பக்தி என்பது என்ன ? புரட்டாசி அடியார்களுக்கான மாதம். ஒவ்வொரு தெருவிலும், காலை வேளையில் கோவிந்தா நாமம் ஒலிக்கும். எம்பெருமான் நாமங்களை கூவி அழைத்து, அவன் சின்னத்தை நெற்றியில் அணிந்து, ஆனந்தமாய் திருமாலடியார்கள் மிடுக்குடன் பவனி வருவர். திருமலை போன்ற அற்புத திவ்யதேசத்திலே - கோவிந்த நாமமதை உச்சஸ்தாயில் விளித்து ஆனந்தமாய் பண் பாடுவர்களிடத்தில், படிப்போ, செல்வமோ, குலமோ வேறு எதுவோ முக்கியமில்லை. எம்பெருமான் அடியார்கள் என்பது மட்டுமே அடையாளம். அவ்வாறு திருவேங்கடவனையே நினைத்து, அவன் திருநாமம் பாடி வருபவர்களே உண்மையான ஸ்ரீவைணவர்கள்.
The
tamil month of Purattasi has a pride of place – from 17.9.2020 it is Purattasi and
Brahmothsavam at holy Thirumala Tirupathi occurs during this month. Devotees
throng Vishnu temples, especially Tirupathi. Today (10.10.2020) is
sanivaram 4.
பக்திப்பரவசத்திலே முன்பு நிற்கும் பெரியாழ்வாரின் - பெரியாழ்வார் திருமொழி பாசுரம் ஒன்று இங்கே :
நன்மை
தீமைகள் ஓன்றும் அறியேன் நாரணா என்னும்
இத்தனையல்லால்
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வான் அன்றுகண்டாய்
திருமாலே!
உன்னுமாறுஉன்னை
ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மையாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவனென்னும்
வன்மை கண்டாயே*.
ச்ரிய:
பதியானவனே!, ஸ்ரீமன் நாராயணனே ! - உம்மை கோபாலா,
கோவிந்தா, ‘நாராயணா!’ என்று கூப்பிடுதலை தவிர,
மற்று எந்த நன்மை தீமைகளையும் நான்
அறிந்தவனில்லை. என் போன்ற சாதாரணர்களுக்கு இயற்கையாக உள்ள அற்பத்தனத்தினால், உயர்ந்த
உன்னைக் குறித்து வஞ்சகமான சொற்களைச் சொல்லி புகழுவனல்லன் யான். உன்னை மட்டுமே இடைவிடாது ஸ்மரித்துக் கொண்டிருக்கத்தக்க வழிகளில்
ஒரு வழியையும் யான் அறிந்தேனில்லை; ஒரு நொடிப்பொழுதும் ஒழிவின்றி (இடைவிடாமல்) "நமோ நாராணாய" என்ற நாமத்தை சொல்லும் அடியேனுக்கு மிடுக்காவது உன் திருவடி நிழலில் வாழும், உன் திருக்கோவில்களில்
கைங்கர்யம் பண்ணும் வைஷ்ணவன் என்கிற மிடுக்கோடு
இருப்பவன் நான் - என பெருமையுறுகிறார் நம்
பெரியாழ்வார்.
After
many months temples opened in Tamil Nadu in Sept 2020 after few months of
closure - though devotees are allowed
darshan at fixed timings, have not seen huge crowds at Thiruvallikkeni. Purattasi Sani is different and on this day,
devotees come in large numbers. In
normal times, every Saturday of the month of Purattasi, there will be Periya maada
veethi purappadu of Lord Azhagiya Singar. Due to Covid 19 lockdown, there
has not been purappadu thus far. This
year Navarathri comes next month and is to start on 17.10.2020 and our Acarya
Swami Manavala Mamunigal uthsavam starts in a couple of days on 12.10.2020.
Here ae some photos of the periya mada veethi purappadu of Sri Azhagiya Singar at Thiruvallikeni of 17.9.2016.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10.10.2020
No comments:
Post a Comment