To search this blog

Tuesday, August 29, 2023

Praying Emperuman Sri Parthasarathi - "கண்ணைத் திறந்து பார் மனமே" -

 பொன்மாலை பொழுது !  இன்றைய நாள் சென்று விட்டது.  வாழ்வில் மற்றும் ஓர் நாள் !!  நன்றாக சென்றதா !  வெறுமனே சென்றதா! வீணாக சென்றதா! -  ஆழ்மனசு அறியும்.  

கண்ணை மூடி தியானித்தால் கண்ணபெருமான் - எவ்வளவு வீணர்களாக சத்தற்ற விஷயங்களுக்கு சண்டையிட்டு, ஆத்திரப்பட்டு, நாட்களை வீணாக்கியுள்ளோம் !!    ஊத்துக்காடு வேங்கட கவி  இயற்றிய "கண்ணைத் திறந்து பார் மனமே" - பிலஹரி ராகத்தில் கேட்டு லயித்ததுண்டா !!     

 

கண்ணைத் திறந்து பார் மனமே எந்தக்

காலமும் தவம் செய்தாலும் காணலரிதாகின மாதவன் வெகு நேரமாக

காத்திருக்கின்றான் உந்தன் முன்னமே –

 

பண்ணும் இயலும் சேர்ந்தொலிக்க இரு

பார்வையென்னும் நீலமணி ஜொலிக்க

பண்ணும் தவம் எல்லாம் பலிக்க உந்தன்

பார்வை முன்னே வந்து நின்று ஸேவை தந்து களிக்க

 

நீலவண்ணத் தோகையொன்று நேரநின்று ஆடி ஆடி

நிர்த்தமிடும் முடியினைக் காணாய்

நெஞ்சே உனையள்ளும் மந்தார மாலையும்

நின்று அசைந்தாடுவதை கண்திறந்து காணாய்

காலை வளைத்து நின்று கானக் குழல் ஊதும் அந்தக்

காட்சியினைக் கண் திறந்து காணாய்  

 

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் (1700 - 1765) ஓர் அற்புத கலைஞர் - மனமுருகும் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.  திருவாரூர் மாவட்டத்தில் தக்சண துவாரகை என்னும் மன்னார்குடியில் பிறந்தார். இவர் வளர்ந்த இடம் தேனுஜவாசபுரம் என அழைக்கப்படும் ஊத்துக்காடாகும். இந்த ஊர் திருவாருர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்காவில் கும்பகோணத்திலிருந்து திருக்கருகாவூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.  கண்ணனின் திருவிளையாடல்களைப் புனைந்து எண்ணற்ற பாடல்களை இயற்றி தன்  தாயார் மறைவுக்கு பின் உலக வாழ்வில் பற்றற்று துறவியாகவே வாழ்ந்தவர். 

 


இந்தோ இங்கே ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் திவ்ய தர்சனம் - திருப்பவித்ரோத்சவம் நான்காம் நாள் திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்.

 
அடியேன் ஸ்ரீநிவாஸதாஸன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
29.8.2023

No comments:

Post a Comment