To search this blog

Sunday, August 16, 2020

Aadi Punarvasu ~ Sri Ramar Jyeshtabishekam @ Thiruvallikkeni 2020

Today [16.8.2020] is 32nd day of Aadi – Punarvasu nakshathiram.  Generally there would be purappadu of Sri Rama Piran at Thiruvallikkeni on every Punarvasu – now no purappadu during Covid 19 since Mar 20,2020.  Today is Sri Ramar jyeshtabishekam and special thirumanjanam and on Jyeshtabishekam there would be no purappadu.

 

ஜகம் புகழும் புண்ணிய கதை  இராமனின் கதையே !  ~ கம்பராமாயணம் ஒரு அற்புத இலக்கிய விருந்து.  வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு  தமிழின் சுவை கூட்டி  கவிச்சக்கரவர்த்தி கம்பரால் இயற்றப்பட்டதாகும்.  தொன்மங்கள் என்பது 'பழைமை' என்று பொருள்படும். இலக்கியங்களில் பழைமையான கருத்துகளைப் பயன்படுத்துவது அல்லது எடுத்தாள்வது தொன்மங்கள் ஆகும். பழமை என்பதை வடமொழியில் 'புராணம்' என்று   அழைக்கப்படுகிறது.   தொன்மை இலக்கியங்களுக்கு இராமாயணமும், மகாபாரதமும் சான்றுகளாக உள்ளன.  எந்த ஒரு இலக்கியத்தில் தொன்மங்கள் அதிகமாக உள்ளதோ அது பழம்பெரும் இலக்கியம் எனக் கருதப்படுகிறது.

 

கதவினை முட்டி. மள்ளர்*    கைஎடுத்து ஆர்ப்ப எய்தி.

நுதல்அணி ஓடை பொங்க*    நுகர்வரி வண்டு கிண்ட.

ததைமணி சிந்த உந்தி*    தறிஇறத்தடக்கை சாய்த்து.

மதமழை யானை என்ன மருதம் *    சென்று அடைந்தது அன்றே.

 

திருஅயோத்யா புனித சரயு நதிக்கரையில் அமைந்த ஒரு அற்புத நகரம்.  நதிகளும் அவற்றில் தண்ணீரும் சுபிக்ஷத்தின்  அறிகுறி.  சரயுவின் வெள்ளம் அங்குள்ள மதகுகளின் கதவுகளை மோதி;   உழவர்கள் மகிழ்ச்சியால்   ஆரவாரம்  செய்யும்படி ஓடி வந்து,   முன்னணியிலுள்ள   ஓடைகள் பெருகுமாறு;   தேன்   உண்ணும் கோடுகளமைந்த   (உடம்பினையுடைய) வண்டுகள் குடைய;  நெருங்கிய  மணிகள் சிதறும்படி நீரைத் தள்ளிச் சென்று; இரு கரையிலும் நடப்பட்ட  பெரிய கழிகளை  முறியும்படி   அலைகளாகிய பெரிய கைகளால் சாய்த்து;    மத மழை பொழிகின்ற யானை போல;  வெள்ளநீர் ஆனது  மருத நிலத்தைச் சென்று சேர்ந்தது.

சரயுவின்    வெள்ளத்தின் செயல்கள் மதயானையின் செயல்களோடு பொருத்திக்   கூறுவது கம்பரின் கவி  நயம்.   மதகின்  கதவுகளை மோதுவது  நீர்  வெள்ளம்;   பகைவர் மதிற் கதவுகளை மோதுவது மத யானை.    வெள்ளப்போக்கைக    கட்டுப்படுத்த குதிரை மரங்கள் எனப்படும்  தூண்கள்;  யானை கட்டப்பட்டிருக்கும்    கம்பம். தடக்கை; ஆற்றின்  அலைகளாகிய  பெரிய கைகள் எனவும்   யானையின் பெரிய துதிக்கைகள்  எனவும்  காண்க. 

Lord Rama descended on earth for the purpose of upholding righteousness and rewarding virtue. His life is the subject of The Ramayana. Rama lived the life of perfection and responsibility exhibiting glorious traits of wisdom and conscientiousness.  

The greatest Ithihasam ‘Sri Ramayanam’ accurately depicts without an iota of exaggeration,  the life and journey of the immortal Maryadha purush - perfect man’s adherence to dharma despite harsh tests of life and time. Lord Rama is the epitome of all virtues and the perfect human being who abandoned the throne and served exile in the forest for the sake of honour of his beloved father. 

In the epic, His glory is described by Sage Valmeeki as : 

यावत्स्थास्यन्ति गिरयस्सरितश्च महीतले ।

तावद्रामायणकथा लोकेषु प्रचरिष्यति ॥

~  that as long as the hills remain and streams add life by their flow on earth, so long shall the true story of Rāma prevail.  **

The appearance of Lord Rama on earth is a day of great of celebration, widely celebrated as ‘Sri Rama Navami’ – On all monthly thirunakshathirams, there will be purapadu of Sri Rama.  It will give immense punniyam (spiritual gain) - not only in the present world but would also help in the other world also, whenever we think and utter the name ‘Rama’.

 


குலசேகராழ்வார் தமது பெருமாள் திருமொழியில் எம்பெருமான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை புகழும் ஒரு பாசுரம் இங்கே :

                              கொங்குமலிகருங்குழலாள் கௌசலைதன்குலமதலாய்*

தங்குபெரும்புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதீ*

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென்கருமணியே*

எங்கள் குலத்தின்னமுதே இராகவனே! தாலேலோ.


பரிமளம் மிகுந்த கறுத்த கூந்தலையுடையளான கௌசலையின்  சிறந்த பிள்ளையானவனே!  பொருந்திய மஹாகீர்த்தியையுடைய ஜநக மஹாராஜனுக்கு மாப்பிள்ளையானவனே!  தாசரதீ என உலகோர்களெல்லாம் அன்புடன் அழைக்கும்  சக்ரவர்த்தி திருமகனே!  புனித கங்கை ஆற்றினை  விட  சிறப்பு மிக்க தீர்த்தங்களையுடைய   திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற என் கருமணியே !  எங்கள் ராஜவம்சத்துக்கெல்லாம்  போக்யமான அமுதம் போன்றவனே!  இராகவனே! தாலேலோ ~ என நற்பண்புகளுக்கெல்லாம் திலகமாக ஸ்ரீராமரை தாலாட்டுகிறார் நம் குலசேகராழ்வார்.

Reminiscing good old days, here are some photos from Sri Ramar purappadu on 25.09.2016.  The first photo is Sri Ramar at Thelliyasingar gopuram and the 2nd one is at Kizhakku Kulakkarai Aanjaneyar thirukovil [thiruvadi kovil at Thiruvallikkeni] 

adiyen Srinivasadhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

16.8.2020


1 comment:

  1. Nice photos!..கம்ப ராமாயண விளக்கமும் குலசேகராழ்வார் பாசுர விளக்கமும் மிக நன்றாக உள்ளது....

    ReplyDelete