To search this blog

Saturday, April 19, 2014

Thiruvallikkeni Nachiyar Thirukolam of Sri Parthasarathi 2014

Today,  19th April 2014, is the 5th day of Sri Parthasarathi Swami Brahmothsavam at Thiruvallikkeni divyadesam.  Sri Parthasarathi is our Emperor ~ the most beautiful sundara purushan.... today  Perumal enraptured us  in “Nachiyar Thirukkoalam” – dressed as Ezhilmigu Thayar in a grand sitting posture.....

.....  the beautiful women of Thiruvallikkeni were circling around to have darshan of Him, look and envy the best of silk saree tastefully worn  and one remarked on the ‘big thirumangalyam’ that was adorning teh Nachiyar.  It was Sri Parthasarathi  in “Nachiyar Thirukkoalam” – dressed as Ezhilmigu thayar having purappadu  in a palanquin.

Srimannarayana- the ever merciful Lord is always our esteemed protector. He is our Rakshaka. He is glorified in the Vedas as the Supreme entity. He is "Veda Mudalvan". The sublime beauty and oozing benevolence are exceptionally visible in the Thirumugam [face] of Perumal – Nachiyar. Here are some photos taken during the morning purappadu

With regards – S. Sampathkumar.

ஸ்ரீ பார்த்தசாரதி கம்பீரம் மிக்கவர். அவரது அழகு சௌந்தர்யம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது. கருத்துக்கு மிக எளியனான அப் பெருமாளின் கருணை மிகுந்த திருக்கோலத்தை காண பக்தர்களுக்கு ஆசை வருவது இயல்பு.  பெருமாள் தனது வாத்சல்யம், சௌலப்யம் போன்ற கல்யாண குணங்களை எல்லாம் நமக்கு அருளி, மிக அழகாக குத்துக்காலிட்டு அமர்ந்து அபய ஹஸ்தத்துடன் காட்சி தரும் எழில் மிகு திருக்கோலமே  நாச்சியார் திருக்கோலம் 

திருவல்லிக்கேணியில் எல்லா பெரிய உத்சவங்களிலும் ஐந்தாம் நாள் ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த 'திருவிருத்தம்' சேவிக்கப்பெறுகிறது. ருக்வேத சாரமான திருவிருத்தம்  100 பாடல்கள் கொண்ட  அந்தாதி; கட்டளைக்கலித்துறைப் பாடல்களால் ஆனது. நம்மாழ்வார் 'பராங்குச நாயகியாய்' தம்மை பாவித்து பாடிய பாடல்கள் இதில் உள்ளன. முதல் பாட்டில் "பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்"  மனித குலத்து குறைகளை கூறி அயர்வறுமமரர்கள் அதிபதியான  எம்பெருமானை தான் செய்யும் விண்ணப்பத்தைச் செவிதாழ்த்துக் கேட்டருளுமாறு விண்ணப்பிக்கிறார்.

எம்பெருமானுடைய உத்தம புருஷத்தன்மையை அநுஸந்திக்கையாலே அப்பொழுதே அவனைக் கிட்ட வேண்டும்படியான ஆசை கிளர்ந்து, ஆழ்வார் ஆற்றாமை அதிகரித்துத் தாமான தன்மையழந்து பிராட்டி நிலைமையடைந்து ‘பராங்குச நாயகி’யானார்.  நாயகன் ஆன எம்பெருமானின் ரூப வைலக்ஷண்யமுரைத்த நாயகியின் பாசுரம் இது:
கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ  அவையே*
வண்ணம் கரியது ஓர் மால்வரை போன்று மதிவிகற்பால்*
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும்*
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே?


எம்பெருமானுடைய திருக்கண்கள்; திருக்கைகள்;  திருவடி என்னுமுறுப்புகள் ஸாக்ஷாத் தாமரை மலர்களே; திருமேனி நிறமோவெனில், ஒரு அஞ்சனமாமலை போன்றுள்ளது; ஞானத்தில் மேம்பட்ட பரமபதத்து நித்யஸூரிகளும் விவரிக்க  முடியாத  அதி ரூப சௌந்தர்யம்  எம்பெருமானது திருமேனியழகு.   ஐந்தாம் நாள் காலை பக்தர்களுக்கு அருள் பாலித்த நாச்சியார் திருக்கோலம் இங்கே:




looking real !! ~ the chinna pasanga perumal

1 comment:

  1. very nice writing. Thanks for letting us have darshan, though we are away from Thiruvallikkeni.

    ReplyDelete