To search this blog

Thursday, August 6, 2020

குருந்தொசித்த கோபாலகன்.- Aadi Sathayam ~ Sri Peyazhwar masa thirunakshathiram 2020

Today  6th Aug 2020   happens to be ‘Sadhayam in the month of Aadi’ ~ the masa thirunakshathiram of  Sri Peyalwar.   


5.8.2020 ஒரு அற்புத நாள்.  சுப முகூர்த்த சுப வேளையில் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் சங்கல்பிக்க அயோத்தியில் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் அற்புத திருக்கோவில் எழுப்பும் பணி விமர்சையாக துவங்கியுள்ளது.  கண்ணன் பிறந்த மதுரா சென்று இருப்பீர்கள்.  கண்ணபிரான் பிறந்தநாள் முதல் பல சோதனைகள். 

அதீத மழைகொட்டும் ரோஹிணி நன்னாளில் அவதரித்த கண்ணன், ஒருத்தி மகன் ஆக பிறந்து அன்றிரவே வெள்ளப்பெருக்கெடுத்த யமுனை ஆற்றை கடந்து, கோகுலத்தில் மற்றோருவர் மகனாய் கண்வளர்ந்தான்.  அங்கும் அவனுக்கு பலப்பல சோதனைகள் - ஒன்றொன்றாய் அசுரர்களை ஏவி கம்சன் அவனை அழிக்க முயற்சிதான்.  அவற்றுள் ஒன்று குருந்தமொசித்தது.   குருந்த மரம் ஒரு சிறுவகை மரம்.    இங்கே அது காட்டுக்  கொளுஞ்சி, காட்டு எலுமிச்சை என்றும் காட்டு நாரங்கம் என்றும் குறிப்பிடப்படுகிறது.    இது ஒரு பூக்கும் தாவர இனமாகும். கொத்தான வெண்ணிற மலர்களையும் உருண்டையான காய்களுள்ள, தண்டில் முள்ளுள்ள எலுமிச்சையைப் போன்ற இன மரமாகும். இதன் இலை, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இம்மரம் திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலில் தலமரமாக உள்ளது.


ஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில்  அவதரித்தார்.  ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தாரண்யம் என துளசிகாடாக இருந்ததைப் போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது.  சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் திருமாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹாவிஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார்.  இவர்  அயோநிஜர்.  இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும் வீதியில் உள்ளது.

Sri Peyalwar was born in a well in Mylapore (thence known as Mylai  Thiruvallikkeni).  His birthplace is in the present day Arundel Street  in Mylapore closer to Mylai Sri Madhaava Perumal Kovil.  At Thiruvallikkeni, the road adjacent to Sri Parthasarathi Kovil houses a separate sannathi (temple by itself) for Sri Peyalwar and this street is named after the Azhwar and is known as ‘Peyazhwar kovil Street’.
முதல் ஆழ்வார்கள் மூவரும் ஒரு நல்ல மழைநாளில் திருக்கோவலுரில் ஒரு இடைகழியில் சந்தித்தனர்.   பொய்கைஆழ்வார் "வையம் தகளியா, வார்கடலே நெய்யாகக் கொண்டு  (உலகத்தையே விளக்காகவும் பெரியகடலை நெய்யாகவும்) நூறு பாடல்கள் பாடினார்.  பிறகு, பூதத்தாழ்வார், 'அன்பேதகளியா ஆர்வமே நெய்யாக'க் கொண்டு (அன்பை விளக்காகவும் ஆர்வமான எண்ணங்களை நெய்யாகவும்) நூறு பாடல்கள் பாடினார். பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இவர்களது அருளால் இவ்வாறான விளக்குகளில் ரத்னாகரமான கடலை கண்டது போல எம்பெருமானுடைய நிர்ஹேதுககடாக்ஷம் பெற்று,பேயாழ்வார்,  திருமகள் கேள்வனான எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்து "திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், *திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன்;*  .. .. - என "மூன்றாம்திருவந்தாதி"  நூறு பாடல்கள் அருளிச் செய்தார். 

His prabandham is in Iyarpa – 100 pasurams known as ‘Moonram Thiruvanthathi’. At Thiruvallikkeni there would be purappadus on almost 200 days of the year – and in 90% (approx.) – it is Sri Peyazhwar’s moonram thiruvanthathi – in Periya mada veethi purappadu, generally around 70-75 pasurams and in siriya mada veethi purappadu around 30 pasurams would be rendered – thus if one learns these alone – one could easily partake in the divyaprabandha goshti at Thiruvallikkeni divyadesam. 

தமிழில் சிறந்து தமிழ்த்தலைவன் என புகழப்பட்ட ஸ்ரீ பேயாழ்வாரின் பாசுரங்களில் ஒன்று இங்கே: இப்பாட்டிலும் எம்பெருமானிருப்பிடங்களைச் சொல்லுகிறார். எம்பெருமான் உறையுமிடம் - திருப்பாற்கடல், திருவேங்கடம்,  திருவனந்தாழ்வான்,  ஸ்ரீவைகுண்டம்,  வேதவேதாங்கங்கள் யோகிகளின் உள்ளக் கமலம் ஆகிய இவற்றை இருப்பிடமாகக் கொண்டவனென்றாராயிற்று. 


பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,

நூற்கடலும்  நுண்ணூல தாமரைமேல், - பாற்பட்டு

இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,

குருந்தொசித்த   கோபாலகன்.

 திருவாயர்பாடியாம் கோகுலத்தில் பல லீலைகள் செய்து வளர்ந்த கண்ணபிரான்,  குருந்த மரத்தை முறித்தொழித்த கோபாலகன் - திருப்பாற்க் கடலையும், திருவேங்கடத்தையும்,  திருவனந்தாழ்வானையும், ஸம்ஸாராதாபங்கள் தட்டாமல்  குளிர்ந்திருக்கிற பரமபதத்தையும், கடல்போன்ற சாஸ்த்ரங்களையும், ஸூக்ஷமமான சாஸ்த்ரங்களால் பிரதிபாதிக்கப்பட்ட ஹ்ருதய கமலத்திலே கரணங்களெல்லாம் ஊன்றியிருக்கும்படி யோகத்தில் நிலைநின்ற யோகிகளினுடைய நெஞ்சையும் தனது நித்ய  வாஸஸ்தானமாகக் கொண்டிருக்கிறான். அத்தகைய சிறந்த எம்பெருமான் தாள் பற்றினோர்க்கு எந்த குறையும் வாராது.

Today being Sadayam, here are some photos from  Sri PeyAzhwar sarrumurai purappadu that occurred on 20th Oct 2018.  

 adiyen Srinivasa dhasan.

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

06.08.2020 

 

 

 

 

 

 


1 comment:

  1. Ver nice to read....அடங்கியுள்ள விஷயங்களும் போட்டோக்களும் மிக சிறப்பு

    ReplyDelete