Thiruvallikkeni ThirupPavithrothsavam 2023 –
இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
.. .. …
Today 26th Aug 2023 is day
1 of Thirupavithrothsavam at Thiruvallikkeni divyadesam – Sri
Parthasarathi Emperuman had periya mada veethi purappadu this evening.
Vasantha finds her husband Ranganathan dead. A masked murderer tries to kill her too, but she escapes from him. Vasantha is left in a state of shock and becomes mentally paralysed. More murders follow and every time a murder takes place, a cigar bit is left by the murderer intentionally. That was the plot of - Athey Kangal (அதே கண்கள் -Same Eyes) written and directed by A. C. Tirulokchandar, starring Rvichandran and Kanchana, released in 1967 produced by A. V. Meiyappan under Balasubramanian & Co, a subsidiary of his company AVM Productions.
Arabs capture French Captain de Cadiere (Bryant), but he escapes
with the help of Hassouna (Nazimova), a young Bedouin woman of the desert. She
is abandoned to die by the irate sheik (Stern),
captured by marauders of the desert sands, and is sold in slavery to the
manager of a small French circus. The Captain, at a show near a small town
where his ship is anchored, finds the Bedouin woman and takes her to his home.
After hearing that the Captain's detachment has killed all of her tribe in the
desert, she vows vengeance upon the Frenchman. However, she fails in the
execution of her threat due to his love for her. - that was the plot of ‘Eye for Eye’ - 1918
American silent drama film directed by Albert Capellani. There seems to be many movies made with the
same name at different decades !
Eyes are very important
organ. A healthy pair of eyes means a clear vision, which plays a major role in
day-to-day life and quality of experiences. Humans have binocular vision, meaning
that both the eyes create a single combined image. Optical components create an
image, which further gets perceived and interpreted by the brain via connecting
neurons. The eye sits in a protective bony socket called the orbit. Six extraocular
muscles in the orbit are attached to the eye. These muscles move the eye up and
down, side to side, and rotate the eye. The extraocular muscles are attached to
the white part of the eye called the sclera. This is a strong layer of tissue
that covers nearly the entire surface of the eyeball. Light is focused into the eye through the
clear, dome-shaped front portion of the eye called the cornea.
இமை - நாம் அனைவரும்
அறிந்ததே ! கண்விழியை மூடி திறக்கவல்ல தோலுறுப்பு. கண் சிமிட்டும் நேரம், ஒரு மாத்திரை எனப்படும். 'கண்ணை இமை காப்பது
போல்...’ என்பார்கள் - அவ்வாறு இமைகள் நம் கண்களை காக்கின்றன.
கண்ணுக்கு அழகும் முகத்துக்குப் பொலிவும் தருவது மட்டும் அல்ல, கண்கள் உலர்ந்து விடாமலும்,
பாக்டீரியா முதலிய தூசுகள் கண்களில் விழுந்து விடாமல் தடுக்கும் அரணாகவும் கண் இமையில்
உள்ள முடிகள் செயல்படுகின்றன. இன்றைய உலகத்தில் கணினியில் மிக அதிக நேரம் செலுத்துவோர்
கண் மற்றும் இமையில் வலி அல்லது மற்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள்.
The nictitating membrane (from Latin nictare, to blink) is a
transparent or translucent third eyelid present in some animals that can be
drawn across the eye from the medial canthus to protect and moisten it while
maintaining vision. An
eyelid is a thin fold of skin that covers and protects an eye. The levator
palpebrae superioris muscle retracts the eyelid, exposing the cornea to the
outside, giving vision. This can be either voluntarily or involuntarily. The
human eyelid features a row of eyelashes along the eyelid margin, which serve
to heighten the protection of the eye from dust and foreign debris, as well as
from perspiration. "Palpebral" (and "blepharal") means
relating to the eyelids. Its key function is to regularly spread the tears and
other secretions on the eye surface to keep it moist, since the cornea must be
continuously moist. They keep the eyes from drying out when asleep. Moreover,
the blink reflex protects the eye from foreign bodies. Most mammals have
eyelids similar to ours – but other types of animals don’t need eyelids. For
example, fish don’t have true eyelids – they live in water that keeps their
eyes moist. Fish can’t close their eyes – and neither can snakes. Some lizards
have two eyelids – a thin, clear one to protect the open eye – and another
pigmented eyelid to close the eye.
‘bat an eyelid’ – would mean to
display a subtle emotional reaction, such as consternation, annoyance, sadness,
joy, etc. Generally used in the negative to denote that the person in question
did not display even a hint of an emotional response. “not bat an eyelid” would mean –
not to display even a hint of an emotional response, such as
consternation, annoyance, sadness, joy, etc.
இமை - இயற்கை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் தந்த வர பிரசாதம். 'நடிகைகள்,
மாடலிங் துறையில் இருப்பவர்கள் போன்ற சிலர் செயற்கை இமை பொருத்தி வந்த காலம்
மாறி, தற்போது கல்லூரி பெண்களிடமும் செயற்கை இமை பிரபலமாகி இருக்கிறது. இன்றைய பெண்கள்
திருமண நிகழ்ச்சி, ஏனைய விழாக்கள் மட்டுமில்லாமல் எந்த இடத்திலும் தனித்துவமாகவும்,
அழகாகவும் தெரியவேண்டும் என்பதற்காக செயற்கை கண் இமைகளைப் பொருத்திக் கொள்ள
விரும்புகின்றனர்.
புறநானூறு போர்க்களத்தை
விவரிக்கிறது. படைவீரர்கள் மாண்ட பின்னர் அரசன் சோழனும் சேரனும் மோதிக்கொண்டனர்.
இதற்கு அறப்போர் போர் என்று பெயர். இந்தப் போரில் இருவரும் போர்களத்திலேயே மாண்டனர்.
இரு பெரு வேந்தரின் குடைகளும் முரசுகளும் போர்களத்தில் சாய்ந்து கிடந்தன. இப்படி
வீரமரணம் பெற்றவர்கள் - வாடாத கற்பகப்பூ மாலையும், இமைகளைச் சிமிட்டாத
பார்வையும், நறுமணமுள்ள உணவை உண்ணும் தேவர்கள் அனைவரும் மிக அருமையாகப் பெறக்கூடிய
விருந்தினை நிரம்பப் பெற்றனர்!! [இமையா நாட்டத்து நாற்ற உணவினோரும் ஆற்ற அரும்
பெறல் உலகம்]
ஆழ்வார்கள் மயர்வற
மதிநலம் அருளப்பெற்றவர்கள். . அவர்கள் தங்கள் செயல் எண்ணம் வார்த்தை ஒவ்வொன்றிலும்
எம்பெருமானையே பேணினவர்கள். ஆழ்வார் பாசுரத்திலே "இமையாத கண்"
எனப்பெற்றது ஞானக்கண். அது திறந்தால் அஜ்ஞானவிருள் அகலுமாதலால் இருளகலநோக்கி என்றார்
நம் பொய்கையாழ்வார். .
திருப்பவித்ரோத்சவம்
ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில்
யாகசாலை அமைத்து ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால்
யாக யக்னங்களும், வேதவிற்பன்னர்களால் வேத பாரயணமும்; அத்யாபகர்கள் மற்றும் திவ்யபிரபந்த
கோஷ்டியினரால் அருளிச்செயல் - திருவாய்மொழி சேவை சாற்றுமுறையும் நடைபெறுகிறது.
ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடு நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு
நூலிலான பல வண்ணங்கள் உடைய திருப்பவித்ர மாலை சாற்றப்படுகிறது.
இதோ இங்கே பொய்கைப்பிரானின்
அமுத வரிகள் - ஆழ்வார் தம் முதல் திருவந்தாதி பாசுரத்தில் இருந்து :
-
இமையாத கண்ணால் இருள்
அகல நோக்கி,
அமையாப் பொறிபுலன்கள்
ஐந்தும் - நமையாமல்,
ஆகத்தணைப்பார்
அணைவரே, ஆயிரவாய்
நாகத்தணையான் நகர்.
இமையாத கண்ணால்
- அதாவது, ஞானத்தில் மிகுந்த நெஞ்சு எனும் உட்கண்ணாலே அஜ்ஞாநமாகிய இருள்
நீங்கும்படியாக, தமது ஸ்வரூபத்தையும் பரப்ரஹ்ம ஸ்வரூபத்தையும் உள்ளது, உள்ளபடியே
கண்டும் திருப்தி பெற்று அடங்கியிராத பொறி புலன்கள் ஐந்தும் அவற்றிற்கு உரிய
பஞ்சவிஷயங்களையும், அடக்காமலே - பூவுலகத்து மாதர்களின் தேஹத்தை அணைத்துக்கொண்டு
கண்டபடி திரிபவர்கள், ஆயிரம் தலைகளையும் வாய்களையும் கொண்ட ஆதி சேஷனைப்
படுக்கையாகவுடைய எம்பெருமானது நகரமாகிய ஸ்ரீவைகுண்டத்தை கிட்டப் பெறமாட்டார்கள்
! - எனவே உலகத்து ஆசைகளை ஒழித்து, எம்பெருமானிடம் தங்கள் பாசத்தை செலுத்துமாறு
உரைக்கின்றார் பொய்கை ஆழ்வார்.
திருவல்லிக்கேணி
திருப்பவித்ரோத்சவம் முதல் நாள்- 26.8.2023 புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே
:
adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26.8.2023
பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.
🙏🙏 அருமையான பவித்ரோத்ஸவ படங்களுடன் , இமையா கண் என்பதை ஒட்டி கண்களைப்பற்றிய, இமைகள் பற்றிய நீண்ட informative கட்டுரை! தாசன்!
ReplyDeleteஅருமையான பவித்ரோத்சவம் பெருமாளோடு தரிசனம். சிறப்பான பதிவு.. 3நாட்களா பவித்ரோத்சவம்..
ReplyDelete