To search this blog

Wednesday, September 23, 2026

Sri Vedanthachar sarrumurai 2026 ~ அகிஞ்சனன் என்பவன் யார் ?

Sri Vedanthachar sarrumurai  2026   ~   அகிஞ்சனன் என்பவன் யார் ?

 

அகிஞ்சனன் என்பவன் ““தன்னிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவன்”!  ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் இதற்கு மிக ஆழமான பொருள் உள்ளது.  “அகிஞ்சனன் என்பது, மோக்ஷத்தை அடைவதற்கு தனக்கென எந்தச் சாதனமும் இல்லை; எம்பெருமானுடைய அருளே ஒரே ஆதாரம் என்று உணர்ந்தவன்.”

अकिञ्चननिधिं सूतिम् अपवर्गत्रिवर्गयोः ।
अञ्जनाद्रीश्वरदयाम् अभिष्टौमि निरञ्जनाम् ॥

akiñcana-nidhiṁ sūtim apavarga-trivargayoḥ |
añjanādrīśvara-dayām abhiṣṭaumi nirañjanām

 

 


Thirukachi (Kanchipuram) is a beautiful place with so many temples.  Thiruthanka is one of the 108 Divya Desams of Sriman Narayana  situated in Kanchipuram, this temple is just ½ kms away from Ashtabuyakaram divyadesam. More  significantly, this is the birth place of Sri Vedantachar.  Today – Purattasi  5, 22.9.2026  is Ekadasi – also  ‘thiruvonam nakshathiram’ in the month of Purattasi marking the birth of Sri Vedanthacharyar.   The temple is believed to have been expanded during the Medieval Cholas and Vijayanagar kings. The temple has inscriptions on its walls dating from the period of Rajaraja Chola III (1223 CE).  


இன்று  புரட்டாசி திருவோணம்.  ஸ்ரீ தூப்புல் பிள்ளை என்ற கவிதார்க்கிக சிம்மம் என்ற ஸர்வதந்திரஸ்வதந்தரர் என்ற ஸ்ரீமந்  வேதாந்தாசாரியார்  -   கிபி 1268ல் புரட்டாசி விபவ ஆண்டில்  அவதரித்தார்.  758 திருநட்சத்திரம் இன்று ! காஞ்சியில் திருத்தண்கா என்கிற திவ்யதேசம் உண்டு. 'கண்ணன் வெஃக்கா' எனப்படுகிற ஸ்ரீயதோக்தகாரி எம்பெருமான் ஸன்னிதிக்குச் சமீபத்தில் உள்ள ' தேனிளஞ்சோலையே' தண்கா (குளிர் சோலை) என்பர் பெரியோர். அதற்கருகில் இருக்கும் அக்ரஹாரத்தில்   முன்பு, உத்தமமான புரட்டாசித் திருவோண நன்னாளில் உதித்தவர் குருவான வேதாந்தாசாரியார்   எனும் வேதாந்த தேசிகன் !    

திருத்தண்கா எனும்  ‘தூப்புல்’ வேதாந்த தேசிகனின்  அவதாரஸ்தலம்.  'தூப்புல்’ தூய்மையான புல். வைதிகர்கள் உபயோகிக்கும் தர்ப்பத்தை குறிக்கும்.   உபய வேதாந்தத்துக்கும், [தமிழ், ஸம்ஸ்க்ருதம்]  என்ற இரண்டிலும் சிறந்து விளங்கியதால்  'வேதாந்தாச்சார்யர்’.  நமக்கு நல்வழி காட்டிடும் ஆசானை நாம் குரு, ஆசாரியன், தேசிகன் என்று பல பெயர்களால் குறிப்பிடுகின்றோம்.  தேசிகன் என்றால் ஆசாரியன் என்று பொருள். 

திருவரங்கனுடைய பாதுகையைப் பற்றி, பாதுகா சகஸ்ரம் என்ற தலைப்பிலே விடிவதற்குள்ளே 1000 ஸ்லோகங்களைத்  சுவாமி பாடியதால் - கவிதார்க்கிக சிம்மம் என்ற பட்டமும் இவருக்குக் கிடைத்தது. இவர்  “சர்வ தந்திர சுதந்திரர்”,  என்று போற்றப்படுகிறார்      

எவை எவற்றை உண்ணக்கூடாது என சுவாமி வேதாந்தாச்சார் எழுதிய "ஆகார நியமம்" என்ற நூல்.  பகவானுடைய அடியவர்கள் பகவத்பக்தியை வளர்ந்துக்கொள்ள ஸாத்விக ஆஹாரங்களையே உட்கொள்ள வேண்டும். சில ஆஹாரங்களை விட்டே தீர வேண்டும். எவையெவைகளை விட வேண்டும் என்று ஆசார்யர்  21 பாசுரங்களாலே காட்டியுள்ளார்.   இவற்றையெல்லாம் கடைபிடிப்பது கடினம் எனும் நல்லோர் தங்கள் ஆக்கையின் வழி உழலலாம்.  நாம் நிறுவனத்தில் டை கட்டச்சொன்னால் கட்டுவோம் !  - அதிகாரி நினைப்பதற்கு முன்பே கை காட்டுவோம் - ஆனால் நமது நல்வாழ்க்கைக்கு நியமனங்கள் பற்றி கூறினால் உதாசீனம் செய்வோம் !!   

மும்மணிக்கோவை என்பது பிரபந்தம் எனப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒரு வகையாகும். இதில், ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகளில் அமைந்த பாடல்கள் மாறி மாறி வரும். 30 பாடல்களைக் கொண்டு அமையும் இந்தச் சிற்றிலக்கியவகையில் பாடல்கள் அந்தாதி வடிவிலும் இருக்கும். ஸ்வாமி வேதாந்தச்சார் எம்பெருமான் மீது ஒரு மும்மணிக்கோவையை அளித்துள்ளார்.

Sri Venkatanathan was the  amsam of  “Thirumani” (bell).  One day, Kidambi Appular, Venkatanathan’s Maternal Uncle, took him to the “Kalakshepam”  of Guru Nadathur Ammal. On seeing Venkatanathan’s “divya thejas” (brilliance), Nadathur Ammal stopped the Kalakshepam and asked the boy to come on stage. Young Venkatanathan grew up to become an astute scholar, a preacher of Srivaishnava siddhantam.  Venkatanathan travelled to Thiruvahindirapuram and did “mangalasasnam” to Lord Deivanayagan and his consort. He then went to Lord Nrusimha’s sannidhi in Oushadagiri, sat under an “Ashwattha” tree and recited the Garuda Mantram.    He also composed  Hayagreeva Sthotra, Garuda-dhandakam, Devanayaga-panchasath, Achyutha-sadakam, and many more literary gems in future.  Swami was well versed in Sanskrit, Prakritham, Tamil and was great in debate earning the title  “Kavitarkikasimham”(A lion among poets). Of his many skills, he confronted a mason in building a well which is now seen at his thirumaligai at Thiruvahindrapuram. 

Swami Vedanthachar  lived a full and fruitful life for 102 years. In the misfortune when Islamic invaders looted Thiruvarangam, alongwith Swami Pillai Logachar, he emerged at the forefront in protecting our sampradhayam.   In the year 1369, he rested his head on the lap of his son Kumara Varadhachariar and left his mortal coil. During his lifetime, Swami lived in Karnataka for 12 long years in a place know as Sathyagalam. 





இந்த பதிவின் ஆரம்பத்தில் நாம் கண்ட பாசுரம் :

அகிஞ்சந நிதிம் ஸூதிம் அபவர்க்க த்ரிவர்க்கயோ:

அஞ்சனாத்ரி ஈஸ்வர: தயாம் அபிஷ்டௌமி நிரஞ்ஜநாம்.

தயா சதகம் என்பது திருமலை ஸ்ரீநிவாஸப் பெருமானின் கருணையைப் போற்றி வேதாந்தாச்சார்யரால்  வடமொழியில் இயற்றப்பட்ட  ஸ்தோத்திர நூல்.  இங்கே “தயை” என்பது வெறும் இரக்கம் அல்ல.  எம்பெருமானின் தயையே நம்மைப் போன்ற குறையுடைய ஜீவர்களை அவரிடம் சேர்க்கும் புருஷகார சக்தி. அதனால் தயையைத் தனி தேவதையாகவே உருவகித்து, “தயா தேவி” என்று போற்றுகிறார்.  எம்பெருமான்  ஸ்ரீநிவாஸனுடைய தயை என்னும் தேவியைத் துதித்து இயற்றப்பட்ட நூல் இது.

“வேறு புகலோ, சாதனமோ இல்லாதவர்களுக்கே பெரும் செல்வமாக இருப்பவளும், மோக்ஷத்தையும் தர்ம–அர்த்த–காமங்களையும் அளிப்பதற்குக் காரணமாக இருப்பவளும், மாசற்றவளுமான அஞ்சனாத்ரி நாதன் ஸ்ரீநிவாசனின் தயையை நான் போற்றுகிறேன்.” இதில் “அகிஞ்சன நிதிம்” என்பது மிக முக்கியமான சொல். தன்னிடம் சாதனை, ஞானம், பக்தி, தகுதி என்று எதையும் சொந்தமாகக் காட்டிக்கொள்ள முடியாத ஜீவனுக்குக் கூட, பெருமாளின் தயையே செல்வம் என வேதாந்தாசார்  கூறுகிறார்.  அகிஞ்சனன் என்பவன் “என்னிடம் எதுவும் இல்லை” என்று பொருளாதார வறுமையை மட்டும் குறிக்கவில்லை. இங்கு, என்னுடைய முயற்சி, ஞானம், பக்தி, அனுஷ்டானம், புண்ணியம் — இவற்றில் எதையும் மோக்ஷத்திற்கு உரிய சாதனமாக நான் நம்பவில்லை என்று நிற்பவனே அகிஞ்சனன். அத்தகைய ஜீவனுக்கு எம்பெருமானுடைய தயையே நிதி, அதாவது உண்மையான செல்வம்.  இதுவே பிரபத்தியில் வரும் ஆகிஞ்சன்யம். “என்னால் என்னை நான் காப்பாற்றிக் கொள்ள முடியாது” என்ற உணர்ச்சி. அதனுடன் அநன்யகதித்த்வம் — “உன்னைத் தவிர எனக்கு வேறு புகல் இல்லை” — சேர்கிறது. ஸ்ரீவைஷ்ணவ சரணாகதியின் உள்ளார்ந்த நிலை இதுவே.


At Thiruvallikkeni divyadesam, today it was periya maaddaveethi purappadu for  Vedanthachar   with    Sri Parthasarathi Emperuman. Here are some photos of Sri Vedanthachar and one close up of Sri Parthasarathi Emperuman new muthangi sevai. 

-adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

 


No comments:

Post a Comment