திருவல்லிக்கேணி
ஒரு அற்புத திவ்யதேசம். பெரிய உத்சவங்கள், பஞ்ச பர்வங்கள், ஆழ்வார் ஆசார்யர்
சாற்றுமுறை என பலப்பல புறப்பாடுகள் உண்டு. எம்பெருமான் திருவீதி உலா ஒரு
மகோன்னத சமயம். பெருமாள் புறப்பாடு கண்டருளும்போது ஏதேனும் கைங்கர்யம் செய்யலாம்
~ அல்லது வெறுமனே பெருமாள் உடனே நடந்து வரலாம். அவர் கூடவே வந்து அவரது
அற்புத தேஜஸ்ஸை கண்டு ரசித்து, ஆனந்தப்படலாம். எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி அழகன்.
இந்த திருமாமணி வண்ணனுடைய தேஜஸ் அளவிடமுடியாதது.
கோதை பிராட்டி தனது நாச்சியார்
திருமொழியில் உரைத்தது:
** பீதக
வாடை உடைதாழப், பெருங்கார் மேகக்கன்றேபோல்*
வீதியார வருவானை, விருந்தாவனத்தே
கண்டோமே **
யுக புருஷனான ஸ்ரீகிருஷ்ணன்,
ஆயர்களோடு, தனது மஞ்சள் பட்டாடை தாழ, ஒரு பெரிய கார்மேகக் கன்றுபோல, வீதியில்
நிறைந்து வரும் அவனை, விருந்தாவனத்திலே கண்டதாய் மகிழ்கிறாள்.
இன்று தை மாச ஏகாதசி - கடல் அலைகள் ஆர்ப்பரிக்கும், திருவல்லிக்கேணி வீதி தனிலே,
ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் அற்புதமான பட்டாடை உடுத்தி, மிக அழகிய மலர் மாலைகள்
அணிந்து, திருவீதி வலம் வந்து, பக்தர்களுக்கு அற்புதமான விருந்து அளித்தார்.
இன்று பெருமாள் அணிந்து இருந்த நீல வண்ண மலர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன. பொதுவாக திவ்யதேச எம்பெருமான்களுக்கு, மணமுள்ள மலர்கள் மட்டுமே அணிவிக்கப்பெறுகின்றன. இன்றோ எம்பெருமான் நீல நிற சாமந்தி பூக்கள், அவற்றின் மேல் தவழும், இறுக கட்டிய நந்தியாவட்டை மொட்டுக்கள் என மலர்மாலை சிறப்புற திகழ்ந்தது.
Today 25.01.2025 is Thai 12 – Krishnapaksha Ekadasi – it is all about Sri Parthasarathi Perumal purappadu and the floral garlands that added to His beauty.
Marigold (Samanthi - சாமந்தி பூ) plant is renowned for its vibrant orange and yellow blossoms, this cheerful perennial not only enhances the aesthetic appeal of your outdoor space but is regarded as healthy too.
Tagetes is a genus of 50 species of annual or perennial, mostly herbaceous plants in the family Asteraceae. They are among several groups of plants known in English as marigolds. The genus Tagetes was described by Carl Linnaeus in 1753. Originally called cempōhualxōchitl, by the Nahua peoples, these plants are native to Central and Southern Mexico and several other Latin American countries. Some species have become naturalized around the world. One species, T. minuta, is considered a noxious invasive plant in some areas.
Roses are red, but science could someday turn them blue. That’s one of the possible future applications of a technique researchers have used to genetically engineer blue chrysanthemums for the first time. Chrysanthemum marigold is a variety in chrysanthemum species in which flowers looks like that of marigold flower in full bloom. Chrysanthemum flower symbolizes fidelity, optimism, joy and long life. These flowers bloom in various forms, and can be daisy-like, decorative, or buttons. Chyrsanthemums come in an array of colours, including pink, yellow and red. But all it took to engineer the truly blue hue — and not a violet or bluish colour — was tinkering with two genes, scientists report in a study published in Science Advances stated.
True blue flowers are a rarity in nature—they occur only in select species like morning glories and delphiniums. However, researchers created a genuinely blue chrysanthemum by adding two genes to the normally pink or reddish flower. The advance could be applied to other species—and it may mean that florists wanting to hawk blooms of blue will no longer have to dye them.
Chrysanthemums are flowering plants of the genus Chrysanthemum in the family Asteraceae. The genus Chrysanthemum are perennial herbaceous flowering plants, sometimes subshrubs.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
25.1.2025
No comments:
Post a Comment