To search this blog

Friday, July 24, 2020

Thiruvadipuram @ Thiruvallikkeni - live streaming 2020


A great day today  (24.7.2020) ~ the concluding day of Andal Uthsavam – Thiruvadipuram.  இன்று 'திருவாடிப்பூரம்,' மிகச் சிறந்த நன்னாள் !  ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தினம்.     ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார்  பெண்பிள்ளையாய், நந்தவனத்தில், துளசி மலரில் பூமிப்பிராட்டி அம்சமாய் தோன்றிய கோதைப் பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த  பிரபந்தங்கள்  'திருப்பாவை; நாச்சியார் திருமொழி".

  ~ the asterism of the day marks fragrance as our Acharyan Sri Manavala Mamunigal says :

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மை, ஒரு நாளைக்கு
உண்டோ? மனமே உணர்ந்து பார், ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு.


While pharma firms race to develop a vaccine to treat the coronavirus disease, the number of people infected with Covid-19 has crossed over 15 million. A total of 15,439,456 have so far contracted the disease while 631,926 fatalities have been recorded across the globe, according to latest figures released by Johns Hopkins University.  The United States continued to remain the worst-affected followed by Brazil and India.


The number of fresh Covid-19 cases in Tamil Nadu surged to a highest-ever 6,472 cases on 23.7.2020, which also saw 88 deaths taking the cumulative toll to 3,232.
With the state permitting pooled testing (RT-PCR) in 21 districts, the number of people tested increased to 60,375 on Thursday compared to 58,475 on Wednesday and 50,055 on Tuesday. The number of active cases rose from 51,344 on Tuesday to 52,939 on Thursday. “Our cure rate has been very good. At least seven out of ten people recover in about two weeks,” said health secretary J Radhakrishnan. In the last three days, 15,085 people have been discharged. “We still have one of the lowest mortality rates in the country,” he said.  With 1,336 cases, hotspot Chennai continued to report the maximum number of cases, followed by its neighbour Tiruvallur (416). Chennai’s neighbours Chengalpet (375), Kancheepuram(330) and Tiruvallur(416) together reported 1,121 cases. Ranipet had 214, Tiruvannamalai 193, Kallakuruchi 134, Vellore 117, and Villupuram 112. This took the total number of fresh cases in the region to 2,457 and active cases to 22,779.

With unabated rise in the coronavirus cases, the Centre has asked all states to stay away from organising large congregation, ensure social distancing and webcast the Independence Day events. In an advisory, the Home Ministry said Covid warriors like doctors, health and sanitation workers should be invited in the ceremony as a recognition of their service of battling the pandemic. It said some people who have recovered from the infection might also be invited. The Covid-19 tally in India rose to 12,87,945 on Friday after 49,311 fresh cases were reported within a span of 24 hours. The Centre is today scheduled to hold a video conference with eight states, which it views as a “cause of concern”, to check the spread of the virus.  Meanwhile, no school children will participate in the Independence Day celebrations this year. “At the Red Fort, instead of the 900-1,000 invitees every year, around 250 people will be present as the Prime Minister addresses the nation,” an official with the Archaeological Survey of India (ASI) told The Indian Express. The final list will be prepared by the Defence Ministry.



Today is Thiruvadipuram ~ the birth celebrations of Kothai Piratti Andal.  AT Thiruvallikkeni, thirumanjanam of Sri Andal and Sri Parthasarathi took place this morning occurred and through live streaming all were able to have darshan. One’s heart cries in not being able to have darshan of Emperuman – all thirukovils have been closed from 20.3.2020 in the State but in the morning there was an announcement of another religious function occurring and this was made in the presence of Dist Collector and Police High Official – all in the Secular state.

திருவல்லிக்கேணி திருவாடிப்பூர சிறப்பு நிகழ்ச்சிகளை இன்று இணையத்தில் கண்டு அனைவரும் களித்தோம். நான்கு மாதங்களாக பெருமாளை கண்ணுறாத நமக்கு இது ஒரு விருந்து.  எனினும் இதை பாக்கியம் என கொண்டாடும் நாம்  - உண்மையில் இந்நிலை அவநிலை என்பதன் உணர்ந்து,  நாம் மிக மிக வருத்தமுறவேண்டிய விஷயம்.  கடந்த ஆண்டை நினைத்து பாருங்கள்.  திருவல்லிக்கேணியில் மாலை சாற்றுமுறை முடிந்து தீர்த்த பிரசாதம் பெறுவதற்கு ஆயிரக்கணக்கானோர் குழுமி இருப்பார்கள்.  பிறகு ஒரு அற்புத சேர்த்தி புறப்பாடு - ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளும் ஆண்டாளும் ஏக ஆசனத்தில், ஒரே கேடயத்தில் எழுந்தருளும் புறப்பாடு நடைபெறும்.  இவை எதுவும் இப்போது நமக்கு இல்லையே !  இந்நிலை என்று மாறுமோ ? - கடைகள், அலுவலகங்கள், தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்பு எல்லாம் நடைபெறலாம்,  ஆனால் திருக்கோவில்களில் மட்டும் பெருமாள் சேவிக்க பக்தர்களுக்கு தடை .. ..



சென்ற வருடம், இந்த புறப்பாடுகளை கண்டு ஆனந்தித்தோம்.   கோதைப்பிராட்டி தனது நாச்சியார் திருமொழியில் அனுபவித்தது போல " மழை திரண்டு பொலியும் கார்மேகத்தைப் போன்ற எம்பெருமானது வடிவழகு, நம் அனைவரையும் மயக்கி, அவன்பக்கல் மென்மேலும் மையலுற வைக்கிறது. எம்பெருமானின் வடிவழகையும், ஆண்டாள் நாச்சியாரின் அழகையும் வெளிப்படுத்தும் சில படங்கள் இங்கே : திருவல்லிக்கேணி திருக்கோவில் உத்சவ நேரடி ஒளி பரப்பில் இருந்து. [all photos in this post  captured in camera from the live streaming on TV]

ஆண்டாள் பிறந்ததனால் கோவிந்தன் வாழும் ஊரான வில்லிபுத்தூர் பெருமை பெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் மண்ணை மிதித்தாலே நமது அனைத்து பாவங்களும் விலகும்.  ஆண்டாள் பிறந்த இந் நன்னாளில் திருப்பாவை முதலான திவ்யப்ரபந்தங்களை பாடி திருமால் அடியார்களை மகிழ்வித்து, ஸ்ரீமான் நாராயணின் அருள் பெறுவோமாக !!

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24.7.2020








No comments:

Post a Comment