganathar ~ and Perumal at marriage reception

Today is ‘Revathi’ nakshathiram in the month of Avani ~ and there was to be purappadu of Sri Ranganathar.  In someways disappointing as it could not take place due to some asantharpam nearer the Temple premises.   Later attended marriage reception of Sri U Ve Keezhathirumaligai Embar Sinthamani- Parankusa Nambi @ Srinikethan with Sow. Padmavathi @ Divya.

ஸ்ரீ ரங்கநாதனின்  திவ்யதரிசனம் கண்டு இன்புற இன்று திருவல்லிக்கேணியில் 2009ல்  நடைபெற்ற  ' ரேவதி புறப்பாட்டின்'  - படம் ஒன்று இங்கே.
வாய் அவனை  அல்லது வாழ்த்தாது கையுலகம்*
தாயவனை அல்லது  தாந்தொழா - பேய்முலை
நஞ்சூணாகவுண்டான் உருவோடு பேரல்லால்*
காணாகண் கேளா செவி.

~ astounding words of faith in Muthal Thiruvanthathi.  Poigai Azhwar speaks of Lord Krishna who strolled on Earth as a child, drank poison with relish from the breasts of ogress… Alwar proclaims that his hands will salute none other than Him; lips shall not extol anybody else; eyes will not see – other than His form ~ and ears would not hear anything other than the name(s) of Sriman Narayana.


We live – we pray – we go to temples….. in Sri Vaishnavism, in the various forms of God – the one which is easiest and the form in which the Supreme God makes Himself available to us daily is ‘Idol worship’ in Divyadesams and other temples – this is known as ‘Archai’ ~ Archavatharam, where the Supreme Lord Maha Vishnu manifests Himself in various idol forms and comes near us to shower his munificence to us ……….. 

Felt so happy for there in the marriage reception was this replica of our Sri Parthasarathi Emperuman so delightfully made.  





~ adiyen Srinivasadhasan.
9th Sept. 2017.

PS :  Photo of Sri Ranganathar taken during purappadu in Nov. 2009 with Konica Minolta DiMage Z10 3.2 MP camera.  Other photos taken with Samsung C7 pro mobile.

Tuesday, September 5, 2017

Sri Arayar Sevai at the Holy Sri Villiputhur

இரயில் வண்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று, ஆட்டோவில் பயணிக்கும்போதே கம்பீரமான கோபுரம் காட்சியளித்தது.  ஸ்ரீ கோதை நாச்சியார் பிறந்த ஊர்; கோவிந்தன் வாழுமூரின் பரிமளிக்கும் சின்னமான ~ மிகப்பெரிய வில்லிபுத்தூர் கோபுரத்தை கண்டு பிரமித்து - திருக்கோவில் உள்ளே நுழைந்ததும், கொடிமரத்துக்கு முன்பே - இடப்பக்கம் நம் உடையவர் சன்னதியும் ~ வலது பக்கம் ஸ்ரீபெரியாழ்வார் சன்னதியும்.   சன்னதி முன்பே திவ்யப்ரபந்தமோ, த்வயமோ அநுஸந்திதித்துக்கொண்டிருந்த இளைஞர் நன்கு படித்து முதலில் ஒரு மென்பொருள் நிறுவனத்திலும், பிறகு ஒரு தனியார் வங்கியில் உயர் பதவி வகிப்பவர் என்னும்போது உயர்ந்த மதிப்பை விட,  அவருடன் வார்த்தை சொல்லி அவரைப்பற்றி அறிந்தபோது வந்த பெருமிதமும் பேர் உவகையும் மனதை படபடக்க வைத்தன. !!



நமது ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரைதான். நம் ஒவ்வொரு செயலையும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு பிறகு – உய்யக்கொண்டார், மணக்கால்நம்பி, அடுத்ததாக நாதமுனிகளின் பேரனான  யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார்.   இந்த பதிவு  குரு பரம்பரை பற்றியது அல்ல, நம் ஆசார்யரான  ஸ்ரீமன் நாதமுனிகள் திவ்யப்ரபந்தத்துடன் நமக்கு இட்டுச்சென்ற  'அரையர்  சேவை ' எனும் அற்புத பாரம்பரியத்தை பற்றியது.



In SriVainava Satsampradhayam, great emphasis is on ‘Guru Parampara’ that starts from Sriman Narayana Himself, down to Sri Nathamunigal who has to be remembered ever for what he gave us – *Sri Naalayira Divyaprabandham*.  Sri Nadhamunigal was born in  Anusha nakshatra of ‘Ani’ month at Sri Veeranarayanapuram.   Sri Nathamuni went on a long pilgrimage that took him to holy places  like Mathura, Vrindhavan, and other holy places including Puri.  Back home, upon hearing some Srivaishnavaites reciting Thiruvaimozhi pasuram (that had sort of become extinct ) ‘Aaravamuthe’ and curious to know the rendering in full  ~ he followed its trail that led him to KUmbakonam; Lord Aravamudhan directed him to ThiruKurugoor; with the divine blessings, collated Sri NalayiraDivyaprabandham and thence onwards these hymns are continually sung in  Divyadesams and other Sri Vaishnavaite temples,  Dravida  Veda.

Nathamunigal was also a great Bhakti Yogi and practiced the Yoga of eight accessories ( ashtAnga yoga); he authored the  treatise “Yoga Rahasya”.  He was also an exponent of divine music  who initiated the ‘singing of divyaprabandham ~ now known as ‘Arayar Sevai’. Without this great Acharyar’s efforts in retrieving aruliCheyal,  theVaishnava World would not have got the rich possessions that we have today.  Alavanthar in his SthothraRathinam sings the glories of Nathamunigal in the first 3 slogas.

Sri Vaishnava temples follow the doctrine and practices instituted by our great Acharyar Sri Ramanujar.  In most Divyadesams, one would be impressed by the resplendent splendour of Archavathara Murthies, the garlands and floral decorations, the ornate ornaments, the devoted services of Battars, Veda Adhyapakars rendering Vedas and Divyaprabandhams, the Sripadham thangigal who with mighty devotion take the Lord on their shoulders and there is more…




The “Araiyar Sevai” is unique offering that takes place on certain specific occasions at a few divyadesams – Thiruvarangam, Srivilliputhur, Thirukurugoor [Azhwar Thirunagari], Thirukkannapuram and of course Thirunarayanapuram [Melukote]….  It is bakthi in its purest form – rendered by special people – who sing the verses of Nalayira Divyaprabandham accompanied by abinayam [gesture] with ease.   Araiyars are hereditary and take great effort to preserve their family tradition, descending from the days of Acharyar Nathamunigal…. Sadly, there are not many as over the years we have failed to recognize and take care of their exquisite art totally dedicated to Sriman Narayana. 


`Araiyar Sevai’ is the visual enactment of the passionate expression by those in the tradition of Araiyars who have upheld the literature of Iyal, Isai and Natakam.  The Araiyars are not mere dance performers ~ being well versed in Vaishnavaite commentaries possessing great knowledge. Have read that according to ‘Koil Ozhugu’  record book of the Srirangam temple, Thirumangai Azhwar, started the practice of presenting Thirunedun thandakam with the accompaniment of music  before Lord Num Perumal; ages later, Nathamunigal introduced its performance during the Thiruvadhyayana Uthsavam.   His nephews - Keezhai Agathu Azhwar and Melai Agathu became the foremost Araiyars at Srirangam.  According to tradition they were given a cone-like cape “Ariyar Kireedam'' two cymbals and the sacred garlands by the Lord of Srirangam Himself.  The Araiyars first recite the Paasuram, they then explain its inner meaning and finally perform the Abhinaya, a unique art/dance performance with their hands and legs explaining the Paasurams with special musical effect.

I had earlier posted about the committed to and continuing the traditions of Araiyar Sevai  at  Melkote [Thirunarayanapuram] that has a rich legacy and extremely committed people who uphold the traditions and had written something on Sri U.Ve. Arayar Srirama Sharma Swami, an exponent of Arayar tradition. He  received the Certificate of Honour to eminent scholars of Sanskrit, by the then  President of India Mr Pranab Mukherjee in 2014.  

Today (2nd Sept 2017) had the fortune of partaking in Thirupallandu, Thiruppavai goshti at Sri Periyalwar sannathi ~ hearing and seeing the ‘thala abinaya composition’ of Sri Villiputhur Arayar Swami – in the lineage of our great Acharyar Nadhamunigal -  Sri Srinivasa Rengan  (the Swamin mentioned in the first para) –, had the fortune of having Arayar Sevai  again in the night when there was rendition of Thiruvaimozhi muthal pathu before Sri Vada Bathra Sayee Emperuman on the occasion of Thiru Pavithrothsavam at Sri Villiputhur.

நெஞ்சமே நல்லை நல்லை, உன்னைப்பெற்றால், இனியென்ன குறைவினம்? எம்பிரானைத் தொழாய் மடநெஞ்சமே #
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.


அடியேன் ஸ்ரீனிவாச தாசன் - திருவல்லிக்கேணி எஸ் சம்பத்குமார்


Rajagopuram view from roadside and from inside.


Monday, September 4, 2017

Sri Parthasarathi Pavithrothsavam : day 5 ~ Muthangi :: 2017

முத்துக்களோ, வைரங்களோ, நன்பொன்னோ  ~ வேறு ஏதும் விலை மிக அதிகமான பொருளோ ? - நமக்கு எதிலே நாட்டம் ?? ஐயம் கிஞ்சித்தும் உளதோ ??  :  சுவாமி நம்மாழ்வாரின் வைர வரிகள் :

*பெருங்கேழலார் தம்  பெருங்கண் மலர்ப்புண்டரீகம்  நம் மேல் ஒருங்கே பிறழுவதே **   ~  அன்று  பிரளய  வெள்ளத்திலழுந்தின பூமியை மீட்டு எடுத்த மஹாவராஹரூபாயமயானவர்  தம்முடைய பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை,தன்னை எம்பெருமான் குளிர நோக்கினமை கூறியவாறு,  நம்மேல் வைத்த கடாக்ஷத்தை பற்றி மட்டுமே பேருவகை கொள்தல் நலம்.

The history of Chennai, is far older than British settlements, the  black town area came to be known as George Town from 1911 in honour of  King George V when he was crowned,  the Emperor of India.  The Western part of George Town is the Muthialpet area, traversed by couple of  roads running from Madras High Court to Clive Battery, nearer Royapuram Railway.   One among the many lanes is  Pavalakkaran Street housing Sri Venugopala Temple.  It was once the place where diamond and coral trade flourished. 

The Jews imported corals, both in the form of beads and in rough. The place in Muthialpet where they lived was known as Pagadalpet [Coral-town] dating back to 1700s.   A book titled – ‘The English Gentleman Merchant at Work: Madras and the City of London 1660-1740’ by Soren Mentz, mentions that the financial crisis affecting the English market even ruined some of the private merchants in Madras, through respondentias, as they suffered financial losses when the Captains were declared bankrupt.  After a voyage to Madras in 1721, Captain Martin was declared bankrupt and private merchants like John Adams lost their investment.

Pearls are attractive.  Palliative care is an approach, an ethic, a multi-disciplinary sub-speciality, not just a new element that can be added and stirred into health systems. Pearl jewellery that glitters needs to be taken care of nicely.   Thousands of miles away, two out-of-town jewelry makers who were selling their work at the “Art in the Pearl” festival this weekend in Northwest Portland say someone stole $300,000 of their inventory from the trunk of their car.  It is reported that the woman and her friend  had made a 10-minute stop at a store after the festival closed for the day Saturday. While the pair were in the store, someone opened up their trunk and made off with black jewelry bags containing years’ worth of handmade work,  it is claimed.  The artisan added that some of the stolen items took her weeks to craft -- and that one of the missing necklaces took her more than 200 hours to make. May not be of any interest to us ~ but this dress adorned by Emperuman, made of Pearl [Muthangi] certainly does. On day 5 of annual Pavithrothsavam at Thiruvallikkeni, Emperuman adorned Muthangi.


திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்  நடை பெறும் பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம். திருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இன்று ஐந்தாம் நாள் புறப்பாட்டின் போது ஸ்ரீ பார்த்தசாரதி முத்தங்கி அணிந்து அற்புத சேவை அளித்தார்.

~ adiyen Srinivasadhasan

4th Sept 2017.