To search this blog

Sunday, August 2, 2020

ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து ~ Gajendra Moksham 2020


கானமர் வேழம் கையெடுத்தலறக்கராவதன் காலினைக் கதுவ,*
ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து சென்று நின்றாழி தொட்டானை,*நிரந்தரமற்ற துன்பமயமான இவ்வுலகில் சர்வ  நிச்சயமானது மரணம் மட்டுமே !   தர்ம புத்திரனான  யுதிஷ்டிரரிடம், “எது மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயம்?” என்று கேட்ட போது, தினம் தினம் அடுத்தவர் இறப்பதைப் பார்த்தும் தான் சாக மாட்டேன் என்று ஒவ்வொரு மனிதரும் நினைப்பதே மிகவும் ஆச்சரியமான விஷயம் என்று பதிலளித்தார். எம்பெருமானிடத்திலே சரணம் புகுதலே ஒரே உபாயம். மரணம் புகும் சமயத்திலும் ஸ்ரீமன் நாரணன் திருப்பியரை உச்சரிக்க வேண்டும்.  பெரியாழ்வார் - அந்த கடின காலத்தை - 'நினைவு தப்பி போகும்போது - சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில், சொல்லு, சொல்லு என சுற்றம் இருந்து !!' என விவரிக்கின்றார்.  நான் இன்று செய்ததை பிறிதொரு நாளில் ஞாபகம் கொள் என்ற பேரம் மனிதர்களிடத்தில் கூட செல்லுபடியாகாது !  .. .. எம்பெருமானிடத்திலே 'அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்" - அரங்கத்தரவணை பள்ளியானே ! ~ என்று கூறிட பெரியாழ்வார் ஒருவரால் மட்டுமே முடியும்.  

History is replete with chapters of human misery – of Nature’s fury, plague and other diseases, man’s avaricious wars and the like – the present situation was never envisaged ! ~ Corona statistics drill fear in human minds every day.  Statistically, today there are  178,49,853 persons affected across the globe, of which close to 10% - 17,50,723 is from India .. .. that for sure frightening.

To view the same positively, India’s Covid 19 recoveries exceed active cases by 5.7 lakhs .. of 17.50 – recovered cases are 11,45,629.   Delhi on Sunday reported 961 COVID-19 cases, 1,186 recovered /discharged/migrated, and 15 deaths in the last 24 hours. The number of COVID-19 cases in Delhi at 1,37,677 and death toll due to the infection stands at 4,004.  One more statistics, the total no. of deaths across the globe is 685701 of which India’s tally of 37364 is 5.45% - India is 5th behind USA, Brazil, Mexico and UK.

Elephants are the largest land animals on Earth, and they are most attractive and  unique-looking animals, too. With their characteristic long noses, or trunks; large, floppy ears; and wide, thick legs, there is no other animal with a similar physique. Botswana, with an estimated 130,000 savanna elephants, is one of the species’ last strongholds in Africa, where ivory poaching has been responsible for reducing their numbers to roughly 350,000.  Elephants are dying in large numbers, more than 300 have died in recent months.  The bizarre behavior and sheer number of deaths suggest to experts that it’s unlikely that diseases known to afflict wild elephants, such as tuberculosis, are to blame. The elephants’ tusks aren’t missing, which rules out poaching for ivory. Yet the death toll keeps growing.

3.8.2020 is Gajendra moksham – every child  would have  heard so many times the puranic legend of ‘Gajendra moksham [salvation of elephant Gajendra]’ ~ whence   Sriman Narayana  Himself  came down to earth to protect Gajendra (elephant) from the death clutches of Makara (Crocodile).   It also offers us great learning – the  otherwise mighty elephant too could get into difficulty and in its extreme distress the elephant after testing its power and understanding  its futility, still had the presence of mind to think of  bhatki (devotion) and gnana (spiritual knowledge) ….. the plea of elephant was immediately answered by Lord Sriman Narayanan, who came rushing in to protect  His devotee – making the earthly human beings realise that if God does so for an elephant, He sure would protect  all of us too.

சாபமும் சாபவிமோசனமும் புராணங்களில் வரும் நிகழ்வுகள். சாபம் என்பது எப்போதுமே பிரக்ஞையின் மேல்நிலையிலிருந்து கீழ்நிலைக்குத் தள்ளப்படுவது.  எம்பெருமானின் கருணையால்   விமோசனம் பெற்றதும்  மீண்டும் சுயநிலையை அடைவது நடக்கிறது.  திரிகூட மலைக்காடுகளில் வசித்துவந்த யானைக் கூட்டத்தின் தலைவன் கஜேந்திரன் (முந்தைய அரசன்)  தடாகத்தில் இறங்கி மலர் கொய்யும் வேளையில் குளத்தில் இருந்த முதலை ஒன்று, கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டது. கஜேந்திரன் தன் வலிமையனைத்தையும் திரட்டித் தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சித்தது. முதலையும் விடவில்லை.   முதலை, யானையரசனைத் தண்ணீருக்குள் இழுக்கத் தொடங்கியது. தன் வலிமையின்மேல் இருந்த நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிட்ட நிலையில், அனைத்துக்கும் மூலகர்த்தாவான பரம்பொருளே கதி என்று, ‘ஆதிமூலமே’ எனப் பெருங்குரலெடுத்து கஜேந்திரன் கூப்பிட்டது.  எம்பெருமான் தன பக்தனை காப்பாற்ற கருட வாகனத்தில் பறந்து வந்து, திருவாழியினால் முதலையின் சிரத்தை அறுத்து, கஜேந்திரனை கைப்பற்றினான். எம்பெருமான் பறந்து வந்து யானைக்கு அருள்செய்த பிரபாவத்தை  ஸ்ரீபூதத்தாழ்வார் தமது இரண்டாம் திருவந்தாதியில் :   தொடரெடுத்த மால்யானை  சூழ்கயம்புக்கு  அஞ்சிப் .. .. அன்றிடரடுக்க ஆழியான் பாதம் பணிந்தன்றே*

இதோ பெரியாழ்வாரின் வைர வரிகள் - பெரியாழ்வார் திருமொழி பிரபந்தத்திலே

துப்புடையாரை அடைவது எல்லாம் *       சோர்விடத்துத் துணை ஆவர் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன் *       ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு *      
                                                          ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் *      
                                                               அரங்கத்து அரவணைப் பள்ளியானே

திவ்யதேசங்களிலே தலைசிறந்த திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின்மேல் பள்ளிகொள்ளும்  ஸ்ரீரங்கநாதனே ! .. .. உன்பால் ஈர்க்கப்பட்ட அடியாரை காப்பதில் படு சமர்த்தனான தேவரீரை ஆச்சயிப்பது எல்லாம்  ' சர்வ இந்திரியங்களும் சிதிலமாய் விடுங்காலத்தில்'  தேவரீர் துணையாயிருக்கும் என்கிற எண்ணத்தினாலன்றோ? .. இவ்வாறு துணை செய்வதற்கு உரிய அதிகாரிகள் பலர் இருப்பர்; அவர்கள் எவரிடத்தும் நான் ஒப்புதலுக்கு உரியவன் அல்லன்.  ஆயினும் சர்வசுலபனான நீர்  ஆனைக்கு அருள் செய்த பெருமாள் - ஆதிமூலமே என சரணடைந்த  கஜேந்திராழ்வானைக் பறந்து வந்து காத்தவர் எனவே தாங்கள் இந்த ஏழையையும் காக்க கடவீர் என தங்களிடம்   சரணம் புகுந்தேன்.  பின்னாளில், உடல் அவயங்கள் நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படும் காலத்தில்,  சரமதசையில், நான் தேவரீரை க்ஷணகாலமாயினும் நினைக்க முடியாது போனாலும், நாரணனே என்று அலற்ற வை கூடாது போனாலும்,    இப்போதே என்னுடைய பிரார்த்தனையை  விண்ணப்பஞ் செய்து கொண்டேன் - தாங்கள் என்னை ரக்ஷித்து அருள வேணும் என பிரார்திக்கிறார் பக்தியில் திளைத்த பெரியாழ்வார்.


Today (3.8.2020) is “Gajendra Moksham” – at Thiruvallikkeni, there would have been Garuda SEvai purappadu and enactment of saving of the elephant Gajendran at Kairavini - here are some photos from the Gajendra moksham purappadu at Thiruvallikkeni on 25.7.2010 taken with Canon Powershot A1100 IS.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
3.8.2020.
நன்றி : ஸம்ப்ரதாய  அற்புத களஞ்சியம் திராவிடவேதா இணையம்.

1 comment: