To search this blog

Wednesday, June 28, 2023

Sri Azhagiya Singan pathi ula 2023 - பயிலும் சுடரொளி மூர்த்தி

 பயிலும் சுடரொளி மூர்த்தி  -  ஸ்ரீஅழகியசிங்கன்


 

__________   is a cyclic monoterpene ketone that is bornane bearing an oxo substituent at position   .. .. wonder what ?!?!? 

Lamps provide light !  - An electric light, lamp, or light bulb is an electrical component that produces light. It is the most common form of artificial lighting. Lamps usually have a base made of ceramic, metal, glass, or plastic, which secures the lamp in the socket of a light fixture, which is often called a "lamp" as well. The electrical connection to the socket may be made with a screw-thread base, two metal pins, two metal caps or a bayonet mount.   

An electric bulb refers to an electric lamp which consists of a translucent or transparent glass housing,  also known as a light bulb. This simple device has been used for the purpose of illumination for more than a century.  

 


பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை,

பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை,  ....   .. ..   

எம்பெருமான் எத்தகையவன் ?  -  ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி வரிகளில் - அவன் மிக்க தேஜஸ்ஸையே விக்ரஹமாக உடையவன்,  சுடர் என்றும் ஒளி என்றும் தேஜஸ் மிக்கவன், சுத்த சத்வமாய் ஸ்வரூப ப்ரகாசகமான விக்கிரஹத்தை உடையவன் - இதோ இங்கே எங்கள் எம்மிறை எம்பெருமான் இமையோர்க்கு நாயகன் திருவல்லிக்கேணி ஸ்ரீஅழகியசிங்கனின் திவ்யஸ்வரூபம். 

முதல் வரியில் சொல்லப்பட்டது "கற்பூரம்".    கற்பூரம் எனும் சொல்லின் ஆங்கிலச் சொல்லான Camphor எனும் சொல் , பிரெஞ்சு சொல்லான camphre என்பதிலிருந்து வந்தது. இந்த பிரெஞ்சு சொல் இடைக்கால லத்தீன் சொல்லான camfora என்பதிலிருந்தும், அதே போல அரபிய சொல்லான kafur என்பதிலிருந்தும், சம்ஸ்கிருத சொல்லான கற்பூரிலிருந்தும் பெறப்படுகிறது

 


கீழே கற்பூர ஒளி, மேலே மின்சார விளக்கு ஒளி - மின்னுவதோ அவன் திருமேனி எழிலே !!  திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கனின் எழில் மிகு திருக்கோலம் -  ஆனி  ப்ரஹ்மோத்சவத்தின் 2ம் நாள் மாலை - சிம்ஹ வாகனத்துக்கு எழுந்து அருளும் பத்தி உலா.

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்

மாமண்டூர்  வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்

28.6.2023

No comments:

Post a Comment