To search this blog

Wednesday, October 6, 2021

மஹாளய வழிபாடு - இடர்களும், பக்தர்களுக்கு சோதனைகளும் !!

Today 6th Oct 2021 (20th  day of Purattasi) is Mahalaya Amavasai.  Navarathri uthsavam starts today .. ..  



முழுவினைகள் முன்னம் கழலும் முடிந்து !!–தொழவேணுமென்று நினைத்த மாத்திரத்தில் பாவங்கள்   தொலையுமா /  அதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?? 

இன்று 'மஹாளய அமாவாசை'!  .. .. இன்று காலை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் வாசலில் அதிகமாக காவலர்கள் !! - கோவில் திறந்து இருந்தது - பக்தர்கள் சேவிக்க அனுமதி உண்டு ஆனால் திருக்குளம் அருகே சடங்குகள் செய்ய விரும்பிய ஹிந்து பக்தர்கள் துரத்தப்பட்டனர்.  ஏன் இப்படி இந்துக்கள் சம்பிரதாயங்கள் அனைத்துக்கும் அரசாங்க எதிர்ப்பு !!  

மஹாளய அமாவாசை : -  ஐதீகங்கள் !  நம்பிக்கைகள் !! சடங்குகள் ! மத நம்பிக்கைகள் !! - சிலருக்கு புரியவில்லை என்பதால் மட்டுமே இவை எவையுமே அர்த்தமற்றவை ஆகிவிடாது !!  மாளய அமாவாஸ்யை வழிபாடு இந்துக்களின் அடிப்படை ஆணிவேர் நம்பிக்கை.   வேர்கள் இல்லாது விருட்சங்கள் இல்லை; விதைகள் இல்லாது கனிகள் இல்லை. முன்னோர்களின் சாயல் இல்லாமல் நம் தலைமுறைகளே இல்லை என்கிறது கருட புராணம். வாழையடி வாழையென நம்மை வாழ்விக்கும்  முன்னோர்களை மகாளய அமாவாசை தினத்தில்  முடிந்த அளவுக்கு வழிபட்டு நலமும் வளமும் பெறுதல்  ஹிந்து தர்மம்.  அய்யகோ இன்றோ -   கடற்கரை பகுதிகள், நீா்நிலைகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களுக்கு  இவ்வாறு வழிபடு செய்ய பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மகாளய தானம் மகத்தான தானம்' என்கின்றன புனித நூல்கள்.  'மறந்து போனவர்களை மாகாளயத்தில் சேர்' என்பது பழமொழி. ஏழேழ் தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்களுக்கும் அவர்களுக்கான பித்ரு காரியங்களைச் செய்ய வேண்டும் என்பது ஹிந்து  தர்மங்கள் நமக்கு விதித்திருக்கும் கட்டளை. பெற்றோர்களைப் பேணுதல், தெய்வ ஆராதனை, அதிதி வரவேற்பு, சந்நியாசிகளைப் போற்றுதல், பித்ரு காரியங்கள் என ஐவகை தர்மங்களைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள்.   திதி, தர்ப்பணம் என்னும் வகையில் நீர் நிலைகளுக்கு அருகே எள்ளும் நீரும் பிண்டமும் கொடுத்து செய்யப்படும் ஒரு வழிபாடு.  மூதாதையர்களுக்கு  மக்கள்  நன்றி காட்டும் நாளே மகாளய அமாவாசை.  

திருவல்லிக்கேணியில்  திருக்கோவில் முன்பு  மஹாளய வழிபாடு - படம் திரு MA பார்த்தசாரதி,

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளாய அமாவாசை என்று கொண்டாடப்படுகிறது.  இந்த நாளில்  நீர்நிலைகளில் புனித நீராடி கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல் முன்னோர்கள் நினைவாக நீர் நிலைகளின் அருகில் தர்ப்பணம் கொடுத்தும் வழிபடுவார்கள். கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறிய மற்றும் பெரிய கோவில்களில் தர்ப்பணம் கொடுக்கவும், தரிசனம் செய்யவும் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.  

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளாய அமாவாசை தினத்தில் லட்சக்கணக்கானோர் கூடுவார்கள். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டவாறு செல்கிறது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பால்,  அம்மா மண்டபம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அந்த பகுதி தடுப்பு கட்டைகள் கொண்டு மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  அது போலவே சேதுக்கரையிலும் பக்தர்களுக்கு ஏமாற்றம் தான். தடை விதிப்பு குறித்த தகவல் அறியாத பலர் அதிகாலையிலேயே இவ்விடங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பலர் போலீசாரிடம் வேண்டுகோளாக கேட்டும் அனுமதிக்கப்படவில்லை.  

திருவல்லிக்கேணி திருக்குளத்தில் இத்தகைய சடங்குகள் நிறைய நடக்கும்.  இங்கே போலீஸ் தடை விதித்ததனால்,   ஹிந்து பக்த குடும்பங்கள் இங்கும் அங்குமாக அலைந்தனர்.  வெங்கட்ரங்கம் தெருவில் ஒரு சிறு இடத்திலே பலர் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியதால் இங்கே மக்கள் கூட்டம் குவிந்து,  பக்தர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு உட்படுதப்பட்டனர்.   

கோவில் திருக்குளம் அருகே உள்ள பெரிய இடத்தில் அனுமதி மறுத்து, அவர்களை அலைக்கழித்து, வேறு இடங்களில் கூட்டம் கூடுவதால் - ஹிந்து பக்தர்களுக்கு இடர் விளைவிப்பதை தவிர வேறு என்ன பலன்.   ஊர் முழுவதும் திறந்துவிட்டு, பீச், திரையரங்கம், வணிக வளாகங்களில் மக்கள் கூடினால் வராத கொரோன !  உள்ளாட்சி தேர்தல் கூட்டங்களில் வர இயலாத கொரோனா! ஹிந்து வழிபாட்டில் மட்டுமே ஏன் இடர் செய்கிறது !!  ஏன் இப்படி  அரசாங்கம் ஒரு சாராரை மட்டுமே எப்போதும் கஷ்டப்படுத்துகிறது !!   


இன்று மாலை அதி அற்புதமாக நடக்கும் அம்மாவாசை புறப்பாடு கூட கிடையாது !  - என்று பெருமாள் புறப்பாடு  நடக்கும்?? - இது போன்று திருக்கோவில் உத்சவங்கள் தடையின்றி நடைபெற - அதிகாரிகள் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்களா !!!  

In astronomy, the new moon [Amavasyai]  is the first lunar phase, when the Moon and Sun have the same ecliptic longitude. At this phase, the lunar disk is not visible to the unaided eye, but its presence may be detected because it occults stars behind it.

Most Americans take access to reliable, fast wireless internet (Wi-Fi) for granted. Yet, in underserved communities, reliable internet access can be as elusive as it is on the Moon. NASA is working to solve both challenges. Digital inequality or inadequate internet access is a socioeconomic concern across the United States, and the pandemic has worsened the divide. In Cleveland, home of NASA’s Glenn Research Center, a study by the National Digital Inclusion Alliance found that about 31% of the city’s households have no broadband access.  Following the study, the Greater Cleveland Partnership (GCP), an economic development organization, reached out to NASA Glenn for assistance in examining the technical barriers of digital inequality the way only a space agency can – by using the Moon to solve an earthly problem.

“This presented a great opportunity to develop solutions to the challenges we face sending astronauts to the Moon under Artemis while also addressing a growing societal issue in our hometown,” said the  director of Technology Incubation and Innovation at Glenn. The study found that attaching Wi-Fi routers to approximately 20,000 lampposts or other utility poles would help solve Cleveland’s connectivity issues. By spacing routers no more than 100 yards apart, this approach would provide around 7.5 megabits per second (Mbps) download speed in a four-person home. “That connectivity is good enough to complete schoolwork, participate in virtual calls, and other internet-based activities, but it isn’t high enough to allow for 4K streaming,” said  the Compass team lead at NASA Glenn. “If we move the routers a little closer, 50-75 yards apart, that greatly improves bandwidth.” 

அதுநன்று  இது தீது என்று ஐயப்படாதே,

மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற

பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள்

முன்னங் கழலும் முடிந்து.

 

இந்த பூவுலகில் - ‘அது நல்லதோ? இது கெட்டதோ?‘ என்று ஸந்தேஹப்பட்டு ஐயுற வேண்டா ! நம் பேயாழ்வார் அருளுரை இதோ :   எவ்வித மனக்கிலேசமும் இல்லமால், தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த எம்பெருமானான ஸ்ரீமன் நாராயணனின்  அழகிய, விரும்பத்தக்க திருவடிகளை பற்றி தொழுதால் ஒன்றே போதுமே ! நமது முழு பாவங்களும் முடிந்து,  கஷ்டங்கள் எல்லாம் நம்மை நீங்கும்.   நலம் தரும் சொல் 'நாராயணா  என்ற நாமமே *'. 

                Reminiscing good olden days, here are some photos of Sri Parthasarathi Perumal Mahalaya Amavasai purappadu at Thiruvallikkeni divaydesam that occurred on 23.9.2014.  Praying Emperuman that all these hindrances are blown away and we are able to have unhindered darshan of our Emperuman on all days, and all devotees live happily with good health and peacefully.

வெள்ளி, சனி, ஞாயிறு - என வாராந்திர விடுமுறைகள் - போன்ற இடர்கள் இல்லாமல் - எம்பெருமான் தரிசனம் அனைவருக்கும் என்று கிடைத்து, நாம் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆனந்த வாழ்வு வாழ்ந்திட நம் எம்பெருமானை வேண்டுவோம்.

 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
6th Oct 2021.  









No comments:

Post a Comment