To search this blog

Sunday, September 15, 2024

Celebrating Onam Festival 2024 - Thiruk Katkarai divyadesam

கண்ணபிரானான ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமானுக்கு 'திருவோண' நட்சத்திரம் விசேஷம்.  இன்று 15.9.2024   ஓணம் பண்டிகை. முக்கியமாக கேரளாவில் பிரமாதமாக கொண்டாடப்படும் தினம். 

 


Today is Thiruvonam ~ a festival grandly celeated in Kerala.  There are 13 divyadesangal known as Malai Nattu divyadesam.     Of them 2 – Thiruvattaru and Thiruvanparisaram are in Tamil Nadu  - the rest are spread in Kerala, proudly called as ‘God’s own Country’.  The general perception is it is tough to locate and reach these Divyadesams and have darshan – perhaps the easiest and most accessible of them all is this divaydesam, which books may tell as lying between Thrissur &  Ernakulam near Irinjalakuda – known as Thirukakkara (Thirukatkarai) where Onam festival emanates.  

Onam brings together a multitude of colours and flavours from across God’s Own Country, and the celebrations reach their apex on the auspicious day of Thiruvonam. Onam commemorates the return of  King Mahabali and brings together communities across the landscape in unified revelry.   Households are adorned with exquisite floral carpets (Pookkalam), traditional art forms and games are seen everywhere and homes are cleaned and impeccably maintained. One can see elaborate sumptuous feasts (Onasadya) served in every single home, with the feast ending with delicious payasam (Kerala dessert), which ensures that the message of oneness and hope is spread far and wide.    Onam is celebrated in Chingam month on Malayalam Solar Calendar. Chingam month is known as Simha month in other solar calendars and Avani month in Tamil Calendar. The day when Nakshatra Thiruvonam prevails in month of Chingam is considered for Onam celebrations.

 


கேரளா முழுவதும் கொண்டாடப்படும் ஓணம் திருவிழா,  திருக்காட்கரையப்பன் கோவிலில்தான் முதன் முதலாகத் தொடங்கியது என்கின்றனர்.  திருவோணம் பண்டிகை - மகாபலியின் வருகை  திருக்காட்கரை  திவ்யதேசத்தில் ஆரம்பித்தாக கருதி, இத்தலத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  27 நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டும் “திரு” என்கிற அடைமொழி உண்டு. ஒன்று சிவபெருமானுக்குரிய திருவாதிரை. இன்னொன்று ஸ்ரீமன் நாரணன்  திருவோணம். ஆவணி மாதம் சிரவண மாதம் என்று அழைக்கப்படுகின்றது.  பத்து நாட்கள் திருஓணம்கேரள தேசத்தில்  அறுவடைத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். ஹஸ்த நட்சத்திரத்தில் ஆரம்பித்து, திருஓணம் வரை பத்து நாட்கள் இந்தப் பண்டிகையை அவர்கள் கொண்டாடுகின்றார்கள். சங்க இலக்கியத்தில் வாமன அவதாரத்தைக் கொண்டாடிய நாளாக ஓணம் குறிக்கப்படுகிறது. ஆறுவகை சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் பலவகையான உணவுகள் தயாரிக்கப்படும் திருநாளாக இந்த திருநாள் விளங்குகின்றது.  

மகாவிஷ்ணு ஒரு கையில் ஓலைக்குடையும், மற்றொரு கையில் கமண்டலமும் தாங்கி, மூன்று அடி உயரத்திலான வாமனத் தோற்றத்தில் பூலோகம் வந்தார். பின்னர் மகாபலி வேள்வி நடத்தும் இடத்துக்கு சென்று, அங்கு தானம் பெறச்சென்று மஹாபலியை முடித்து தர்மத்தை நிலை நாட்டினார்.   வாமனர் அவனிடம், தனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டினார். சுக்ராச்சாரியார்,  மகாபலியை எச்சரித்தார்.  வாமனர் தோற்றம் மிகப்பெரும் தோற்றமாக விஸ்வரூபம் எடுத்து  ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்தார்.  ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே?’ என்று மகாபலியிடம் கேட்டார். மகாபலி, வாமனராக வந்த மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘தங்களது மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்” என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலியை நிலத்தினுள் அழுத்தினார்.  இந்த வைபவம் நடந்த இடம் (திருக்காட்கரை) இவ்விடமே என மக்கள் கொண்டாடுகின்றனர்.  மகாபலி, ‘இறைவா! என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் நான் பேரன்பு கொண்டிருக்கிறேன். ஆண்டுக்கொருமுறை என் நாட்டு மக்களைக் காணும் வாய்ப்பை எனக்கு வரமாகத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினான். வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவும் அவன் கேட்ட வரத்தைத் தந்தருளினார். அந்நாளை திருவோணமாக கொண்டாடுகின்றனர்.   

ஆண்டாள் வாமன மூர்த்தியை “உத்தமன்” ( ஓங்கி உலகளந்த உத்தமன் - திருப்பாவை) என்று கொண்டாடுகிறாள்.  இந்திரனுக்காக ஆயுதம் எடுக்காமல் சகல உலகங்களுக்கும் சகல செல்வங்களுக்கும் அதிபதியான பகவான் மாணிக்குறளனாய் (குள்ள உரு பிரமசாரி) தன் பெருமையை தாழ விட்டுக் கொண்டு வந்ததால், அவனை “உத்தமன்” என்று கொண்டாடி, அவனுடைய திருவடிகளுக்குப் பல்லாண்டு பாடுகிறாள் கோதை நாச்சியார். எம்பெருமானுடைய நறுமணம் மிக்க திருவடியின் ஸம்பந்தம் பெற்றதனால்தான் மண்ணுக்கு மணமுண்டானது என்று பராங்குச நாயகியின் உபந்யாஸம் !!    இதோ இங்கே ஒரு திருவாய்மொழி பாசுரம்:

 

மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும்

விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும்

கண்ணை உள்நீர் மல்க நின்று கடல்வண்ணன் என்னும் அன்னே என்

பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே?

 

மகாபலிச் சக்கரவர்த்தி தீவிரமான விஷ்ணு பக்தனான பிரகலாதனின் பேரன். ஒருமுறை அவன் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகம் தனக்கு ஆபத்தாக முடியும் என்று அஞ்சிய இந்திரன் மகா விஷ்ணுவிடம் முறையிட்டான். இந்திரனுக்காக விஷ்ணு கச்யபர் அதிதிக்கு மகனாகத் தோன்றினார். மகரிஷிகள் அவருக்கு வாமனன் என்று திருநாமமிட்டு குள்ளமான வாமன உருவத்துடன் யாகசாலைக்கு வந்து மண்ணையும் மஹாபலியையும் ஆட்கொண்டார். 

மண் என்பது லீலா விபூதி. விண் என்பது நித்ய விபூதி. இரண்டும் அவனுடையது என்று நாயகி சொல்லும் நயத்தில் வாமனனின் சீர்மை வெளிப்படுகிறது.  மகாபலி சக்கரவர்த்தி ‘‘பகவானே! நான் இப்பொழுது பாதாள உலகுக்குச் செல்கின்றேன். இருந்தாலும் நான் தேசத்தை விட்டு செல்வது வருத்தமாக இருக்கிறது. எனவே, ஆண்டுதோறும் ஒரு நாள்,  நான் வந்து, இந்த மண்ணையும் மக்களையும் சந்திக்கும்படியாக வரம் அருள வேண்டும்” என்று வேண்ட, அதைப்போலவே எம்பெருமான்  மகாபலிக்கு வரம் தந்து அருளினார். மகாபலியும், ஆவணி மாதம், திருவோண நன்னாளில் வந்து, தான் ஆண்ட மண்ணையும்,  மண்ணில் உள்ள மக்களையும்  பார்த்துச்  சந்தோஷப்பட்டு, எல்லோருக்கும் நல் வாழ்த்துக்களையும், நல் வாழ்க்கையையும் கொடுப்பதாக ஐதீகம். அப்படி வருகின்ற மகாபலியை, மக்கள் வரவேற்பதற்குத் தயாராக, மலர்களால் கோலமிட்டு, மங்கல தோரணங்கள் கட்டி, அழகு படுத்துகிறார்கள். பல்வேறு வகையான பணியாரங்களைத் தயார் செய்து, படைத்து உண்டு மகிழ்கின்றனர். 

The itheeham  of the Onam festival describes an unshakable history with Thrikkakara temple. It is believed that the place was originally called Thrikalkkara and was later changed to Thrikkakara. The name is derived from the legend that Lord Vishnu in his Vamana avatar set foot here to visit Mahabali, the region's former king, and consigned him to the underworld.

 





At Thrikkakara,  in  an enormous 10 acres of land,   lies two temples. One   devoted to Vamanamoorthy and other  to Lord Shiva. Vamana, who is the main deity, is located to the east.  The  location is significant historically. Cheraman Perumal, the emperor of Kulasekharam used to conduct the annual meeting of feudal kings at Thrikkakara temple. The meetings occurred during the festival season which starts from the day of Thiruvonam in the month of Karkidakam to Thiruvonam day in the month of Chingam. This 30-day long festival  concluded with a 10-day celebration of Onam that starts from the Atham day to Thiruvonam day, in the month of Chingam. A total of 56 local kings, 64 village chieftains and several members of nobility were invited to this festivities.   

Onam celebrations include Vallam Kali (boat races), Pulikali (tiger dances), Pookkalam (flower Rangoli), Onathappan (worship), Onam Kali, Tug of War, Thumbi Thullal (women's dance), Kummattikali (mask dance), Onathallu (martial arts), Onavillu (music), Kazhchakkula (plantain offerings), Onapottan (costumes), and Atthachamayam (folk songs and dance), besides the Sadya feast.

 





Cochin University of Science and Technology (CUSAT) is a government-owned autonomous science and technology university in Kochi, Kerala.   It was founded in 1971.  Cochin University is a station of Kochi Metro. The station is located between Kalamassery and Pathadipalam. It was inaugurated by the Prime Minister of India Shri Narendra Modiji  in  2017 as a part of the first stretch of the metro system, between Aluva and Palarivattom. Edappally in English literally translates as Eda, short for edaykku (Malayalam term for "in-between") and Pallykollunna Sthalam (Malayalam term for "the place or palace where Kings(Rajas) used to take rest ).     Just get down at Edapalli metro station – take an auto to the Divyadesam situate around 3 km – ‘Thirukkatkarai’ Temple. 

 


The one seen at the start is ‘Onavillu’ -  a ceremonial bow with painting,  dedicated to the Sri  Padmanabhaswamy Temple in Thiruvananthapuram on the day of Thiruvonam.  The right to create this has been bestowed on the Karamana Melarannoor Vilayil Veedu family.   Mr. R. Binkumar and his family members are continuing this ancient tradition.  Possibly, Ona villu  could be one of the oldest temple rituals in Kerala and is believed to be as old as the Padmanabhaswamy temple itself. The dedication of Onavillu was briefly stopped, but was re-introduced in 1424 AD during the reign of Veera Iravi Varma.  The legend of Onavillu is linked to Mahabali. When Vamana revealed his true identity through vishwaroopa, Mahabali requested lord Vishnu to show all his 10 avatars and related stories. At this point, Vishnu summoned Vishwakarma Devan. It is believed that it was Vishwakarma who first created the Onavillu. Lord Vishnu also promised Mahabali to create the avatar paintings through Vishwakarmars from time to time every year and show him. This is the legend behind Onavillu. 

Onavillu is made using the wood obtained from kadamba and mahagani trees. The lengths of Onavillu are three-and-a-half feet, four feet and four-and-a-half feet. The design of the same is modelled on the boat on which the ‘thazhikakudam’ of the temple is placed. These include Dashavatharam villu, Ananthashayanam villu, Sreerama Pattabhishekam villu, Krishaleela villu, Sastha villu and Vinayaka villu. Natural colours are used in painting these. The family observes abstinence for 41 days during the creation of Onavillu. The dedication of Onavillu happens around 5 am in the morning. It is received in a grand way in front of the temple. Each pair is then dedicated to different idols in the temple. There also used to be a percussion instrument named Onavillu in the past made using the wood of coconut tree. 

Interesting ! – pic credit of Onavillu and couple of photos to Kerala state Tourism Dept web.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15.9.2024 

No comments:

Post a Comment