To search this blog

Tuesday, October 5, 2021

எங்குமுளன் கண்ணன் : - Sri Parankusa Mutt, Triplicane

"எத்தனை  கோணம் !  எத்தனை  பார்வை"  1980களில் வெளிவந்த ஒரு திரைப்படம் - பெரிதாக ஓடியதாக தெரியவில்லை !!

இந்து உயர்நிலை பள்ளியில் படித்த நாட்களில், இல்லத்தில் இருந்து பள்ளிக்கூடம் போகும் இனிய பாதை :  -  கங்கைகொண்டான் மண்டபம் காய்கறிகள் கடைகளை கடந்தவுடன் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் முக்கிய கட்டிடம் - திருவல்லிக்கேணி தபால் நிலையம், ட்ரிப்ளிகேன் பண்ட் ஆபீஸ், பிறகு TUCS  .. .. நிறைய வங்கி கிளைகள், திருநெல்வேலி ஹல்வா ஹவுஸ்,  எவரெஸ்ட் ஸ்கூல், நம்பீசன் வெண்ணை,   பிஆர் டீ, ஆவின் பால் பூத் , பெரிய தெரு பிள்ளையார் கோவில் [அரச மரத்தடி கற்பக விநாயகர் கோவில்]; நெய் வெண்ணை, அப்பள கடைகள், இரண்டொரு லாட்ஜுகள், நியோ இந்திரா பவன், பாத்திர கடைகள், -ஹிந்து மேல்நிலை பள்ளியின் சிறப்பு சிகப்பு கட்டிடம்  [பின்னாளில் ஒரு வாடகை நூலகம்] - முதலியன.  இவை தவிர பாலுஸ்ஸேரி  சிட்  பண்ட் நிறுவனமும் - தளவாய் வீடும்.  திரு தளவாய் என்பவர் ஒரு சுதந்திர பாராட்ட வீரர்.  தலை நரைத்த, கதராடை அணிந்த ஒரு வயதான நபரை பார்த்தாக மங்கலாக ஞாபகம். 

31st Aug 2021  was Sri Jayanthi -  grandly celebrated at Thiruvallikkeni divyadesam, at many other divyadesangal; at  every home -  in the manner of Lord Krishna being born at every home – devotees were  elated. In normal times, there would have been purappadu of Sri Krishna and in the evening Uriyadi purappadu.  At Thiruvallikkeni, the presiding deity is Sri Parthasarathi ~ Lord Krishna Himself, as He volunteered to drive the chariot of Arjuna and offer to the World, the great Bhagwad Gita.  

ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலில் சேஷசயனத்தை விட்டு நீங்கி வடமதுரையில் வந்து பிறந்தான். பெரியாழ்வார்  கண்ணனிடத்திலே அளவு கடந்த பிரேமையாலே வடமதுரையிலே பிறந்த கண்ணபிரானை திருக்கோட்டியூரிலே பிறந்ததாக கொண்டாடுகிறார். 

பராங்குசன் கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த  மன்னன்.   ரணதீரன் மகனான இவன் தனது பாட்டனின் பெயரான அரிகேசரியைப் பட்டமாகப் பெற்றிருந்தான். மாறவர்மன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்த இவன் தேர்மாறன் எனவும் முதலாம் இராசசிம்மன் எனவும் அழைக்கப்பட்டான்.  கங்க அரசன் மகள் பூதசுந்தரி இவன் துணையாவாள். இவர்கள் இருவருக்கும் பிறந்தவனே பராந்தகன் ஆவான்.  கி.பி.710 ஆம் ஆண்டு ஆட்சி ஏறிய பராங்குசன் சோழ நாட்டையும்,தொண்டை நாட்டையும் ஆண்டு வந்த பல்லவ மன்னனான நந்திவர்மன் மீது பகை ஏற்பட்ட காரணத்தினால் குழும்பூர், நெடுவயல், பூவலூர், கொடும்பாளுர், பெரியலூர் ஆகிய ஊர்களில் போர் செய்தான் பராங்குசன். பாண்டி நாட்டைப் பிடிக்க எண்ணிய இரண்டாம் நந்திவர்மனும் படையுடன் வந்தான். பராங்குசனும் வட எல்லையிலேயே நந்திவர்மனைத் தோற்கடித்தான். நென்மேலி, மண்ணை ஆகிய இடங்களில் போர் நடைபெற்றது.இப்போரில் நந்திவர்மன் பராங்குசனைத் தோற்கடித்தான்  - இத்தகவலை கச்சிப்பரமேச்சுர விண்ணகரப் பதிகம் மற்றும் நந்தியின் உதயேந்திரச் செப்பேடு இரண்டும் கூறுவது குறிப்பிடத்தக்கது.

இது சரித்திர பதிவல்ல !!  பராங்குசன்  என்ற , பெயர்ச்சொல்லுக்கு -  எதிரிகளாகிய யானைகளை அடக்கும் அங்குசம் போன்றவன் என்று பெயர்.  நம் ஸ்வாமி  நம்மாழ்வார், பராங்குசன் என்ற பெயருடன் விளங்குகிறார்.  காரிமாறன்  சடகோபருக்கு வகுளாபரணர், பராங்குசர், காரிமாறன், குமரித்துறைவன், பெருநல்துறைவன்,   முனி வேந்து,   உதய பாஸ்கரர், தெய்வ ஞானக்கவி, பாவலர்   பிரபன்ன ஜன கூடஸ்தர்,  குருகூர் நம்பி முதலான பல பெயர்களும் அலங்கரிக்கின்றன. நம்மாழ்வாருக்கு பராங்குசன் என்றொரு பெயரும் உண்டு. அவர் பெண் தன்மையடந்து பாடும்பொழுது பராங்குச நாயகியாகவே காட்சியளிக்கிறார். திருமங்கையாழ்வாருக்குப் பரகாலன் என்றொரு பெயர் உண்டு. இவரும் நாயகி பாவத்தில் பாடும்பொழுது பரகால நாயகியாகவே மாறிவிடுகிறார்.

The Bhajana Sampradaya and the Nama Siddhanta cult of the Cauvery delta channelled Krishna Bhakti all over the South. ‘Oothukkaadu Venkata Kavi (c.1700-1765) -  Oottukkaadu Venkata Subbaiyer was one of the pioneering composers in Indian classical Carnatic music. He  composed hundreds of compositions in Sanskrit, Tamil and Marathi of which over 500 are available. These were handed down from generation to generation by the descendants of the composer's brother's family.

அலைபாயுதே... கண்ணா, என்ற இந்த அற்புத பாடலை பலமுறை கேட்டு ரசித்து இருப்பீர்கள்.  பல கச்சேரிகளில், எவ்வளோ பாடகர்கள் பாடியிருப்பார்கள்.  1983ல் வெளிவந்த இப்படத்தில் - தியாகராஜன் ஸ்ரீப்ரியா நடித்து இருந்தார்கள்.  இளையராஜா சில கர்நாடக கீர்த்தனைகளை மிக அழகாக உபயோகித்து இருந்தார்.  இதோ இங்கே அவரது இசையில் கே ஜேசுதாஸ் எஸ் ஜானகி குரலில் ஊத்துக்காடு ஸாஹித்யம் - பாடலை கேட்கலாம்  

 

அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே

ஆனந்த மோகன வேணுகானம் அதில்

அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே

உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்

அலைபாயுதே... கண்ணா...

நிலைபெயராது சிலைபோலவே நின்று...

நிலைபெயராது சிலைபோலவே நின்று,

நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம்

அலைபாயுதே... கண்ணா...

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே...

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே...

திக்கை நோக்கி என் புருவம் நெரியுதே

கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே

 

Just opposite to where Sri Parthasarathi Kovil Post Office existed  in Big Street stands - Sri Parankusa Dasar Madam,  Sri Kannapiran Baktha Jana Sabhai which has a plaque that it was founded in 1872. As it stands in the house where   freedom fighter RR Dhalavai lived, he for sure was associated with this during his life – and you are sure to get attracted by the lamp post (an ancient one – still functional, seen in the photo)

Some thoughts on this place.  There are many Bhajanai Mandalis and Mutts where Hinduism thrived and cherished.  Bhajanai sampradayam is the tradition of singing songs such as keerthanas,  namavalis and bhajans extolling the Divine.  By some description, ‘bhakti’ is derived from the root ‘bhaj’ which means to ‘participate’ in the worship of a deity.   Bhajanais are based on repetition of the Lord’s name and typically include dhyana shlokams, ashtapadis, namasankeertanams and so forth, sung in a specific order ~ and sure we need to know why it is ‘Sri Parankusa Mutt’ (after whom it is named !) at Thiruvallikkeni

In the Srivaishnavaite tradition,  Thirumangai Mannan (Kaliyan) initiated the Adhyayana Uthsavam for Lord Ranganathar.  Though this continued for centuries grandly, at some point of time the divyaprabandhams sadly were lost.  Legend has it that once at Veera Narayanapuram (Kattumannar Kovil), Nathamunigal heard a group of devotees render  ArAvamuthe padhigam (decad) from ThiruvAimozhi (5.8)  - went to  ThirukKurugur tracing it.  There he met Sri Parankusa Dasar, a disciple of Madurakavi Azhwar. Learning from him, he recites ‘Kanninun Chiru thambu’ twelve thousand times, got the Divyaprabandham restoring to posterity. 

வேணுகோபால கண்ணனை எங்கே காணலாம் .. .. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் - உறியடி புறப்பாட்டின் போது புன்னைகிளை வாகனத்தில் குழலூதும் கோபாலனாக சேவை சாதிக்கின்றார்.  எங்குமுளன் கண்ணன் எனும்படி, நாம் பார்க்க, சேவிக்க, பல இடங்களிலே கண்ணன் கோவில் அமைந்துள்ளது. 

ஆலங்காத்தா பிள்ளை தெருவில் இருந்து பெரிய தெரு செல்லும் சிறிய சாலையில், தங்கம் ஸ்டோர்ஸ் / பழைய தபால் நிலைய கட்டிடம் இருந்த இடம் எதிரே - அமைந்துள்ளது 'ஸ்ரீ பராங்குச மடம்" - இது தளவாய் கட்டிடத்தில் உள்ளது.  அங்கு எழுந்து அருளியிருக்கும் வேணுகோபாலன் - கண்ணபிரான் சேவை இங்கே.  இந்த கட்டிடமும் மடமும் கிட்டத்தட்ட 150 ஆண்டுகள்  முந்தையவை - இப்போது நாம் சேவிக்கும்  அழகிய விக்ரஹம் சில ஆண்டுகள் முன்பு - திரு கிருஷ்ணன் / திரு இராஜப்பா சகோதரர்களால் சமர்பிக்கப்பட்டவை.  முன்பு  ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி அன்று இந்த பெருமாள் வீதி புறப்பாடு  கண்டு அருளினார்.  இப்போது விஜயதசமி அன்று கங்கைகொண்டான் மண்டபம் எழுந்து அருள்கிறார்.

பக்தர்களை உய்விப்பதற்க்காக இவ்வுலகத்தில் அவதரித்து,  வாழ்ந்து, நாம் அறிவுபெற நல்லமுதமாம் 'ஸ்ரீபகவத்கீதையை' அருளிய கண்ணபிரானின் திருவடிகளைபற்றியவருக்கு, நிர்ஹேதுக  க்ருபை  உடையவனான எம்பெருமான் எல்லாநலன்களையும் தானேஅளித்து,  நம்மை பாதுகாப்பார்.

Here  are some photos of the Mutt and the Perumal at this place.

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
5th Oct 2021. 


1 comment:

  1. Very nice. பல முறை இந்த பகுதியை கடந்து சென்றிருந்தாலும் அறிந்திராத அறிய விஷயங்கள்... வெகு சிறப்பு

    ReplyDelete