To search this blog

Wednesday, January 15, 2025

Sri Andal Kanu purappadu @ Thiruvallikkeni 2025

Sri Andal Kanu purappadu @ Thiruvallikkeni 2025

At Thiruvallikkeni and in all other divyadesams, in the month of Margazhi it is ‘Dhanur vizha’ – every day there is rendering of Sri Andal’s thiruppavai (there are discourses too on Thiruppavai and so many places by learned people).  In this month occurs the 9 day Neeratta uthsavam and on Bhogi there is Thirukalyana mahotsav of Andal with Namperumal and the next Sankranthi day, there is Urgola uthsavam.   

The divine  month of Margazhi is over – Andal Neeratta Uthsavam is complete – after Bhogi Thirukalyanam and Sankranthi urgola uthsaam – today is Kanu parvettai.   In Tamil Nadu, Pongal is a great festival – after Bhogi, Pongal, 3rd day is celebrated as Kanum Pongal.  After Sankranthi, comes ‘Kanu Uthsavam’ ~ in the morning there is purappadu of Andal and in the evening Sri Parthasarathi Kanu parvettai purapapdu.      



மார்கழி மாதம் கண்ணனுக்கு பிடித்த மாதம்.  தனுர் மாதம் என கொண்டாடப்படும் இம்மாதத்தின் எல்லா நாட்களிலும் ஸ்ரீஆண்டாளின் திருப்பாவை சேவிக்கப் பெறுகிறது. மேலும் திருப்பாவையின் உரை உபன்யாசங்களும் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பெறுகின்றன. மார்கழியில்  ஆண்டாள் நீராட்ட உத்சவம் ஒன்பது நாட்கள் சிறப்புற நடைபெறுகிறது.  போகி அன்று திருக்கல்யாணமும், சங்கராந்தி அன்று ஊர்கோல உத்சவமும், மறுநாள் காலை கனு புறப்பாடும் ஆண்டாளுக்கு விமர்சையாக நடைபெறுகிறது.  காலை ஸ்ரீஆண்டாள் நீராட்ட மண்டபத்தில் திருப்பாவை சாற்றுமுறை நடந்து,  பிரசாதங்களுக்கு பின் ஹம்ச வாகனத்தில் புறப்பாடு கண்டு அருள்கிறார்.    

பொங்கல் முடிந்த மறு நாள்  கனுப்பண்டிகை கொண்டாடி, பெண்கள் தங்கள் சகோதரர்கள் நலனை வேண்டி புள்ளினங்களுக்கு  விருந்து வைக்கும் வழக்கம் உள்ளது. நம் பாரதத்தில் கொண்டாடப்படும் பல பண்டிகைகள் உறவுகள் சிறக்க செய்யும் வழிப்பாட்டு முறைகள்.  

அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்ததாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை  படிப்பவர்கள், உயர்ந்த தோள்களையுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர். 

Here are some photos taken during Sri Andal kanu purappadu in Hamsa vahanam this  morning.   

~ adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar                                              
15.1.2025   













  

No comments:

Post a Comment