To search this blog

Sunday, January 22, 2023

Thiruvallikkeni Thai Amavasai 2023 - "Apocalypse" - what ! or when ??

Set in the eponymous year, the film depicts a dystopian world in which humanity is close to extinction. A theme that exists in every religion – that World will come to an end one day, may be due to extraordinary natural forces ! With the complete disappearance of the trees, the natural oxygen doesn’t exist any longer. People must rely on its synthetic variation, but because of its exorbitant price, the poor can hardly afford it. The first half of the film takes place in the only city in the world in which electricity is still available.  The protagonist’s wife  Xanthe, has a condition known simply as The Sickness, which gradually makes a victim’s body unable to process the artificial oxygen. Ethan and Jude work at the world’s only active nuclear power plant. Ethan’s apparently normal if bleak existence is interrupted when the corporation that he works for tells him that he is needed to save the World. 



இன்று 21.1.2023 - தை  அமாவாசை.!  சென்ற வருஷ  தை  அமாவாசை நன்னாள் (31.1.2022)  திருவல்லிக்கேணி வாசிகளுக்கு, வாழ்வில்  ஒரு இனிய மறக்கமுடியாத தருணம்.  பலமாதங்கள் பிறகு அன்றுதான்  மாலை திருவீதி புறப்பாடு  - ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் குலம்குலமாக பரம்பரையாக வழிபட்டுவரும் நம் பார்த்தசாரதி எம்பெருமான் திருக்கோவிலுக்கு வெளியே பெரிய மட வீதி புறப்பாடு கண்டருளி,  திவ்யதரிசனம் அளித்தார்.  மாட வீதிகளில் மக்கள் ஆனந்தமயமாக நின்று தரிசித்து இன்புற்றனர்.  

 

In our sampradhayam – there are yugas and at the end of Kali Yuga, the World will be wiped out of its living things by a big monstrous wave. Apocalypse (from Ancient Greek   (apokálupsis) 'revelation, disclosure') is a literary genre in which a supernatural being reveals cosmic mysteries or the future to a human intermediary. The means of mediation include dreams, visions and heavenly journeys. Eschatology, from Greek eschatos, last, concerns expectations of the end of the present age, and apocalyptic eschatology is the application of the apocalyptic world-view to the end of the world, when God will punish the wicked and reward the faithful.  An apocalypse will often contain much eschatological material.

"Apocalypse" has come to be used popularly as a synonym for catastrophe, but the Greek word apokálypsis, from which it is derived, means a revelation.  It has been defined as "a genre of revelatory literature with a narrative framework, in which a revelation is mediated by an otherworldly being to a human recipient, disclosing a transcendent reality which is both temporal, in that it envisages eschatological salvation, and spatial, insofar as it involves another, supernatural world." 

 

ஊழி - உலகம் அழியும் .. .. அந்தகாரம் எனும் இருள் எங்கும் சூழும் .. .. உலகம் அழிவது பற்றிய குறிப்பு ஒவ்வொரு சமுதாயத்திலும் உள்ளது.  ஆழிப்பேரலை எனும் மிக பெரிய வெள்ளத்தால் உலகம் அழியும் என்பது பல சமயங்களின் கணிப்பு.    உலகம் அழிவது யாருக்கும் சம்மதமில்லை, யாரும் விரும்பவும் மாட்டார்கள். இருந்தாலும் அப்படி ஓர் அழிவு வருமானால் என்ன செய்வது? எங்கு போவது? எப்படி இந்த அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பது? இதுவரை ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த செல்வத்தை எல்லாம் என்ன செய்வது? அன்பான குழந்தைகள், ஆதரவான உறவுகள், அறிவார்ந்த நட்புகள் எல்லாரையும் விட்டுப் பிரிய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதா? உயிர்மேல் ஆசையில்லாதவர் யார்? மற்ற மற்ற உயிரினங்களைவிட மனிதர்களுக்கு உயிர்மேல் ஆசை அதிகம். மனித வாழ்க்கை என்பது சுமார் 100 ஆண்டுகளாகும். மற்ற உயிரினங்களுக்கு ஆயுள் குறைவுதான்; இருந்தாலும் மனிதன் ஊழி ஊழிக்காலம் உயிர் வாழ்வதைப்போலவே எண்ணிக் கொண்டு பேராசையோடு செல்வங்களைச் சேர்க்கிறான். உலகம் அழியப் போகிறதாமே என்று கேள்வி கேட்டுக்கொண்டு அமைதி இல்லாமல் அல்லாடுகிறான்; தடுமாறுகிறான்.

மனிதர்கள் இரவு உறங்குவர்.  காலை எழுந்து இருப்பர் - சில சிறு வேலைகளுக்கு பின்னர் உத்யோகம் செல்வர், காலை, மதியம், இரவு உணவு உண்ணுவர்.  செல்வம் தேடுவர், ஈட்டுவர் - அந்த பணத்தை தேடி பேராசையுடன் ஓடுவர் .. .. மறுபடி இரவு, மறுபடி பகல் .. .. 2020 ஆண்டு ஜனவரி மாதத்தில் எங்கோ வூஹான் என்ற சீன தேசத்திலே புது வியாதி வந்துள்ளதாகவும், மக்கள் கொத்துக்கொத்தாக மடிவதாகவும் செய்தி பரவியது.  நாம், நம்மில் பலர் நினைத்தது - இந்தியா போன்று பல்வேறு கடின சூழல்களில் வாழ்பவர்களை இவை ஒன்றும் செய்யா!  

ஒரு நாள் - மெரீனா கடற்கரை மூடப்பட்டது.  இந்திய அரசாங்கம் ஒரு நாள் அடையாள கட்டுப்பாட்டை கொண்டு வந்தது.  மார்ச் மாதம் 20ம் தேதி, 2020  முதல் திருக்கோவில்கள் மூடப்பட்டன.  இரண்டொரு நாட்களில், ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.  கொரோனா நோய் பரவியது ! - மக்கள் பலர் மாண்டனர்.  பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பிரளயம் வந்து உலகம் அழிவது பற்றி புராண இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன. கடல்கோள் ஏற்பட்டு குமரிக்கண்டம் அழிந்ததைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் சுட்டுகின்றன.   அண்மையில் ஏற்பட்ட ஆழிப் பேரலை என்னும் சுனாமியை நேரில் பார்த்துவிட்டதால் மனித குலம் மேலும்  கவலைப்பட ஆரம்பித்தது.

மார்ச் மாதம் 20ம் தேதி, 2020  முதல் மூடி இருந்த கோவில்கள் செப்ட் 7 முதல் பக்தர்களுக்கு திறந்தன.  நவம்பர் 30 திருக்கார்த்திகை தீபம் - திருப்பாணாழ்வார் சாற்றுமுறை அன்று ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோபுர வாசல் தாண்டி எழுந்துஅருளினார்.  6.1.2021  முதலாக ஸ்ரீஆண்டாள் திருவீதி புறப்பாடு.  சேவித்த பக்தர்கள் அனைவருக்கும் ஆனந்தம்.  சென்ற வருஷ  தை அமாவாசை ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் திருவீதி புறப்பாடு கண்டருளி, நம்மை ரக்ஷித்தார்.






In the year 2020,  last purappadu for Sri Parthasarathi was on Masi magam [9.3.2020]; then there was Gajendra varadhar thavanothsavam, Sri Azhagiya Singar thavanothsavam (3 days)    15.3.2020   –   then after Corona lockdown – there could be  no veethi purappadu for 297  days !. 2021 was no different  .. .. at Thiruvallikkeni there were to be two brahmothsavams in Feb & Mar, then as the  ThiruAvathara Uthsavam of the Greatest Acharyar ~ Nammiramanusar   – started (9.4.2021) – in the morning it was ‘Thanga pallakku’ and in the evening ‘Mangalagiri’ – and  no purappadu after that for the whole year. In between Sri Parthasarathi did come out on Karthigai day and lit chokkapanai but no mada veethi purappadu – and during Neeratta uthsavam to there was purappadu of Andal from Temple till neeratta mantap only.  Then  after  another 297 days  [9.4.2021 – 31.1.2022] – there was thiruveethi purappadu of Sri Parthasarathi perumal on Thai Amavasai day. 

அடிவண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன்

படிவண்ணம் பார்க்கடல் நீர் வண்ணம், - முடிவண்ணம்

ஓராழி வெய்யோன்  ஒளியும் அஃது அன்றே

ஆராழி  கொண்டாற்கு அழகு 

முதலாழ்வார்கள் உலகளந்த சரிதையிலே மிகவும் ஆழ்ந்திருப்பர்களென்பது ப்ரஸித்தம்.  எம்பெருமானுடைய திருமேனியை உகப்பது  போலே, அவனது திருவடித்தாமரைகளையும் உகப்பர் பெரியோர்.  பேயாழ்வாரின் அமுத வரிகளிலே :  முன்பு உலகங்களை அளந்த  பெருமானுடைய  திருவடிகளின் நிறம், அன்றலர்ந்த  தாமரைப்போலே சிவந்திராநின்றது; திருமேனியின் நிறம் -  பூமியைச் சூழ்ந்த கடல் நீரின் வண்ணம் போல் கறுத்துக் குளிர்திராநின்றது.;  அவன் அணிந்த கிரீடத்தினுடைய நிறம் -  ஒற்றைச்சக்கரமுடைய தேரிலேறின ஸூர்யனுடைய நிறம் போன்றது, அப்பெருமானுடைய  தேஜஸ் அந்த ஸூர்யப்ரகாசம் போன்றதேயன்றோ ~ என பொன்னிவர் மேனி மரகதப்பெருமானின் விசேஷனாதிகளை சிலாகிக்கின்றார்.  

இப்பூவுலகில் தீமைகள் எல்லாம் நீங்கி, கொரோனா போன்ற நோய்கள் பறந்தோடி - நாம் அனைவரும் சந்தோஷத்துடன் வாழ எம்பெருமானை பிரார்த்திப்போம்.  இன்று ஒரு நல்ல தொடக்கம்.  இனிவரும் நாட்களில் எந்த குறைபாடும் இல்லாமல் உத்சவங்கள் சிறப்புற நடக்க அவ்வெம்பெருமானையே வேண்டுவோம். 








 

The description in first para is that of Movie titled ‘2067’  Australian science fiction film set in that year and released in 2020,  directed and written by Seth Larney from a treatment by Gavin Scott Davis   starring Kodi Smit-McPhee and Ryan Kwanten.

இன்றைய 21.1.2023  தை  அமாவாசை புறப்பாட்டின் சில புகைப்படங்கள் இங்கே ! 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
21.1.2023 

3 comments:

  1. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. அத்புதமான எழுத்து. அடியேன் தாசன். என்ன இன்னல் வந்தாலும் எங்கள் பார்த்தசாரதி இருக்கிறான் என்ற திருவல்லிக்கேணிக் காரர்கள் நம்பிக்கை அடிநாதமாய் இருக்கும் அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. adiyen dasan, comments from learned people like you makes me feel happy - S. Sampathkumar

      Delete