To search this blog

Thursday, October 15, 2020

கரந்து எங்கும் பரந்துளன் ~ glory of Sriman Narayana .. Masi Magam days 2020

இதிஹாச காலங்களில் இருந்து இன்று வரை பூமியில், எதிரியற்ற ஒரு வளமான நாடோ, பிரச்னைகளே இல்லாத மனித குலமோ இருந்ததில்லை.  அனைத்து வளங்களும் சிறந்து இருந்தாலும் கூட, மனிதர்களின் பேராசையும் துர்குணங்களும் அழித்தலில் முடிவடைந்துள்ளன.  புலன்,  நுகர் பொருட்களை நினைப்பதால், அவற்றில் ஒருவனுக்குப் பற்று ஏற்படுகிறது.  பற்றுதலில் இருந்து ஆசை,  கோபம், மயக்கம்,   நினைவு இழப்பு, அறிவு இழப்பு என மனிதர்கள்  முற்றிலுமாகவும் அழிகிறார்கள்.  நம் வைஷ்ணவ சம்ப்ரதாயம் உணவு, எண்ணம், செயல் என ஒவ்வொன்றிலும் சாத்விக குணங்களை பரப்பி எம்பெருமானிடத்தில் அனுபவித்து அவனிடம் சென்று சேர ஆசார்யர்கள் மூலம் நல்வழிப்படுத்துகிறது. 

 


நம் எம்பெருமான் எத்தகையவன் ?  -  எங்குமுளன் என்பதை ஸ்வாமி நம்மாழ்வார் மிக அழகாக - "பரந்து குளிர்ந்திருந்துள்ள கடலில் நீர்த்திவலைகள்தோறும் வியாபித்து இருக்கின்றவன்" என தமது பாசுரத்தில் உரைக்கிறார்.  

A thing of beauty is a joy for ever ~ and one such is ‘Marina beach’ known for its  pristine beautiful sandy shores - that runs from Fort St George to Besant Nagar. This beach has a long history.  This was conceived in 1884 and christened by Mountstuart Elphinstone Grant-Duff, the then governor of Madras – the beautiful beach  is famed for the  ambience and rich eco system though it  stands a lot polluted now .. .. ever thought it would be declared out of bounds for commoners !! .. ..

 திருவல்லிக்கேணி வங்க கடலோரம் உள்ளது.  கடல் ஆழமானது - பரந்து  விரிந்து இருக்கும், தூரத்தில் கப்பல்கள் கூட பொம்மைகள் போன்று தெரியும்.  பௌர்ணமி, அம்மாவாசை நாட்களில் பெரிய அலைகள் ஆர்ப்பரிக்கும்.  பல வருஷங்களாக மாசி மகத்தன்று  ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமானுடன்  கூடச்சென்று  வங்கக்கடலில் புனித ஸ்னானம் செய்து ஆனந்தித்து வருகிறோம்.

 


தமிழில் கடலானது  :  அரலை, அரி, அலை, அழுவம், அளம்,  ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர்,  உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சலதரம், சலநிதி, சலராசி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர்,  என பற்பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தாலும், நாம் அறிந்த வார்த்தைகள் மிக சிலவே.  எடுத்துக்காட்டாக, 'தொன்னீர்' என்ற சொல், 'தொன்மையான நீர்ப்பரப்பு' என்ற பொருளில் கடலுக்குப் பொருந்துகிறது, 'முந்நீர்' என்ற சொல், மூன்றுவகை நீர்களின் சேர்க்கை என்ற பொருளில் வருகிறது: ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர், அதாவது, மழை போன்ற வேறு செயல்களால் கிடைக்கும் நீர்,  'கடல்' என்ற சொல்லையே புலவர்கள் பலவிதமான அடைமொழிகளுடன் இணைத்துப் பயன்படுத்தியுள்ளார்கள்.  மேலும்  அலைகடல், திரைகடல் - அலைகள் நிறைந்தது மறிகடல் - அலைகள் மடிந்து வீசுவது; ஆழ்கடல் - ஆழமானது;  செழுங்கடல் - செழிப்பானது;  பெருங்கடல் - அளவில் பெரியது 

The World has faced worst disasters – last century there were famines, diseases and two World wars killing millions of people.   In the year 2020, the Globe is toasted with the Corona virus – millions have been affected and the death toll too is disconcertingly increasing.    The World appears clueless almost.

There is the mighty deep Ocean .. .. a huge body of saltwater that covers about 71 percent of the Earth’s surface. The planet has one global ocean, though oceanographers and the nations of the world have divided  the ocean into five major basins: the Pacific, Atlantic, Indian, Arctic, and Southern. Smaller ocean regions such as the Mediterranean Sea, Gulf of Mexico, and the Bay of Bengal are called seas, gulfs, and bays. Inland bodies of saltwater such as the Caspian Sea and the Great Salt Lake are distinct from the world's oceans.  The oceans hold about 321 million cubic miles (1.34 billion cubic kilometers) of water, which is roughly 97 percent of Earth's water supply. Seawater's weight is about 3.5 percent dissolved salt; oceans are also rich in chlorine, magnesium, and calcium. The oceans absorb the sun's heat, transferring it to the atmosphere and distributing it around the world.  

Despite regular discoveries about the ocean and its denizens, much remains unknown. More than 80 percent of the ocean is unmapped and unexplored, which leaves open the question of how many species there are yet to be discovered.  Global warming is making the oceans more stable, increasing surface temperatures and reducing the carbon they can absorb, according to research published recently  by climate scientists who warned that the findings have "profound and troubling" implications. Man-made climate change has increased surface temperatures across the planet, leading to atmospheric instability and amplifying extreme weather events, such as storms. But in the oceans, higher temperatures have a different effect, slowing the mixing between the warming surface and the cooler, oxygen-rich waters below, researchers said.  As the world ocean is the principal component of Earth's hydrosphere, it is integral to life, forms part of the carbon cycle, and influences climate and weather patterns.

In the vast horizon of  Universe and the deep Sea, our Emperuman Sriman Narayana is everywhere !  .. .. he resides in   each minute drop of the water in the naturally cool ocean in the most subtle matter.  He is Omni-present and is the only God capable of providing us salvation.  பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்

பரந்த அண்டம் இது என நில விசும் பொழிவற

கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்

கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே

 

இந்த உலகத்தில் எங்கும் பரந்து  வியாபித்துள்ள  குளிர்ந்த கடலினுள்  நிறைந்து இருக்கும் ஒவ்வொரு கடல் நீர் திவலைகள்  தோறும் , விஸ்தாரமான இவ்வண்டத்திலிருக்குமாபோலே  நெருக்குண்ணாமல் இருப்பவனாய்  எம்பெருமான் இவ்வாறு - நிலம், மேலுலகங்களிலும்  ஒன்றொழியாமல்  அதிஸூக்ஷ்மமாய்  இருக்கக்கூடிய சிறிய அற்பமான இடங்களில்  கூட - எல்லா இடங்களிலும் தானுமாய்  திகழ்பவன் நம் ஸ்ரீமன் நாராயணன்.   ஆத்மவஸ்துக்கள்தோறும் அவற்றிற்குள்ளேயும்  எங்கும் பரந்து உளன், எல்லா இடங்களிலும் வியாபித்து இருப்பவன் மண்ணையும், இவ்வுலகத்தையும், மேலுலகத்தையும் யாசித்து, தனது வாயிலொடுக்கி,   தனக்குள்ளே கொண்ட ஸ்திரமாயிருக்குமெம்பெருமான் நாம் பணிந்து தொழும் ஸ்ரீமன் நாரணனே ! ~ அவனே முழு வேதிப்பொருள், வேத முதல்வன், இந்த ஜகத்தை ரக்ஷிக்க வல்லவன்.  அவனடி தாள் தொழுது அவனுக்கு மட்டுமே கைங்கர்யங்கள் செய்வோம்.  

This year 9th Mar 2020 provided us a happy occasion of taking bath in the Bay of Bengal on the occasion of Masi Magam – none had any premonition that sooner the beach too would be shut, so also would be city, Nation and most Nations of the World in the forced lockdown fighting the dreaded Corona virus.   Let us pray our Emperuman that all bad things pass over and the World returns to normalcy sooner.

 

Here are some photos of Masi maga purappadu this year at Thiruvallikkeni.

 

Azhwar Emperumanar Jeeyar thiruvadigale saranam

 

adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

15.10.2020 


1 comment:

  1. அரிய படங்கள்!கடல் பற்றிய தகவல்கள் மிக சிறப்பு

    ReplyDelete