For a Srivaishnavaite, Wednesday - the 10th of October 2010 is a very important day – it is Thirumoola nakshathiram in the tamil month of Aippasi. 64 decades back, on this day was born the incarnation of Adisesha, the reincarnation of Swami Ramanujacharya.
Swami Manavala Mamunigal, also known by the Thenkalai followers as Varavaramuni, Yathindra Pravanar, the Acharya was born on AD 1370 at Alwar Thirunagari near Thirunelveli.
Acharya lived on this earth for 73 years during which period he propogated the tenets of Vaishnavism by his writings and commentaries. It is believed that at the end of his year long discourse at Thiruvarangam, Swami Namperumal himself came and uttered the thanian which is now followed by the Thenkalai sect.
The 10 day celebrations are now on at Thiruvallikkeni and on 5th day (which was Deepavali day), there was grand procession of Mamunigal with Lord Parthasarathi. It has become a tradition that in Triplicane, that during those 2 hours during veedhi purappadu (procession in mada streets) fireworks will go in air in a spectacular fashion. Here are some words on Mamunigal alongwith some photos taken during the purappadu at Triplicane
With regards – Srinivasan Sampathkumar
********************************************************************************
திருவல்லிக்கேணி பெருமாள் தீபாவளி புறப்பாடு
தென்னாசார்ய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருவோணம் மிக சீரிய நாள். மன்னுபுகழ் மணவாள மாமுனிவன் அவதரித்த நாள். இந்த விக்ருதி வருடம் ஐப்பசி மாதம் 15 (01 11 2010)முதல் ஐப்பசி 24 (10 11 2010) வரை நம் ஆச்சர்ய சுவாமியின் திருநக்ஷத்திர சம்வத்சரோத்சவம் நடைபெறுகிறது. திருமூலத்தன்று (10.11.2010) சாற்றுமுறையாகும். சாற்றுமுறையன்று திருவல்லிக்கேணியில் சிறப்பாக "கைத்தல சேவை" என்று ஸ்ரீ பார்த்தசாரதி உத்சவரையும் உபய நாச்சிமார்களையும் கட்டியங்கள் முழங்க அர்ச்சகர்கள் தங்கள் கைத்தலத்தில் ஏளப் பண்ணும் அழகு பரம போக்யமானது.
ஸ்ரீ வரவர முனி என்றும் யதீந்திர ப்ரவணர் என்றும் போற்றி தொழப்படும் நம் சுவாமி கி பி 1370 ஆம் ஆண்டு கிடாரம் என்ற கிராமத்தில் அவதரித்தார். சுவாமிகள் நமக்கு அளித்தவை "ஸ்ரீ சைலேச தயாபாத்திரம்" எனும் தனியன் தவிர யதிராஜ விம்சதி, உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம் மற்றும் 19 க்ரந்தங்கள்.
திருவல்லிக்கேணியில் மாமுனிகளுக்கு பத்து நாட்களும் புறப்பட்டு நடை பெறுகிறது. வெள்ளி 05.11.10 அன்று தீபாவளி திருநாளில் பெருமாள் புறப்பாடு மிக விமர்சையாக நடந்தது. ஏரளாமான வாண வேடிக்கைகளுடன் புறப்பாட்டை ஆயிரக்கனக்க்கானோர் கண்டு களித்தனர். புறப்பாட்டின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :
மேலும் படங்களை இங்கே காணலாம் : Athul Photo album http://picasaweb.google.com/athulsri/ThiruvallikkeniDeepavali2010



