To search this blog

Sunday, October 25, 2020

Aippaisi Sadayam - Sri Peyazhwar Sarrumurai .. .. avathara sthalam 2020

'நீரின்றி அமையாதது உலகு' என்கிறார் நம் செந்நாப்போதார் [திருவள்ளுவர்]  ..  நீர் - இந்த ஒற்றைச் சொல், வெறும் சொல்லல்ல. இந்த மண்ணில் எந்த ஜீவராசியும் உயிர் வாழ வேண்டுமென்றால் காற்றுக்கு அடுத்து முக்கியம் வாய்ந்து இந்த நீர்தான்.  தண்ணீர் நிலத்தில் அடியிலே கைக்கு எட்டாத ஆழத்தில் இருப்பதனால், நீரை வெளியே எடுப்பதற்குப் பல முறைகள் பயன்படுகின்றன.  கிணறு என்பது, நிலத்தின் கீழ் நீர்ப்படுகைகளில் சேமிக்கப்பட்டிருக்கும் நிலத்தடி நீரை எடுப்பதற்கு வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒரு குழி ஆகும். அகழ்தல், தண்டு செலுத்தல், துளையிடல் போன்ற பல முறைகளைக் கையாண்டு கிணறுகள் வெட்டப்படுகின்றன. நிலத்தடி நீரின் மட்டத்தைப் பொறுத்து கிணற்றின் ஆழம் வேறுபடும்.  


திருவல்லிக்கேணியில் பெரிய ஆம் என்றழைக்கப்பட்ட அவ்வீட்டில் படிக்கட்டுகளுடன் கொண்ட பெரிய கிணறை பார்த்துள்ளேன்.  தவன  உத்சவ பங்களாவில் பெரிய கிணறு இருந்தது. வசந்த உத்சவ பங்களாவில் 'நடபாவி ' எனும்  படிக்கட்டுகளில் இறங்கி குளிக்கும் வசதி கொண்ட கிணறு இருந்தது.    ~  இப்பதிவின் மையக்கருத்தும் ஒரு கிணறுதான் - தெய்விக கிணறு - தமிழ் தலைவன் பேயாழ்வார் பிறந்த கிணறு  !  

Centuries before the advent of colonialism and the arrival of British East India Company, Madras existed on a scale far smaller.  When East India bought a piece of land and later built a garrison, the fort  was contiguous to it on its northern side. Georgetown was a sparsely populated suburb, occupied by gardens and' garden-houses,'  where  the Company's servants retired for rest and relaxation. The districts to the westward were marked by tiny villages, centres of agricultural

areas held by the Company on precarious grants from the government of the country, while everything south of Triplicane was native territory, over which the British had no dominion.   

HD Love in his Vestiges of Old Madras describes:  two streams flowing from the west and north respectively had a common outlet to the sea about a mile south of the village of Madraspatam. The first, which was' then known as the Triplicane River, and now as the Cooum, followed a winding course through the villages of

Chetput, Nungumbaukum, and Triplicane.  At the time of the founding of Fort St. George, the adjacent village of Triplicane (Tiruvallikkeni) contained an ancient temple, now called Parthasarathi svamin, dating from the Pallava period. No Madras temple is explicitly mentioned in the records until 1652, but some unofficial evidence has been traced, to set forth which it will be convenient to work backwards from what is certain to what is only conjectural.  

Mylapore too finds mention – it was Portugese occupied area.  When the French squadron arrived at San' Thome in June, 1672, an English vessel called the Ruby, belonging to the' sieur Gersey,' was lying in the roadstead. Acting on a hint from Governor Langhorn, who was not on good terms with Mr. Jearsey, the French commander seized the ship. Langhorn subsequently applied, perhaps not very earnestly, for her restoration, but in vain; and she was eventually despatched to France. The seizure caused some irritation among the residents of Fort St. George.  

Mylapore has been a shoppers’ paradise ~  the  historical place has two MRTS railway stations : Thirumayilai and Sri Mundakakanni amman temple.  In between runs Kutchery road, linking Beach Road with Luz Junction and you would have travelled many a times on this – do you know that one of the bylanes leads to a famous landmark with divine connection !  - the Arundale Street .. ..  next time, for sure when you travel on Kutchery road towards beach, you might take a turn and reach this place, if you have not visited this earlier…. at Arundale Street  – otherwise not so noticeable one… that winds its way towards Sri Madhava Perumal Kovil ~ and just a couple of yards in to the Street, lies this famous place with divine connection.  

நாந்தகம் என்ற வார்த்தைதனை  கேள்வியுற்று இருக்கிறீர்களா ?  :    சிந்தாமணி நிகண்டில் வாள் (Sword)  என்ற சொல்லிற்கு நிகரான 8 சொற்கள் காணப்படுகின்றன.:  அவை :  ~  உவணி, கட்கம், கடுத்தலை, கிருபாணம், தூவத்தி, பத்திராத்துமசம், பாரோகம்,மற்றும் நாந்தகம்.. நாந்தகம் என்பது ஸ்ரீமன் நாராயணின் வாள்.  வாள்   (sword) என்பது பொன்மத்தால் ஆகிய கூரிய விளிம்பு கொண்ட, நீளமான அலகுடைய வெட்டுவதற்கும், குத்துவதற்கும் பயன்படும் ஓர் ஆயுதம் ஆகும்.. இவ்வாயுதம் உலகின் பல நாகரிகங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டது. வாள் ஒரு நீண்ட அலகையும், ஒரு கைப்பிடியையும் கொண்டிருக்கும். இதன் அலகு நேராகவோ வளைவாகவோ அமையலாம்.   

Among the 12 Azhwaars of Srivaishanva Tradition, Poigai Azhwar, Boothath Azhwar and Peyazhwar – were the ones to have descended on this Earth earlier.  They were contemporaries and are praised as “Muthal Azhwars (the first among the Azhwars).  They were born in the month of “Aippasi: in the thirunakshathirams of ‘Thiruvonam, Avittam, Sathayam’ respectively. This divine trio met on a rainy day at Thirukkovalur – when they sang 100 verses each which now form part of Moonravathu Ayiram (Iyarpa) in Naalayira Divyaprabandham.   

ஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார்.  ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தாரண்யம் என துளசிகாடாக இருந்ததைப் போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது.  சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் திருமாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹாவிஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார்.  இவர்  அயோநிஜர்.  இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும் வீதியில் உள்ளது.

  பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இவர்களது அருளால் இவ்வாறான விளக்குகளில் ரத்னாகரமான கடலை கண்டது போல எம்பெருமானுடைய நிர்ஹேதுககடாக்ஷம் பெற்று,பேயாழ்வார்,  திருமகள் கேள்வனான எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்து  "திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்”,  - என "மூன்றாம் திருவந்தாதி"  நூறு பாடல்கள் அருளிச் செய்தார்.   திருமயிலைவாசி ஸ்ரீ பேயாழ்வார்; அவரருளும் சிறப்பான உபாயமாவது ..   "அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்"  ~

ஸ்ரீமன் நாராயணான எம்பெருமானே நமக்கு என்றென்றும் ரக்ஷகன்.

அவனை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் ?  ~ இருகை  கூப்பி அவனடியே  சரணம் புகுதல் வேண்டும்.  எவ்வளவு எளிதானது ~ நம் முயற்சி ஒன்றுமே வேண்டாமே !!  நம்முடைய ரக்ஷணத்தில் நாம் முயல்வதை விட்டிட்டு அவனுடைய ரக்ஷகத்வத்திற்கு அவகாசம் கொடுப்போமாகில் அவன்  எக்காலத்திலும் ரக்ஷண ஜாகரூகனாயிருந்தருள்வன் என்பது மயர்வற மதிநலமுடைய பேயாழ்வார் வாக்கு.   இதோ அவரது மூன்றாம் திருவந்தாதியில் இருந்து ஒரு அற்புத பாசுரம் :   

அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,

முரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன், - சரணாமேல்

ஏதுகதி ஏதுநிலை ஏது பிறப்பென்னாதே,

ஓதுகதி மாயனையே ஓர்த்து.  

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் எத்தகையவன்  !! ~  திருவாழியாழ்வானை வலத்திருக்கையிலுடையவனும், முராஸுரனுடைய ஆயுளையும், வலிமையையும் போக்கின மொய்ம்பன் (மிடுக்கையுடையவனுமான பெருமான்) - அவ்வளவு சிறப்பு மிக்கவன் நமக்கு ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில், நம்மிடத்தில் உள்ள எத்தகைய குறைகளையும் கருதாமல்,  நமக்கு எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவேயிருப்பன், நெஞ்சமே இதை நன்றாக அறிந்து கொண்டு, ஆச்சரியமான குண சேஷ்டிதங்களையுடையனான அப்பெருமானையே உபாயமாக புரிந்து கொண்டு, அவனது நாமங்களையே  அநுஸந்தித்துக் கொண்டிரு. என உரைக்கிறார் நம் பேயாழ்வார்.

 
Monday 26th Oct 2020 is Vijayadasami special day – today is also  ‘Sadhayam in the month of Aippasi’ ~ the sarrumurai of Sri Peyalwar.   .. .. some photos of  Sri Peyalwar from Sri Madhava Perumal Thirukovil, Thirumylai and  Alwar avatharasthalam at Arundale street, Mylapore are posted here. 

Among the many things that we miss is Emperuman purappadu – On Peyalwar sarrumurai day – first Sri Peyalwar would come in pallakku to the sannathi – then there will be the short purappadu of Sri Parthasarathi perumal to Peyalwar sannathi – thriumanjanam – thirumozhi goshti, Moonram thiruvanthathi;  in the evening there would be periya mada veethi purappadu ; thiruvaimozhi goshti in peyalwar sannathi and Perumal along with azhwar would return to Thirukovil late in the day.  Next day morning would be ganthapodi uthsavam of Azhwar.  Here are some photos of Azhwar Perumal purappadu in the morning of  20.10.2018.

 

adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26.10.2020.
Gratitude to  Sri Kachi Swami (Sri U Ve PB Annangarachar swami) – www.dravidaveda.org 


No comments:

Post a Comment