To search this blog

Tuesday, June 1, 2021

Beyond Universe ! .. .. Sree Paramapada Nathar

Sri Paramapadha Nadhan is the form in which Emperuman Sriman Narayana is seated at Paramapadham beyond Universe to which we humans cannot go !


சில மாதங்கள் முன்பு இவ்வுலகம் சாதாரணமாக இருந்தபோது, பற்பல திவ்யதேசங்களுக்கு சென்று எம்பெருமான்களை சேவித்து, நம்மால் இயன்ற கைங்கர்யங்கள் செய்து வந்தோம். இப்போது திருக்கோவிகளுக்குள்  பக்தர்களுக்கு அனுமதி இல்லை. எம்பெருமான் தரிசனமில்லை. வீட்டில் நம் பூஜைகள் தொடர்கின்றன. 

இவ்வையகமே  நிலையற்றது.  ஸ்ரீவைணவர்கள் விரும்புவது என்ன ~ 'வீடு பேறு' - எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் உறையும்  இடமான பரமபதம் சென்று, பரமபதநாதன் வீற்று இருக்குமிடத்திலே அத்தாணி சேவைகள் செய்வதே !.   பூலோகத்துக்கு அப்பாற்பட்ட பரமபதம் எனும் திருப்பதியிலே - எம்பெருமான் பரமபத நாதனாக வீற்றிருந்த திருக்கோலத்தில் , பெரிய பிராட்டியுடன்  அநந்தாங்க விமான நிழலில் சேவை சாதிப்பார்.  இந்த க்ஷேத்திரத்தின்  நதி, விரஜா நதி என்பர்.  அனந்தன், கருடன், விஷ்வக்சேனர், முதலான நித்ய சூரிகளும், முக்தர்களும் இங்கே கைங்கர்யங்கள் செய்வார்கள்.   எம்பெருமானுடைய ஐந்து நிலைகளில் - பர; வ்யூஹ; விபவ; அர்ச்சை ;  அந்தர்யாமி நிலைகளில் பரத்வம் நிறைந்து நிற்குமிடம் 'திருபரமபதம்".  



The universe  is all of space and time and their contents,  including planets, stars, galaxies, and all other forms of matter and energy. The Big Bang theory is the prevailing cosmological description of the development of the universe. According to estimation of this theory, space and time emerged together 13.8  billion years ago, and the universe has been expanding ever since. While the spatial size of the entire universe is unknown, the cosmic inflation equation tells us that it must have a minimum diameter of 23 trillion light years, and it is possible to measure the size of the observable universe, which is approximately 93 billion light-years in diameter at the present day.

It's one of the most compelling questions you could possibly ask, one that humanity has been asking since basically the beginning of time: What's beyond the known limits? What's past the edge of our maps? The ultimate version of this question is, what lies outside the boundary of the universe? The answer is …  not a straight one but very complex compounding one.  Perhaps the first requirement is to define ‘what is Universe’.  It could mean  all the things that could possibly exist in all of space and time, then there can't be anything outside the universe.  

The universe is everything. It includes all of space, and all the matter and energy that space contains. It even includes time itself and, of course, it includes you. Earth and the Moon are part of the universe, as are the other planets and their many dozens of moons. Along with asteroids and comets, the planets orbit the Sun. The Sun is one among hundreds of billions of stars in the Milky Way galaxy, and most of those stars have their own planets, known as exoplanets.

The Milky Way is but one of billions of galaxies in the observable universe — all of them, including our own, are thought to have supermassive black holes at their centers. All the stars in all the galaxies and all the other stuff that astronomers can’t even observe are all part of the universe. It is, simply, everything. Cosmologists aren't sure if the universe is infinitely big or just extremely large. To measure the universe, astronomers instead look at its curvature. The geometric curve on large scales of the universe tells us about its overall shape. If the universe is perfectly geometrically flat, then it can be infinite. If it's curved, like Earth's surface, then it has finite volume.

Scientists now know the universe is expanding, at an ever-increasing rate. So if it's ballooning, what is it growing into? In other words, what is beyond the known universe? Defining this "beyond the universe" would imply that the universe has an edge. And that's where things get tricky, because scientists aren't certain if such a drop-off exists.




ஸ்ரீவைகுந்தத்தின் எம்பெருமான் வீற்றிருக்கும் பரமபதத்தில் நிலவும்  இன்பம் எப்படி இருக்கும் ?   அதை சுகித்தவர் வந்து சொல்ல மாட்டார்கள் ! வெறும் வார்த்தைகளால் சொல்ல இயலாத, மறுபடியும் பூவுலகிற்கு வந்து சொல்ல  முடியாத அந்தப் பேரின்பம் ஈடு இணையில்லாதது அல்லவா?  எம்பெருமான் திருவடிகளில் மலர்களைத் தூவி, அவன் உகக்கும்படி அனைத்து கைங்கர்யங்களும் செய்து  அடிமை செய்தவர்களே விண்ணாள்பவர்.  இதோ திருமழிசைப்பிரானின் நான்முகன் திருவந்தாதியில் இருந்து ஒரு பாசுரம் :

வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான்

பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், - மேல்திருந்த

வாழ்வார் வருமதி பார்த்து  அன்பினராய், மற்றவர்க்கே

தாழ்வாய்  இருப்பார் தமர். 

பரமபதத்தில்  பெருமை பொழிய வீற்றிருந்து  ஆட்சிசெய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள், திருவேங்கடமுடையான் பக்கலில் பலவகைப்பட்ட மலர்களை நன்றாக அவன் உகக்கும்படி  ஸமர்ப்பித்தவர்களே ஆவார்கள்.  எம்பெருமானுடைய திருவுள்ளத்தில் ஓடுகின்ற கருத்தையறிந்து பக்தியை உடையவர்களாய் அந்த எம்பெருமானுக்கே அடிமைப்பட்டிருப்பவர்களுக்கு,  அடிமைப்பட்டவர்கள்  முன்னடிகளிற் சொல்லப்பட்டவர்களிற் காட்டிலும் விலக்ஷணராக வாழ்பவராம்.  எம்பெருமானுக்கு கைங்கர்யங்களும் அவனடியார்களுக்கு கைங்கர்யங்களுமே ஸ்ரீவைணவர்களாகிய நமக்கு உகப்பு. 

Reminiscing the near past, in the evening of Masi Magam on 27.2.2021  there was grand periya mada veethi purappadu in Sesha vahanam.  In Sesha vahanam it is always Sri Paramapadanathar thirukolam  and here are some photos of Sri Parthasarathi Perumal purappadu to vahana mantapam as Paramapadha Nathar.

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30th May 2021.







1 comment: