To search this blog

Monday, August 3, 2020

Aadi thiruvonam ~ Yajur Upakarma 2020


எந்த கடின இடர் காலத்திலும் நாம் ஸ்ரீமன் நாரணனையே வணங்கி தொழுவோம் ! - ஸ்ரீமந்நாரயணனே பரதேவதையாகில், பலரும் பரதேவதை யென்று மயங்கும் படியான பல பல தேவதைகள் ஏற்படுவானேன்? அந்தத் தெய்வங்கள் தாம் விசித்திரமான் செயல்களைச் செய்ய வல்லமை பெற்றிருப்பானேன்?Today is Aadi Thiruvonam ~ pournami day – Gajendra Moksham and Yajur Upakarma too .. … the first photo here is of Pavithrothsavam (see Perumal wearing yagnopaveetham) – the 2nd Thirumanjanam at Eekkadu (see Golden yagnopaveetham) – rest of the photos are from Avani Avittam (pournami) purappadu of 2015


இன்று ஆவணி அவிட்டம் .. பொதுவாக 'பூணூல் மாற்றும் நாள்" - இன்று யஜுர் வேதிகளின் உபாகர்மா.  உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேத  உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரும் வந்தது.  இது வருடா வருடம்  வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக  கருதப்படுகிறது. இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்.  நித்யானுஷ்டான கர்மங்களை விடாமல் செய்யவேண்டும்.   மகரிஷி வேத வியாசரிடமிருந்து வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றறிந்த நான்கு முக்கியமான சீடர்களில் ஒருவர் வைசம்பாயனர்.  இவர் யஜூர் வேதத்தை கசடறக் கற்றவர். யஜூர் வேதத்தை இந்த மகான் 86 சாகைகளாக மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்து வந்தார். இவரது பல சீடர்களில் ஒருவர் "யாக்ஞவல்கியர்' ஆவார். Vaishampayana, narrates the Ithihasam Mahabaratham.   Vaisampayana was a great sage who was the original teacher of the Krishna Yajur-Veda. Sage VaismapAyanA sets the context here as a Pouranika to King Janamejaya, as he narrated the epic Mahabaratham.  Janamajeyan was the son of Parikshithu, grandson of Arjuna.  Janamejayan performed penance seeking to eliminate the serpent race as it had caused death of his father.   Takshaka survives and is aved by Sage Astika. King Janamajeyan gets to hear Mahabarath from Vaisampayanar.  Sage Vaisampayana had many pupils, of whom Yajnavalkya was one.

Upakarma is a Vedic ritual celebrated every year generally on the full Moon day of the Lunar Month Sravana that falls during August–September months of English calendar which also coincides with the monsoon season.  Upakarma means beginning or ārambham, i.e., to begin the study of the Veda (Veda Adhyayanam). Today is such beginning for those following Yajur vedam.   Have heard that in  the not too distant a past, Veda Adhyayanam was performed only during the period Avani to Thai – in the rest other shastras were learnt.  Spiritually,  one atones for not having performed the Utsarjanam – on this day, “kāmo’karshīt…” japam is performed and new yagnopaveetham is worn. The main purpose of the Upakarma function is to offer prayers and express our gratitude to those rishis who gave us the Vedas — the rishis through whom the Vedic mantras were revealed. These rishis are known as “kaanda rishis”.   The sankalpam is mainly taken for performing the Upakarma Homam.  Yagna means sacred ritual and Upaveetham means covering. Yagnopaveetham is hence the sacred covering of the body. Without the Yagnopaveetham, a Yagna/sacred ritual cannot be performed. It is known as “Poonal” in Tamil; Jandhyam in Telugu; Janivara in Kannada – but colloquially referred in English as ‘sacred thread’.  The yagnopaveetham that is worn is sacred, best among those that purify, bestows life and prominence, is clean and unsoiled and confers on its wearer knowledge and power. பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணன் இருக்க, பற்பல தேவதைகளும், அவற்றை வணங்குவதும் எதனால் ? - என்ற கேள்விக்கு முதல் ஆழ்வார்களில் முதல்வரான பொய்கைப்பிரான் அமுத  வாக்கு.

திசையும் திசையுறு தெய்வமும், தெய்வத்
திசையும்  கருமங்கள்   எல்லாம் - அசைவில்சீர்க்
கண்ணன் நெடுமால் கடல்கடைந்த,
காரோத வண்ணன் படைத்த மயக்கு.


திசைகள் உடன் கூடிய உலகங்களும்,  அந்தந்த திசைகளிலே வாழும் தேவதைகளும், 
அந்தந்த தேவதைகளுக்கு ஏற்ற (ஸ்ருஷ்டி முதலிய) வியாபாரங்களும் ஆகிய இவையெல்லாம், *அசைவு இல்சீர்* -  கேடில்லாத [நித்யமான] குணங்களையுடைய ஸ்ரீகிருஷ்ணனாக  அவதரித்த,  மிகப் பெருமையையுடையவனாய் இருந்த போதிலும்,  சரணா கதர்களுக்காக உடல் நோவக் கடல் கடைந்தவனாய், மேகம் போலவும் கடல் போலவும் குளிர்ந்த வடிவையுடையவனான எம்பெருமான் - படைத்த தன்னிடம் வந்து பணியமாட்டாதவர்களை அகற்றுகைக்காக உண்டாக்கிவைத்த  அறிவை மயக்கும் பொருள்களாம் என உரைக்கின்றார் ஸ்ரீ பொய்கை ஆழ்வார். 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
3.8.2020.
1 comment:

  1. யஜுர் உபா கர்மா பற்றிய விளக்கம் மிக சிறப்பாக உள்ளது.with nice photos......

    ReplyDelete