To search this blog

Thursday, September 12, 2024

Aavani Moolam 2024 - குணமணி நிதயே! நமோ நமஸ்தே

 Aavani Moolam 2024 - குணமணி நிதயேநமோ நமஸ்தே

இன்று 12.9.2024 ஆவணி மாச  மூலம் நக்ஷத்திரம் - இன்னும் இரண்டு மாதங்களில், ஐப்பசியில் திருவோணம் நாம் சிறப்புற கொண்டாடும் நம் மாமுனிகள் சாற்றுமுறை வைபவம் – Nov 5 2024  ஐப்பசி 19 அன்று.   இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் பவித்ரோத்சவம் அங்குரார்ப்பணம்.


நம் ஸ்ரீவைஷ்ணவ தென்னாசார்ய  குருபரம்பரையில் கடைசியாக விளங்குபவர் ஸ்வாமி மணவாள மாமுனிகள் (காலம் கிபி 1370 - 1443 முதல் ). நம் எல்லாரையும் எம்பெருமான்  திருவடியில் கொண்டு சேர்க்க திருவதாரம் எடுத்தவர் ஸ்ரீ மணவாள மாமுனிகள். 'சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம்' என்ற முறையில் நொடிப்பொழுதும் பிரியாமல் பகவானுக்கு வழுவிலா அடிமை செய்து கைங்கரியம் செய்து வரும் ஆனந்தாழ்வானாகிய ஆதிசேஷனின் அவதாரமே ஸ்ரீ மணவாள மாமுனிகள். ஸ்ரீ ராமானுஜரும் ஆதிசேஷன் அவதாரம் தான். ஸ்ரீ மணவாள மாமுனிகள் பொறுமையே உருவானவர். சந்திரனை போல் குளிர்ச்சி மிக்கவர். குளிர்ந்த திருவுள்ளம், குளிர்ச்சியான கடாக்ஷம் மற்றும் திருவாக்குடையவர்.

நம்முடைய பூர்வாசார்யர்களிலே நம் ஸ்வாமி எம்பெருமானார் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தஸாரதி எம்பெருமானுடைய திருவவதார-விசேஷம்  என்றும்,  ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை  திருக்கண்ணமங்கை எம்பெருமானான கண்ணனுடைய திருவவதார-விசேஷம் என்றும்,  ஸ்ரீவேதாந்தாசார்யர் திருவேங்கடமுடையானுடைய திருவவதார விசேஷம்  என்றும் , ஸ்ரீவாதி கேஸரி அழகியமணவாளஜீயர் திருநாராயணபுரம் செல்வப்பிள்ளையின் திருவவதார- விசேஷம் என்றும்,  ஸ்ரீபிள்ளலோகாசாரயர் ஸ்ரீகாஞ்சீ தேவாதிராஜனுடைய திருவவதார-விசேஷம் என்றும், அவர்தம் திருத்தம்பியரான ஸ்ரீ அழகியமணவாளப்பெருமாள்நாயனார் திருவரங்கராஜனான அழகிய மணவாளப் பெருமாளுடைய திருவவதார-விசேஷம் என்றும் கொள்வது மரபு. 

 


ஸ்ரீஅழகியமணவாளமாமுநிகளுடைய (அஷ்டதிக்கஜங்கள் என்று வழங்கப்பெறும்) எட்டு ப்ரதாந சிஷ்யர்களில் எறும்பியப்பாவும் ப்ரதிவாதிபயங்கரம் அண்ணாவும் தனித்தனியே *வரவரமுநிஸதகம்* என்னும் திருநாமம் பூண்ட மாமுநிகளுடைய வைபவாநுபவபரமான ஸ்தோத்ர க்ரந்தங்களை அருளிச்செய்துள்ளனர் என்பது ப்ரஸித்தம். 

Sri Erumbiappa in his work  to Varavaramuni Sathakam  extols Acaryar Mamunigal thus:  

குணமணி நிதயே!  நமோ நமஸ்தே;  குருகுல துர்ய நமோ நமோ நமஸ்தே |

வரவரமுநயே நமோ நமஸ்தே ; யதிவர தத்வ விதே நமோ நமஸ்தே ||  

சிறந்த குணங்களுக்கு நிதியாக இருப்பவரின் பொருட்டு வணக்கம். ஆசார்யர்களில் சிறந்தவரே உமக்கு வணக்கம்.    மணவாள மாமுனிகளே உமக்கு வணக்கம். யதிராஜரின் திருவுள்ளம் அறிந்தவரே உமக்கு வணக்கம்.  

இப்படி சிறப்பு பெற்ற நம் ஆசார்யன் ஸ்வாமி மணவாள மாமுனிகள் பொன்னடியாம் செங்கமலத்தில் ஆர்ஜவத்துடன் கைங்கர்யம் செய்து அருள் பெறுவோமாக !  ஆர்ஜவம் என்பது சிந்தையாலும் , சொல்லாலும் , செயலாலும் ஒருபடிப்பட்டிருப்பதாகும் 

Here are some photos taken during  Mamunigal  uthsavam day 5 on 11.11.2023, which incidentally was Deepavali eve.  

ஸ்ரீமதே ராமானுஜாய நம:   ஸ்ரீமத் வரவரமுநயே நம:

 
~ adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
12.9.2024

மேற்கோள் :  ப்ரதிவாதிபயங்கரம் அண்ணா அருளிச்செய்த வரவரமுநிஸதகம்

ந்யாய வேதாந்த சிரோமணி வித்யாபூஷணம் ஸ்ரீ உ.வே. திருநாங்கூர் ப்ரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசார்ய ஸ்வாமி சதாப்தி மஹோத்ஸவ நினைவு மலர்











No comments:

Post a Comment