To search this blog

Sunday, June 4, 2023

Sri Varadharajar Nachiyar thirukkolam 2023 - தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

Today is day 5 of Sri Varadharajar brahmothsavam – it was Nachiyar thirukolam.  

இறைவன் மிகப்பெரியவன்.  நம்மை காப்பவன் - அவனடி சரண் அடைவதல்லால் நமக்கு வேறொன்றுமில்லை. கம்ப ராமாயணம் ஓர் உன்னத காவியம்.   முதல் பாடல் மிக அற்புதமாகத் தொடங்குகிறது. ராம சரிதம் சொல்லப் புகுந்த காவியத்திலே,  கடவுள் வாழ்த்தாக ஆரம்பிக்கும்  பாடலிலே,  மங்கலச்     சொல்லொடு  தொடங்கவேண்டும்    என்ற மரபின்படி ‘உலகம்’ என்ற  மங்கலச் சொல்  கவிச்சக்கரவர்த்தியின் வாக்கில்  முதலாக  எழுகிறது.  உலகம்  என்பது நிலையியற்  பொருள்.

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.

நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா

அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்

தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 

எல்லா உலகங்களையும்; தமது அற்புத அளவில்லா அன்பினாலும் சங்கற்பத்தாழும்   படைத்தலையும்; நிலைத்திருக்குமாறு  காப்பதையும்;  அழித்தலையும்;     என்றும்   முடிவுறாததும் அளவற்றதுமாகிய  விளையாட்டாக உடையவராகிய; அவரே எங்கள் தலைவர்.  அப்படிப்பட்ட பரமனுக்கே நாங்கள் என்றென்றும் சரணம் புகுகின்றோம்.  

பொதுப்பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் என்ற இரண்டு  வகையினுள் ‘உலகம்  யாவையும்’ என்பது முதலான பாடல்கள் தற்சிறப்பு  ஆயிரம்.   ‘தெய்வ   வணக்கமும்  செயப்படு  பொருளும்.    எய்த உரைப்பது தற்சிறப் பாகும்’ என்பது தற்சிறப்புப் பாயிர விளக்கம்.  படைத்தல்,   காத்தல். அழித்தல் ஆகிய மூவகை  அருந்தொழில் பரமனுக்கு   மிக   மிக   எளிது   என்பதை  ‘விளையாட்டு’   என்ற சொல்லாட்சி குறிக்கிறது.  

தேவாதிராஜன் ப்ரஹ்மோத்சவத்தில் இன்று 5ம் நாள். நாச்சியார் திருக்கோலம்.  திருவல்லிக்கேணியில் ஸ்ரீவரதராஜர்  பொன் மாலை பொழுதினில் அற்புத திருக்கோலத்தில் எழுந்தருளினார்.  

அகில லோக நாயகனான எம்பெருமானின் திருவடிகள் கீழே பெரிய கோபுரமும், இப்பூவுலகமும் இருப்பது வியப்பல்லவே.


 

Here is a photo of Sri Varadha Raja Perumal purappadu in pallakku with Temple gopuram seen under the divine Hand.
 
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4.6.2023  

No comments:

Post a Comment