To search this blog

Friday, September 4, 2026

mada veethi purappadu at holy Thirumala 2008 !!

 

Thiruvengadamudaiyan mada veethi purappadu at Holy Thirumala

– taken with Konica Minolta dimage z10 camera in 8th March 2008 !!! 

 


திருமலை அருகில் செல்லும்போதே 'கோவிந்தா, கோவிந்தா' என்ற கோஷம் அதிகமாக கேட்கும்.  கைகளை உயர்த்தி எம்பெருமானை தியானித்து, மெய்மறந்து, திருமலை வாசனின் பெயர்களை நாம சங்கீர்த்தனமாக சொல்லி பாடுதல் பக்தி.  இந்த புரட்டாசி மாசத்தில், முக்கியமாக சனிக்கிழமைகளில், தெருக்களில் பலர் கோவிந்த நாமத்துடன் வளம் வருவார்.  திருவல்லிக்கேணியில் சுட்டெரிக்கும் வெய்யிலிலிலும் - திருநாமம் அணிந்து,  மாட வீதியை அங்கப்ரதக்ஷிணம் செய்பவரை சிறுவயதில் பார்த்துள்ளேன்.  

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்

மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா - திருப்பதி மலைவாழும் வெங்கடேசா !! 

அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்;

அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்

என் மனம் உருகிடவே பாடி வந்தேன்

உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன் 

.. .. பக்தி ரசம் சொட்டும் பாடல்.  படம் : திருமலை தென்குமரி   -இந்த படம்  1970 ஆம் ஆண்டு வெளிவந்தது.  ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், மனோரமா மற்றும் பலரும் நடித்து இருந்தனர்.   சில  குடும்பங்கள் சென்னையிலிருந்து திருப்பதி முதல் தென்குமரி வரை ஆன்மீக யாத்திரையாக செல்வதையும் அவர்களது பயணமுமே  திரைக்கதை.  இந்த திரைப்படத்தில்.. திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில்,  திருத்தணி முருகன் கோயில்,  மைசூர் அம்மன் கோயில் மதுரை மீனாட்சியம்மன் கோயில், கேரளா குருவாயூரப்பன் கோயில் தென்குமரி குமரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு இவர்கள் செல்வதாக படம்.  மிக நல்ல படம் - இது போன்ற படங்கள் தமிழில் கடந்த 30 வருஷங்களில் வருவதே இல்லை. காலம் மாறி விட்டது.  

திரு சீர்காழி கோவிந்தராசனின் கம்பீர குரலில் - திரு குன்னக்குடி வைத்தியநாதனின் இன்னிசையில் இந்த பாடலை கேட்டு மகிழுங்கள் 

 
S Sampathkumar
4.9.2026

No comments:

Post a Comment