To search this blog

Saturday, September 24, 2022

Thiruvallikkeni Sri Azhagiya Singar Purattasi Sani 1 2022 - எந்தையெம்பெருமானென்று .. .. சிந்தையுள் வைத்து!!.

The tamil month of Purattasi has a pride of place.  Devotees throng  Vishnu temples, especially Tirupathi.  In this month, occurs the  annual Brahmothsavam at Tirupathi. It is also the month of ‘Navrathri’ festival.  This year, Navarathri festival starts from Monday 26.9.2022.   On every Saturday in this  month of Purattasi, there will be Periya maada veethi purappadu of Emperuman  Azhagiya Singar.   Today is  Sani varam 1.  




அச்சுதா, அனந்தா , கேசவா, நாரணா, மாதவா, கோவிந்தா என எம்பெருமானின் திருநாமங்களை உச்சரித்து அவனையே நினைத்து அவனடி சேர்வதே நம் இலட்சியம்.  இதற்கு மிக உகந்த மாதம் புரட்டாசி.  திருவேங்கடமலையில் அடிவாரத்தில் இருந்து ஒவ்வோர் இடத்திலும் 'கோவிந்தா, கோவிந்தா' என அவனது திருநாமம் எதிரொலிக்கும்.  ஏழுகொண்டலவாடா ! வேங்கடரமணா, கோவிந்தா என அடிமனதில் இருந்து எழும் பக்தனின் மன உச்சரிப்பு அது.  திருமலையில் பக்தர்கள் எளியவர்கள், திருவேங்கடவனை தவிர வேறொன்றையும் நினைக்காதவர்கள்.  அவர்கள் பக்கலில் உள்ளவர்களின் கருத்தையோ, அங்கீகாரத்தையோ எதிர்பார்ப்பதில்லை.  பக்தனுக்கும் பெருமாளுக்கும் ஆன நேர் உரையாடல் அது.  ஸ்வாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் :  

எந்தையேயென்றும்  எம்பெருமானென்றும்,

சிந்தையுள்  வைப்பன் சொல்லுவன்பாவியேன்,

எந்தையெம்பெருமானென்று   வானவர்,

சிந்தையுள் வைத்துச் சொல்லும்  செல்வனையே. 

பரமபத வாசிகளான நித்யஸூரிகள்,  ஸ்ரீமந்நாராயணனை எந்தையே! எம்பெருமானே! என்று  மனத்தினால் சிந்தித்து,  வாயினால் தோத்திரஞ் செய்யப்பெற்ற ஸ்ரீமானாகிய எம்பெருமானை - பல குறைகள் நிறைந்த குற்றங்கள் பல புரிந்த பாவியாகிய நான் எந்தையே! என்றும்,  எம்பெருமானே என்றும் என ஆசை  பொங்க  அழைத்து, எனது சிந்தையினுள்ளே வைத்துக்கொள்வேன்,  வாயினாலுஞ் சொல்வேன் - எப்பொழுதும் நலம் தரும் சொல் அதுவே. நாரணனது திருநாமங்களே எமக்கும் அனைத்து பக்தர்களுக்கும் இம்மையிலும் மறுமையிலும் நலம் தர வல்லது.   





At Thiruvallikkeni divyadesam, there would be 5 weeks of Purattasi Sani celebrations but the 2nd falling during Navrathri, there would be no purappadu of Sri Azhagiya Singar.  Today with huge expectations, Sri Thelliya Singar came out His gopura vasal around 0450 pm .. .. as HE came out – there was moonram thiruvanthathi goshti thuvakkam and immediately came sharp showers for a very short while.  Sri Azhagiya Singar purappadu was curtailed and HE returned back with thiruvanthikappu too occurring inside the temple.  

Here are some photos of the short purappadu. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24.09.2022. 







1 comment: