To search this blog

Saturday, October 2, 2021

Purattasi Sani 3 2021 : வேங்கடத்தான் பாதம் பணிந்து !!

Today 2.10.2021 - is  third Saturday in the month of Purattasi.  On this day thousands would come to the temple for darshan of Emperuman.     The 4th one would be day 4 of Navarathri uthsavam that commences on 6th Oct 2021 on Mahalaya Amavasai day.   For every Purattasi Sani, (other than the ones during Navarthri)  there would be grand periya mada veethi purappadu of Sri Azhagiya Singar at Thiruvallikkeni, but sadly, due to Corona restrictions placed by the Govt, there would be no purappadu and we cannot go inside Temple and have His darshan too.  Sri Thelliya Singar in His purappadu coming out of Western Gopuram – and having darshan of His Sangu Chakram would rid us of all sins, diseases and difficulties – we can now pray to Him to provide that opportunity sooner !! 



இன்று புரட்டாசி சனி மூன்றாவது  வாரம்.  திருவல்லிக்கேணியில் ஸ்ரீ அழகியசிங்கர் புறப்பாட்டை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு களித்திருப்பர் .. .. அய்யகோ, அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் புறப்பாடும் கிடையாது; நாம் திருக்கோவிலுக்கு சென்று  சேவிக்கவும் இயலாது !!  - இந்நிலை என்று மாறும் !!

Our mind chases happiness and wants to be relaxed and happy !  Happiness is an emotional state characterized by feelings of joy, satisfaction, contentment, and fulfillment. While happiness has many different definitions, it is often described as involving positive emotions and life satisfaction.  When most people talk about happiness, they might be talking about how they feel in the present moment, or they might be referring to a more general sense of how they feel about life overall. Because happiness tends to be such a broadly defined term, psychologists and other social scientists typically use the term 'subjective well-being' when they talk about this emotional state.  

Happiness is an electrifying and elusive state. Philosophers, theologians, psychologists, and even economists have long sought to define it. And since the 1990s, a whole branch of psychology—positive psychology—has been dedicated to pinning it down. More than simply positive mood, happiness is a state of well-being that encompasses living a good life, one with a sense of meaning and deep contentment. Feeling joyful has its health perks as well. A growing body of research also suggests that happiness can improve your physical health; feelings of positivity and fulfillment seem to benefit cardiovascular health, the immune system, inflammation levels, and blood pressure, among other things. Happiness has even been linked to a longer lifespan as well as a higher quality of life and well-being.

Attaining happiness is a global pursuit. Researchers find that people from every corner of the world rate happiness more important than other desirable personal outcomes, such as obtaining wealth, acquiring material goods, and getting into heaven.  The word pleasure means :  enjoyment, happiness, or satisfaction, or something that gives this:

Pleasure is a momentary feeling that comes from something external -- a good meal, our stocks going up, making love and so on. Pleasure has to do with the positive experiences of our senses, and with good things happening. Pleasurable experiences can give us momentary feelings of happiness, but this happiness does not last long because it is dependent upon external events and experiences.  

செல்வம், இன்பம் போன்ற எல்லாவற்றுக்கும் மேலை நாட்டு காரணிகள், கருத்துகள், வழிமுறைகள், அளவுகோல்கள் மாறலாம்.  நமது சித்தாந்தங்கள், ஆசைகளை துறத்தலையும் - எம்பெருமானிடம் ஈர்க்கப்பட்டு அவருக்கே கைங்கர்யம் செய்வதையும் உயர்வாக கருதுகின்றன.  மனித வாழ்க்கைக்கு அடிப்படையான கூறு அல்லது குறிக்கோள் உறுதிப் பொருள் எனப்படுகின்றது.  இன்பம்  என்பது மேலை கலாச்சாரத்தில்,  வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு புறக் காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் அக உறுதிப் பொருளே. இன்பம் உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி. இன்பத்தினைச் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டு வகையாக பண்டைய தமிழ் இலக்கியங்கள் பிரித்துக் குறிப்பிட்டுள்ளன.


தமிழ் தலைவன் பேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதியிலே நமக்கு அழகாக விளக்கி வழி காட்டுகிறார்.  நமது  இந்திரியங்களை தூண்டும்  சிற்றின்பங்களில் பற்று அறுத்து பகவத் விஷயத்திலே ஊற்றம்  காட்டவேண்டும்.  பகவத் விஷயத்திலே ஊற்றம் பிறந்த  பின்னர் சிற்றின்பங்களில்  வெறுப்புபிறந்து விடுகின்றது.  இதோ இங்கே மூன்றாம் திருவந்தாதி பாசுரம் :

மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,

நூற்பால் மனம்வைக்க நொய்விதாம்,- நாற்பால

வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,

பாதத்தான் பாதம் பணிந்து. 

நாம் அடிபணிந்து வணங்கி எப்போதும் நினைக்க வேண்டியது, நான்கு  வேதங்களாலே பிரதி பாதிக்கப்படுபவனும்,  திருமலையிலே உயர்ந்து  நிற்கும் ஸௌலப்யமுடையவனும் நித்யஸூரிகளின் கிரீடம் உறையும் படியான திருவடிகளையுடையவனுமான  எம்பெருமானுடைய  திருப்பாதங்களை  பணிந்து ஆச்ரயித்து அந்த ஸர்வேச்வரனிடத்திலே நெஞ்சு பொருந்த  வேண்டும்.  அந்நிலை அடையும்போது  மங்கையர் தோள்   அணையவேணுமென்கிற காம எண்ணங்கள், ஆசைகள் ஒழித்து அவற்றை விலக்கி  - உயர்ந்த வேதங்கள், முதலிய  சாஸ்திரங்களிலே மனம் செலுத்துவதற்கு எளிதாகும்.  எனவே எம்பெருமானையே எண்ணுங்கள், அவனது திருப்பாதங்களையே பற்றுங்கோள்  என்கிறார் பேயாழ்வார்.

Reminiscing the good olden days, here are some photos of Purattasi sanikkizhamai  purappadu of Sri Azhagiya Singar at  Thiruvallikkeni divyadesam on 11.10.2014.    

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
2nd Oct. 2021.
  

பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை  களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.       








No comments:

Post a Comment