Purattasi Punarvasu Thiruvallikkeni Sri
Ramapiran darshan 04102026:
தோள் கண்டார் தோளே கண்டார்; தொடுகழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்; தடக்கை கண்டாரும் அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.
இராமனின் தோளைக் கண்டவர்கள் தோளின் அழகிலேயே மயங்கினர்;
தாமரையை ஒத்த திருவடிகளைக் கண்டவர்கள் அவற்றிலேயே மயங்கினர்; தடக்கைகளைக் கண்டவர்களும்
அவ்வாறே. ஒருவராலும் இராமனின் முழு வடிவழகையும் ஒரே பார்வையில் காண முடியவில்லை
கம்ப ராமாயணத்தில்
இராமபிரானின் அழகு – — பாலகாண்டம், உலாவியற் படலம்:

No comments:
Post a Comment