To search this blog

Sunday, February 19, 2017

Nachiyar Thirukovil at Uraiyur - avathara sthalam of ThirupPanazhwaar 2017

கங்கையில் புனிதமாய காவிரி நடுவுபாட்டு;
பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம்

River Cauvery is considered most sacred ~ in the words of Thondaradipodi Azhwar – ‘more sacred than the Sacred Ganges’…. ~ and in that beautiful island formed by Cauvery [Kaveri and Kollidam] reclines Lord Ranganathar.  Azhwars, many sages and saints have left a rich treasure for posterity, in the form of classics containing all information about God and how He is ready to respond to the devotees' sincere pleas. 

The sacred Cauvery flowing across enriched all areas on its banks ~ the Chozha empire flourished due to that.  Historically, Uraiyur [also spelt Woraiyoor] was  the capital of the Empire at some point time  – it  had big palatial buildings and bigger choultries feeding the poor all the time.   Woraiyur figures prominently in the Sangam works like Pattinapalai and Purananuru. According to the former, Karikala Cholan beautified its fortifications, gateways, tall mansions and temples.  Uraiyur over the period is known by various names such as ‘Thirukkozhi, Nikalaapuri, Uranthai, and Kozhiyur’. The word Urayur in Tamil literally means "the residence" ~ perhaps meant to be the abode of the Lord Himself.  Legend has it that ‘cock attacked the elephant of the king’ and realizing the valour, the place came to be known as ‘Kozhiyoor’ too.  

 view of the Gopura vasal

For Sri Vaishnavaites, this places assumes significance for this is a Divyadesam ~ more so as every year Lord Num Perumal from Thiruvarangam visits this place.  The presiding deity here is Azhagiya Manavaalan in  standing posture possessing ‘Conch [Thiruvazhi] and Chakra in His hands.  The Thayar is Kamalavalli Nachiyar ~ who is in the main sannathi itself alongwith Perumal.   The moolavar Kamalavalli Nachiyar is in sitting posture of the bride [Thirukalyana thirukolam]. Thiru Kalyana uthsavam is celebrated on Panguni  Pooram day when NumPerumal from Thiruvarangam comes here for marriage.   Lord Ranganatha here is ‘Azhagiya Mana Vaalan’ ~ there is no Uthsavar idol for Perumal.  There are separate sannathies for Swami Nammalwar; Sri Ramanujar and ThiruPanazhvaar.   Thirumangai mannan sings about this place as :

Moolalvar [Azhagiya Manavalar and Thayar - Kamalavalli Thayar]

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே  ஒப்பர் குன்றமன்ன*
பாழியும் தோளுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம்*
வாழியரோவிவர்  வண்ணமெண்ணில் மாகடல் போன்றுளர் கையில்வெய்ய*
ஆழியொன்று ஏந்தி ஒர் சங்கு பற்றி  அச்சோவொருவர் அழகியவா.**

திருமங்கை மன்னன் தமது திருமொழியில் மங்களாசாசனம். " உறையூரையும், தென் மதுரையையும் இருப்பிடமாகவுடைய கோபாலக்ருஷ்ணன் போல இருக்கும் இவர் பெரிய கடல் போன்றும்; மலை போன்ற வலிமை பொருந்திய அழகிய நான்கு திருத்தோள்களையும் உடையவராய் இருக்கிறார் ~ அத்தகைய பெருந்தகையோன் -  பல்லாண்டு பல்லாண்டு  வாழ்ந்திடுக.

This place has added significance of being the avathara sthalam of Thirup Paan Azhwar for whom there is a separate sannathi.  The prakaram is not big and on the left side of the corridor is the sannidhi of Thirupanar. 

Thirupanalwar used to come to the banks of Cauvery, deeply imbued in bakthi he would sing with deep anubhavam about the kalyana gunams of the Lord every morning. In the divine Naalayira Divya prabandham, his contribution is Amalanadhipiraan – ten in number. His prabhandham is different from the rest in a way that it does not contain any upadesams or anything else but only hymns in praise of Lord Ranganatha alone. Those well versed in sampradhaya state that they are aanandha-lahari (limitless outpourings of the bliss of aanandham) at the anubhavam of the Soundharyam of Arangar.

Here is  one of his immortal verses:
அமலனாதிபிரான் அடியார்க்கென்னை ஆட்படுத்த*
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்*
திருக்கமலபாதம் வந்து  என்கண்ணினுள்ளன ஓக்கின்றதே.

Azhwar totally immersed with bakthi, refers to the Lord as Vimalan, glorifying His blemishlessness and magnanimity.  The immaculate  Lord Ranganatha [Arangathamman]  cleanses the massive dirt of ignorance of the worshippers and imparts purity to them. Indeed He is the purest of the pure and the most auspicious among the auspicious.   The Lord “Nimalan” is the one who bestows boons on his devotees even unasked and unsolicited, enhancing His greatness still further. And when someone thinks of such magnanimous Lord – the Lotus feet – the very thought gets ingrained in the eyes of Azhwar who could see nothing else and melts with the benevolence of Lord Ranganatha. 

As starts the thaniyan ~ ஆபாதசூடம்  ~ from the feet to the crown, perhaps was his resolve when he started singing, but he cannot take his eyes off the Thiruvadi.   Such was his bakthi.  Sri Thirup Paanazhwar’s  thirunakshathiram falls on “ Rohini in Karthigai month.” The Azhwar,  an amsam - Sri Vatsa of Sriman Narayana sang mellifluous paeans in praise of Lord.  Such was his blemishless devotion to Lord Aranganathar that he claimed that he does not want to see anything else with his eyes that saw the most benevolent Lord Arangar. ~ அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள்  மற்றொன்றினைக் காணாவே.

 entrance of Alwar sannathi and Perumal sannathi view from outside


Had the fortune of darshan at this holy place recently.  On Friday (17.2.17) had Suprabatha darshan.  Now the “Pagal pathu” uthsavam is on at this divyadesam, the culimination of which would be reenactment of  entering Paramapada vassal on Wednesday 22nd Feb 2017.  On 18.2.2017, it was Muthayira sarrumurai by Adhyapaks ~ and ‘Arayar Sevai’ – the Arayars from Thiruvarangam singing the pasurams to the accompaniment of ‘punn’ – music.   It was indeed a great fortune to be part of goshti and have darshan of Thayar hearing divyaprabandham with Thiruppanar, Swami Nammalwar and Sri Ramanujar seated in front, facing Thayar.

Here are some photos taken at the divyadesam.


Adiyen Srinivasa dhasan.

mandapam for Thayar

 Thiruppanar ~ Swami Nammalwar and Sri  Udayavar - Pagal pathu


Sri Kamalavalli Thayar
Emperumanaar and Uthsava pathrikai 


Sunday, February 12, 2017

Thirumazhisai Aazhwaar Sarrumurai ~ Prasadam to his Acharyan - 2017


தையில் மகம் இன்று தாரணியீர்!* ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் * - துய்யமதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று *
நற்றவர்கள் கொண்டாடும் நாள்.
என நம் ஆசார்யரான மணவாள மாமுனிகள் உகந்த நன்னாள்  இந்நாள். தை மாதத்தில் மக  நக்ஷத்திரத்தில், , விஷ்ணுவானவர் தன் திருக்கையில் ஏந்தியுள்ள திவ்ய ஆயுதமான சக்கரத்தின் அம்சமாக, பார்க்கவ முனிவருக்கும் கநகாங்கி என்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீக்கும் குமாரராக மஹீசாரபுரம் என்னும் திவ்யக்ஷேத்திரத்தில் திருமழிசைப்பிரான் அவதரித்தார்.



திருமழிசை ஆழ்வார்   இவ்வுலகத்தில்   இருந்தது 4700 ஆண்டுகள்.  அதிலே துவாபர யுகத்திலே 1100 ஆண்டுகளும், கலியுகத்திலே 3600 ஆண்டுகளுமாக  வாழ்ந்திருக்கிறார் என்று வைணவ ஆசாரியர்கள் அருளிச்செய்த "பன்னீராயிரப்படி" வியாக்யானம் தெரிவிக்கிறது.   தனது காலத்திலே, ஆழ்வார்  சமணம், பௌத்தம், சைவம் என பல்வேறு சமயங்களையும் கற்று, அந்த சமயத்தின் கோட்பாடுகள், அவற்றைச் சார்ந்த நூல்கள் ஆகிய அனைத்திலும் புலமை பெற்றவராய் இருந்தார். 

"சாக்கியம் கற்றோம் சமணமும் கற்றோம் அச் சங்கரனார்
ஆக்கிய ஆகமநூலும் ஆராய்ந்தோம்" என்று உரைத்தார்.

சைவ மதத்தில் புகுந்து, சிவ வாக்கியராய் இருந்து சிவனைப் போற்றித் துதிகள் பாடி, அதிலும் தான் காணவேண்டிய வஸ்து கிடைக்காமல், பின்னர் பேயாழ்வாரால் திருத்தப்பட்டு, எம்பெருமானே சிறந்த தெய்வம் என்று உணர்த்தப்பெற்று, ஸ்ரீ வைஷ்ணவரானார் .

இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் : 2 -  நான்முகன் திருவந்தாதி (96) திருச்சந்த விருத்தம் (120) ஆக மொத்தம் 216 பாசுரங்கள். இவரை "துய்ய மதி பெற்ற" என ஸ்ரீமணவாளமாமுனிகள் கொண்டாடுகிறார். 

இன்று இவரது சாற்று முறை மஹோத்சவத்தில் - திருவல்லிக்கேணியிலே - ஆழ்வார்  ஸ்ரீ தேவப்பெருமாளுடன் புறப்பாடு கண்டு அருளினார்.  வீதியில் இராமானுச நூற்றந்தாதி சேவிக்கப்பெற்றது.  திருவாய்மொழி பத்தாம் பத்து சாற்றுமுறை முன்பு - பெருமாள் அமுது செய்த பிரசாதம், அவரது ஆச்சார்யனான  பேயாள்வார் சந்நிதிக்கு குடை, திருச்சின்ன மரியாதையுடன் ஏளப்பண்ணப்  பெற்று, பேயாழ்வார் சுவீகரித்த பின்பு மழிசைப்பிரானுக்கும், அவரது பக்தர்களுக்கும் வழங்க பெற்றது.



A post on the greatness of  Sri Bakthisarar, hailed as Thirumazhisai Alwar is posted separately.  On the day commemorating his birth ‘Magam Nakshathiram in the month of Thai’ – there was purappadu of Alwar with Sri Varadharajar at Thiruvallikkeni Divyadesam. 

Bakthisarar learnt and mastered many religions including Buddhism, Jainism and practised Saivism for some time too.  In this phase, he was made to understand the supremacy of Sriman Narayana and brought back to Srivaishnava fold by Sri Peyalwar.  

At Thiruvallikkeni divyadesam, on sarrumurai day, after Periya maada veethi purappadu, the Prasadam offered to Lord Devathirajar was thence taken with all paraphernalia to the sannathi of Sri Peyalwar, considered the Acharyar of Mazhisaippiran and after submission of Peyalwar was brought to Thirumazhi alwar and thence distributed to all Sri Vaishnavas – here are couple of photos of prasadam being taken to the sannathi of Sri Peyalwar.

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

11th Feb 2017.

Special thanks to Sri Nallan Chakravarthi Rangarajan Swami. [Sri Pachadi Rangarajan Swami]

Thirumazhisai Aazhwaar Sarrumurai திருமழிசை ஆழ்வார் அவதரித்த நன்னாள் 2017



Thirumazhisai Aazhwaar Sarrumurai   திருமழிசை ஆழ்வார் அவதரித்த நன்னாள்  


For Srivaishnavaites, Azhwaars and their birthdays  are of great significance.  The hymns sung by the Azhwargal are collectively are known as ‘Naalayira Divya Prabandham’.    Bhakthisarar,  well known as Thirumazhisai Azhwar was born in Thirumazhisai and hence is hailed as Thirumazhisai Piran.  This  place is near Poonamallee around 20 kms away from Chennai on the Bangalore High Road.


The legend of the temple at Thiruvegha in Kanchipuram is associated with Thirumazhisai Azhwaar.  The King insisted on the disciple of Azhwaar by name Kanikannan to sing in his praise.  He refused and promptly was banished outside the kingdom.  Azhwaar followed his disciple and sang to Lord that they are moving out of the town.  The Lord transgressing the immobile idol form, also went following the azhwaar plunging the kingdom in darkness.  The King realizing his folly, then prostrated before the disciple and  azhwaar requesting them to return.  The saint returned and so did the Perumal.  Even now this God is affectionately called “Yathokthakari” – the one who did as told by his devotee. 

Thirumazhisaippiran’s  works are : Naanmukhan Thiruvanthathi (96) and Thiruchanda Virutham (120).  He was born in the Magam nakshathiram of Thai month.  Today  11th Feb 2o17  is His Thirunakshithiram and hence celebrated as Sarrumurai.    Here is a small write up on the Azhwaar with photos of purappadu at Thiruvallikkeni Divyadesam of Azhwar with Sri Gajendra Varadharajar.

தையில் மகம் இன்று தாரணியீர்!* ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் * - துய்யமதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று *
நற்றவர்கள் கொண்டாடும் நாள்.

என நம் ஆசார்யரான மணவாள மாமுனிகள் உகந்த நன்னாள்  இந்நாள். சென்னையிலிருந்து பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) வழியாக திருவள்ளூர், திருப்பதி செல்லும் பாதையில் அமைந்துள்ள ஊர் "திருமழிசை". - உலகு மழிசையும் உள்ளுணர்ந்து, உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் மாநீர் மழிசை வலிதுஎன பிரசித்தி பெற்ற இத்தலத்தில்   துவாபரயுகம் முதலாழ்வார்கள் அவதரித்த சித்தார்த்தி வருஷம் தை மாசம்  கிருஷ்ண பக்ஷம் பிரதமை திதி கூடிய மகம் நட்சத்திரத்தில்பார்க்கவ முனிவருக்கும் கநகாங்கி என்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீக்கும் குமாரராக  திருமழிசைப்பிரான் அவதரித்தார். இவர் ஸுதர்சனமென்னும் சக்கரதாழ்வாரின் திரு அம்சம். 


முக்கண் மூர்த்தியான சிவபெருமான் இவருக்கு பக்திசாரர் என திருநாமம் சாற்றினார்.  இவர் பல இடங்களுக்கு சென்று பல மதங்களையும் பரிசோதித்தவர். பேயாழ்வார் இவரை திருத்தி பணி கொண்டார்.    இவர் திருக்கச்சி யதோத்தகாரி சன்னதியில் சில காலம் எழுந்து அருளி இருந்தார்.  அப்போது பல்லவ மன்னன் இவரது சீடரான கனிகண்ணன் என்பாரிடம் தனக்கு அழியாத இளமை தருமாறு கவி பாட  ஆணையிட்டார். "நாம் மானிடம் பாடோம்" என கனிக்கண்ணன் மறுக்கவே இனி நீ இவ்வூரில் வசிக்கலாகாது என அரசன் சொல்ல - ஆழ்வார் பெருமாளிடம் "நீயும் உந்தன் பை நாக பாய் சுருட்டிக்கொள்" என பாடி ஊரை விட்டே அகன்றனராம்.   பிறகு மன்னன் தனது தவறு உணர்ந்து வேண்டிக்கொள்ள சீடனும், ஆழ்வாரும், பெருமாளும் திரும்பி வந்தனர். பெருமாளுக்கு "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்ற திருநாமமும் இவர்கள் இரவு தங்கி இருந்த ஊர் , ஓரிருக்கை எனவும் வழங்கபடுகிறது. 

இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் : 2 -  நான்முகன் திருவந்தாதி (96) திருச்சந்த விருத்தம் (120) ஆக மொத்தம் 216 பாசுரங்கள். இவரை "துய்ய மதி பெற்ற" என ஸ்ரீமணவாளமாமுனிகள் கொண்டாடுகிறார். நான்முகன் திருவந்தாதியில்   தாளால் உலகம் என்ற பாசுரத்தில் "நீளோதம் வந்து அலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்" என திருவல்லிக்கேணியை மங்களா சாசனம் செய்துள்ளார்.

தனது நான்முகன் திருவந்தாதியில் சக்கரத்தைக் கையில் கொண்ட திருமால் ஒருவன்தான் தேவன். அவன் பெருமையை  வேதம் முதலிய நூல்களால் ஆராயப்படும் பொருள், அவன் திருவடி தொழுவதே எல்லா அருளும் தர வல்லது என :

தேருங்கால்  தேவன் ஒருவனே என்று உரைப்பர்;
ஆரும் அறியார் அவன் பெருமை; - ஓரும்
பொருள்முடிவும் இத்தனையே; எத் தவம் செய்தார்க்கும்
அருள்முடிவது ஆழியான் பால்

திருத்துழாய் மாலை சூடிய திருமுடி  உடையவனான  திருமாலை, விடாது கைகள் கூப்பித் தொழுது, தியானித்து, தலை சாய்த்து வணங்கி, குளிர்ந்த பூக்கள் கொண்டு வழிபடுங்கள். உங்கள் வாய் அவனைத் துதிக்கட்டும். கண்கள் அவனையே நோக்கட்டும். காதுகள் அவனைப் பற்றியே கேட்கட்டும் - என்று 

"வாழ்த்துக - வாய்; காண்க கண்; கேட்க செவி; மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண்மலரால்- - சூழ்த்த
துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால் தன்னை
வழாவண் கைகூப்பி மதித்து"

என்று பாடிய திருமழிசை செல்வன் பக்திசாரர்  அவதரித்த நன்னாளை கொண்டாடுவோம். 

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன் 


PS : 1948ல் ஆழ்வாரின் கதை  சி. கண்ணன் பிள்ளை தயாரிப்பில்  எம் எம் தண்டபாணி, பி.வி. ரங்காச்சாரி  நடித்து திருமழிசை ஆழ்வார் என்ற பெயரில் வெளியிடப்பட்டதாம்.