To search this blog

Monday, October 19, 2020

Swami Manavala Mamunigal Uthsavam @ Thirunaraiyur Nachiyar Koil Divyadesam

Kumbakonam houses hundreds of Temple ~ there are many divyadesams in its vicinity too.  Thirunaraiyur aka Nachiar Kovil or Thirunarayur Nambi temple is on its outskirts, situate nearer Thiruvinnagar (Oppiliappan thirukovil) and Thirucherai Saranatha perumal thirukovil.



Constructed in the Dravidian style of architecture, the temple is glorified in the Divya Prabandha, and has 110 pasurams.  It here that Sriman Narayana as Acarya initiated pancha samskara to Thirumangai mannan.    This temple dates back to Chozha period and was built by Chozha King Chembian Kochenganan of late 3rd century AD  with later contributions from Medieval Cholas and Vijayanagar kings. A granite wall surrounds the temple, enclosing all its shrines, and has  a five-tiered rajagopuram, the temple's gateway tower.  

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள்  காலத்தில்  சோழர்கள் ஆண்ட காலம் பொற்காலம் என  கருதப்படுகிறது. சோழ மன்னர்கள் சைவத்தையும்  வைணவத்தையும் பின்பற்றினார்கள்.   முற்கால சோழர்களின் வம்சம் :  செம்பியன், எல்லாளன், இளஞ்சேட்சென்னி, கரிகால் சோழன், நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி, கிள்ளிவளவன், கோப்பெருஞ்சோழன், கோச்செங்கணான், பெருநற்கிள்ளி என பரம்பரையாய் நாட்டை நல்லாட்சி செய்தனர்.  இவர்களில் செம்பியன் கோச்செங்கணான் என்ற சோழ மன்னன் பல திருக்கோவில்களில் திருப்பணி செய்தவனாவான்.  

கோச்செங்கணான்   சிவபெருமானுக்கு 70 கோவில்கள் கட்டினதாக அறிகிறோம்.   திருநறையூரில் உள்ள நம்பிக்கோவில் அவனால் கட்டப்பட்டதாக  கலியன் வாய்மொழியில் ‘செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோவில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’ என  அறியலாம். இத்திருக்கோவில் ஒரு மாடக்கோவில்,  கோவில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.  மூலவர் சன்னிதியை அடைய 21 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.  கோவில் பல நிலைகளை கொண்டதாகவும், பெருமாள் தூரத்தில் இருந்து வரும்போதே சேவித்துக்கொண்டு வரும்படியும் நிலைகள் அமைந்துள்ளன.  

ராஜகோபுர வாசலில் நின்று பார்த்தாலே கர்பகிருஹத்தில் அற்புதமாக குடும்ப சமேதராய் எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானை சேவிக்க இயல்கிறது.    மூலவர் ஸ்ரீனிவாசனாக  நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இதில் வரம் தரும் முத்திரையுடன் வலது திருக்கையும், திருத்தொடையில் அமர்த்திய இடது திருக்கையும், சங்கு சக்கரம் ஏந்திய இருகைகளுடனும் விளங்குகிறார்.  

எம்பெருமான் மேதாவி மகரிஷிக்கு ப்ரத்யக்ஷமாகி அவரது புத்ரியை இத்தலத்தில் மணம் புரிந்ததாக ஸ்தல புராணம்.  மேதாவி   மகரிஷியின்   பிரார்த்தனைக்கு இரங்கி, மஹாலக்ஷ்மியே   “வஞ்சுள   மரத்தின் கீழ் அவதரிக்கவே    நாச்சியார் திருநாமம் வஞ்சுளவல்லி. இவர் பெருமாளின் வலப்பக்கத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தமது வலது திருக்கையில் வரதமுத்திரையுடன்  சேவை சாதிக்கிறார்.  தனி சன்னதி கிடையாது, தாயாருக்கே எல்லா பிரதானமும், பெரிய சன்னதியிலேயே  தாயாரும் எழுந்து அருளி இருப்பது மிக்க விசேஷம்.   

பெரிய  சன்னதியில் ஸ்ரீனிவாசரும் வஞ்சுளவல்லி தாயாரும் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றனர்.  எம்பெருமானுக்கு -   ஸ்ரீ வாசுதேவன், பரிபூரணம், நம்பி, என திருநாமங்கள்.  சந்நிதியில் பெருமாள் தாயாருக்கு வலது புறத்தில், சதுர்முகனாக ப்ரஹ்மதேவனும், பலராமரும், இடப்புறத்தில் - ப்ரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் என குடும்ப சமேதராய் அழகாக சேவை சாதிக்கின்றனர்.   75 அடி உயர ராஜகோபுரம், 5 நிலைகளோடு இக்கோவில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இக்கோவிலின் தல விருட்சம் மகிழ மரம். தீர்த்தம் மணிமுக்தா குளம்.  கலியனின் திருமடல்கள் உதித்த தலமும் இதுவே.

 




எம்பெருமான் பெரிய மண்டபத்துக்கு கீழே   மகாமண்டபத்தில் வடபால் தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் பக்ஷிராஜன், பெரிய திருவடி, வைநதேயன், புள்ளரசர் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடாழ்வார் எழுந்தருளியுள்ளார்.  மற்றெந்த திவ்யதேசத்திலும் இல்லாதபடி, இவர் சிறப்பானவர் - தனி சன்னதியில் எழுந்து அருளி இருந்தாலும், தனக்கு இயல்பாக எம்பெருமானை தனது தோள்களில் தாங்கி வாகனமாகவும் புறப்பாடு சிறப்பு பெறுகிறார்.    இவர் மிகவும் வரப்பிரசாதி.     கல் கருடன் வருடம் இருமுறை ஸ்ரீநிவாஸ பெருமானுடன் எழுந்தருள்வது தனி சிறப்பு.    மார்கழிப் பெருந்திருவிழாவில் நான்காம் திருநாளும்,  பங்குனிப் பெருந்திருவிழாவில் நான்காம் திருநாளும் ஸ்ரீனிவாசப்பெருமாள் இந்த கல் கருட சேவையும், வஞ்சுளவல்லி நாச்சியார் ஹம்ச வாகனத்திலும் புறப்பாடு கண்டு அருள்கின்றனர். இவர் வாகன மண்டபத்துக்குப் புறப்பாடு கண்டருளும் காலத்து, ஸ்ரீபாதம் தாங்குவோர் மொத்தம் நால்வராகவும், வாரைகள் சேர்த்தபின் மூலை ஒன்றுக்கு நால்வராகவும், (16 பேர்கள்) பின் எண்மர், பதின்மார்களாகவும் படிகளில் இறங்கியருளும் போது கணக்கற்றவர்களும்   ஸ்ரீபாதம் தாங்கி ஏளப்பண்ணுவது காண கண்கோடி வேண்டும்.  




  

இத்தலம் 110 பாடல்களில் மங்களாசாசனம் செய்யப்பெற்றது.  திருநறையூர் எனும் நாச்சியார் திருக்கோவிலைப்பற்றி திருமங்கைமன்னனின் ஒரு பாசுரம் இங்கே. :   

தாமத் துளப நீண்முடி மாயன் தான்  நின்ற

நாமத்திரள்  மாமாளிகை சூழ்ந்த நறையூர்மேல்,

காமக் கதிர்வேல் வல்லான் கலியனொலிமாலை,

சேமத் துணையாம் செப்புமவர்க்குத் திருமாலே.

அற்புத நறுமணம் கமழும் திருத்துழாயினாலாகிய மாலையை நீண்ட திருமுடியிலே கொண்ட   எம்பெருமான்  ஸர்வேச்வரன் நித்யவாஸம் பண்ணப்பெற்றதும், புகழ்பெற்றவைகளாய் நெருங்கியிருக்கின்ற பெரிய திருமாளிகைகளினால்  சூழப்பட்டதுமான திருநறையூர் விஷயமாக,-  மிக்க ஒளி பொருந்திய வேற்படையைப் பிடிக்க வல்லவரான திருமங்கையாழ்வார்  அருளிச் செய்த இச்சொல் மாலையை ஓதவல்லவர்களுக்கு  திருமகள் கொழுநனான ஸர்வேச்வரன்  எப்போதும் ரக்ஷகனான ஸஹாயபூதனாக ஆவன். 

Swami Manavala Mamunigal Uthsavam is grandly celebrated everywhere and here are couple of photos of Mamunigal at this divyadesam

 



adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
19.10.2020
Perumal  photos credit : Sri Prasanna battar at this divyadesam





rendition of Kaliyan’s thirumadal by this elderly person is a must hear here ! 



1 comment: