பட்டினம் காப்பு எனும் பாசுரம் .. .. நம்மை காப்பாற்ற வல்லது. எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் பால் ஈர்க்கப்பட்ட ஸ்ரீவைணவர்கள் அனுதினமும் அனுசந்திப்பது 'திருப்பல்லாண்டு'. ஸ்ரீமன் நாராயணன் அளவிடமுடியாத பெருமைக்குரியவர். அவரை கண்டவுடன், தொழுது தமக்கு வேண்டியவை வேண்டமால், எம்பெருமானுக்கே எந்த அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு, பல்லாண்டு ‘பல்லாயிரத்தாண்டு’’ ‘‘பலகோடி நூறாயிரம் பல்லாண்டு’’ என பாடியவர் பெரியாழ்வார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. தினமும் வெளிவரும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை விவரங்கள் நம்மை பயமுறுத்தினாலும், நோயாளிகள் குணம் அடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில், நாம் ஆறு குறிப்பிடத்தக்க ஆபத்துகளை சந்தித்திருக்கிறோம் - சார்ஸ், மெர்ஸ், எபோலா, ஏவியான் இன்புளூயன்ஸா மற்றும் பன்றிக் காய்ச்சல் - ஆகியவற்றை சந்தித்துள்ளோம் - கொரோனா உலகத்தை கலக்கியுள்ளது.
அறிவியல்
மருத்துவ ரீதியாக, திங்கள்கிழமை மாலை கொரோனா
தடுப்பூசி (Corona
Vaccine) முடிவுறும்
தருவாயில் உள்ள செய்தி உலகம் முழுவதும் நிம்மதியை
அளித்துள்ளது. இனி எல்லோரும் இந்த கொடிய கொரோனா வைரஸைத் (Coronavirus) தவிர்க்கலாம்
என்று நினைக்கத் தொடங்குகிறார்கள். உண்மையில்,
கொரோனா வைரஸின் (COVID19) 3 வலுவான தடுப்பூசிகள் உலகம் முழுவதும் தயாரிக்கப்பட்டுள்ளன,
மேலும் நல்ல விஷயம் என்னவென்றால், இவை மூன்றும் சோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளன.
அதன் விலையும் சீரமைக்கப்பட்டு ரூ 225க்கு விற்கும் வகையில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டவுடன்
அதை 10 கோடி டோஸ் தயாரித்து இந்தியாவுக்கும் மற்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும்
வழங்குவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் சீரம் மையம் ஒப்பந்தம்
போட்டுள்ளன என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
சென்னையில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000க்கும் குறைவாக வந்துள்ளது. இதனால் சென்னை வேகமாக கொரோனாவில் இருந்து மீண்டும் வருகிறது என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
On Aug 7, India breached the
psychologically significant mark of 2 million Covid cases, just three weeks
after it announced crossing the first million. This is significant in the sense
that India's second million corona cases came faster than the US and Brazil,
the two worst-affected countries due to the pandemic. It took India 149 days to go from discovering
its first case in Kerala's Thrissur on Jan 30 to 5 lakh (half million) cases on
June 26. India today reported 62,064 coronavirus cases, taking its
total caseload to 22,15,074, according to data from the Union Health Ministry.
With 1,007 fatalities in the last 24 hours, the overall death toll touched
44,386. As many as 15,35,743 people have
recovered from the disease, with at least 54,589 people recuperating in the
last 24 hours. There are about 6,34,945 active cases of coronavirus in the
country. The recovery rate now stands at 69.33 per cent while the case fatality
rate has dropped to about 2 per cent, the ministry said.
Monday marks the fourth consecutive
day when new cases have increased by over 60,000. Andhra Pradesh on Sunday registered its
highest single-day spike in the number of cases, with the tally rising to 2.27
lakh. There are some positive indicators
too – for the past two days, Chennai has recorded less than 1000 and all of us
hope that the curve keeps coming down, enabling relaxation in lockdown and
eventually driving away the dreaded virus.
Let us pray to our Emperuman for normalcy returning and all of us
getting back to olden golden days.
WE pray that by October (Tamil month
of Purattasi) – things will be totally back to normalcy and we enjoy Purattasi
Sani purappadu. In the month of
Purattasi, would come Navarathri as also brahmothsavam in Thirumala. Every Saturday, there would be purappadu of
Sri Azhagiya Singar. Here are some
photos of Sri Azhagiya Singar purappadu on 14.10.2017.
மங்கிய வல்வினை நோய்காள்
உமக்கும்ஓர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேன்மின்
புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்
சிங்கப்பிரானவன்
எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர்
பங்கப்படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே.
நமக்கு முக்கியமானதான ஆத்துமா உருத்தெரியாதபடி மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான முற்பிறவி, இப்பிறவி, வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த வியாதிகளே, உங்களுக்கும் கூட ஓர் வல்வினை [கடினமான தீமை] நேர்ந்தபடியே பாருங்கள். இவ்விடத்தும் - புகேன்மின் புகேன்மின் [வரவேண்டா, வரவேண்டா] ஏனெனில் - இனி நீங்கள் என்னை பீடிப்பது கொஞ்சமும் எளிதன்று. எமக்குத் தலைவனுமான எம்பெருமான் [சிங்கப்பிரான்] எழுந்தருளியிருப்பதற்கிடமான திருக்கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள்; பரிபவப்படாமல் பிழைத்துப்போங்கள், என்று 'பட்டினம் காப்பு' எம்பெருமான் உறையுமிடம் தமக்கு நோய்களில் இருந்து காப்பாக பாசுரமுரைக்கிறார் நம் விஷ்ணுசித்தன் தம் பெரியாழ்வார் திருமொழியில்.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10.8.2020
பாசுர விளக்கம் : கட்டற்ற களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.
No comments:
Post a Comment