To search this blog

Friday, September 24, 2021

Purattasi Sani - Sri Azhagiya Singar 2021 - கால சக்கரத்தோடு வெண்சங்கம் கையேந்தினாய்,

Today 25.9.2021 is second Saturday in the month of Purattasi.  For every Purattasi Sani, there would be grand periya mada veethi purappadu of Sri Azhagiya Singar at Thiruvallikkeni, but sadly, due to Corona restrictions placed by the Govt, there would be no purappadu and we cannot go inside Temple and have His darshan too.  Sri Thelliya Singar in His purappadu coming out of Western Gopuram – and having darshan of His Sangu Chakram would rid us of all sins, diseases and difficulties – we can now pray to Him to provide that opportunity sooner !! 

வாழ்க்கையில் எத்தகைய இடர் படினும் நமக்கு அருமருந்து நம் கோவிந்தனே !!  பூவுலகில் எப்பொழுது தர்மம் தலை சாய்ந்து அதர்மம் பரவுகிறதோ, அப்போதெல்லாம்  எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன் தர்மத்தை நிலைநாட்ட  திருவவதாரம் செய்கிறார்.   துவாபர யுகத்தின் முடிவில் பூவுலகில் அதர்மங்களும், அக்கிரமங்களும் கோரத் தாண்டவம் புரியத் தொடங்கின. மண்ணுலகில் வாழும் மனிதர்கள் அறம் மறந்து, புண்ணியமிழந்து, பாவக்குழியில் வீழ்ந்து உழன்றனர். இதனால் பண்பும், பக்தியும், அன்பும், அறமும் மங்கத் தொடங்கின.  உலகத்தோரைக் காக்க ஒருத்தி மகனாகப் பிறந்து, ஒருத்தி மகனாக வளர்ந்த கண்ணன் புராணம் மஹாபாரதம் எனும் இதிகாசம்.    பிறக்கும்போதே சங்கு-சக்கர தாரியாக நான்கு திருக்கரங்களுடன் பிறந்தவன் கண்ணன். கருமை நிறத்துடன் பிறந்த கண்ணனே, மூவுலகிற்கும் ஞான ஒளி காட்டும் தீபப்பிரகாசம்! 



இன்று புரட்டாசி சனி இரண்டாம் வாரம்.  திருவல்லிக்கேணியில் ஸ்ரீ அழகியசிங்கர் புறப்பாட்டை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு களித்திருப்பர் .. .. அய்யகோ, அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் புறப்பாடும் கிடையாது; நாம் திருக்கோவிலுக்கு சென்று  சேவிக்கவும் இயலாது !!  - இந்நிலை என்று மாறும் !!

எம்பெருமானை பல்வேறு திவ்யநாமங்களால் கூவி மகிழ்கிறோம் .. .. 'சங்கு சக்ரதாரி' !  - திருவாழி திருச்சங்குகளைக் கையிலேந்தினவனே! என்றும், பிரளயாபத்திலே உலகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்து ரகூஷித்துப் பிறகு வெளிப்படுத்தினவனே! என்றும், நாராயணனே! என்றும் இப்படிப் பலவற்றையுஞ் சொல்லி அழைக்க ஓடோடி வந்து பக்தர்களை காப்பவன் அவன். 






இதோ இங்கே சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் ஒன்று : 

கால சக்கரத்தோடு வெண்சங்கம்  கையேந்தினாய்,

ஞாலமுற்றும்  உண்டுமிழ்ந்த நாராயணனே என்றென்று,

ஓலமிட்டு நானழைத்தால்  ஒன்றும் வாரா யாகிலும்,

கோலமாமென் சென்னிக்குன் கமலம் அன்ன குரைகழலே. 

பக்தர் தம்மை காக்க, பகைவரையழிப்பதில்  யமன் போன்ற-  அழகிய திருக்கரங்களிலே  திருவாழியோடுகூட  வெளுத்த சங்கத்தை   தரித்திருப்பவனே!; உலகமுழுவதையும்  ஒருகால் விழுங்கி மற்றொரு கால் வெளிப்படுத்தின ஸ்ரீமன் நாராயணனே  என்று  பலவாராகவும்  சொல்லி,  கூப்பிட்டு நான் அழைத்தால்  நீ சிறிதும் வந்தருளாமற் போனாலும்,  உன்னுடைய தாமரை மலர்போன்ற ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடிகள் எனது தலைக்கு அலங்காரமாகநின்றது, என எம்பெருமானின் பெருமைகளை பாடி ஆனந்திக்கின்றார் நம் சடகோபன்.

Reminiscing the good olden days, here are some photos of Purattasi sanikkizhamai  purappadu of Sri Azhagiya Singar at  Thiruvallikkeni divyadesam on 3.10.2015.    

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
25th   Sept. 2021.
  

பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை  களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.      










1 comment: