To search this blog

Sunday, April 26, 2020

Acarya Abhimanam ~ Vaduga Nambi - Thiruparivatta parai


23.4.2020 was day 5 of Emperumanar Uthsavam – it was Chithirai Aswini – marking the birth of a great sishya of Swami Ramanujar.

சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களொடும்;
செங்கனி வாயொன்றினொடும் செல்கின்ற தென்நெஞ்சமே.

Swami Nammalwar describes this Divyadesa Emperuman thus – that upon seeing His most beautiful thirumeni,  Azhwar’s thoughts are with the Emperuman and he cannot think of anything else…..  it is the divyadesam hailed as most proximate to Lord Mahavishnu’s abode of Sri Vaikundam [~calling distance from here~] – the most sacred place located around 40 kms from Thirunelveli…… 11 km from the seat for Thennacharya Sampradhayam “Nankuneri aka Vanamamalai – Thirusirivaramangai” and on the other side lying closer is another divyadesam called ‘ThiruvanParisaram [Thirupathisaram]’.

It is “ThirukKurungudi” located on the  foot of the Mahendra Hill on the Western Ghat. From Chennai, one can take the Kanyakumari/Ananthapuri Express to Valliyur. From here, one can reach Thirukkurungkudi (10 km) in 20 minutes by boarding the Papanasam bound bus.   Here is the most majestic temple of Azhagiya Nambirayar Temple ~ sung by Periyazhwar,  Thirumazhisaippiran, Thirumangai Azhwar and Swami Nammazhwar.   The famous ‘Kaisika puranam’ is associated with this temple and is read on ‘shukla paksha’ dwadasi of the month of Karthigai, known as ‘Kaisika Dwadasi. 



I have visited - Mysore, Srirangapatna, Thondanur, Hale Kiranguru near Pandavapura and most importantly Meluktoe Thirunarayanapuram  - still have not been to this village Saligrama, which is around 50 km near Mysore.  This is a place associated with the visit of our Acaryar Swami Ramanujar.  On his sojourn (linked to Vellai sarruppadi of day 6 of the Uthsavam – this year I have posted on Sri Kurathazhwan kashayam) – he stayed here for a while, many people embraced Srivaishnavism – foremost being Bitti deva – the Hoysala King Vishnuvardhana. .. .. this place is the birth place of Sri Vaduga Nambi.
Can there be a definition of ‘disciple’ – it could encompass – bakthi, abhimanam, submissiveness, extraordinary love and passion, servility,  commitment, discipline, mature, surrendered to the feet of Acarya, service as kainkaryam and more – or simply Vaduga Nambi to Ramanujar. 

The avathara sthalam of Vaduga Nambi is now known as   Mirle-Saligramam, where paddy grows abundance near Mysore. (Sali means Paddy). He was born in the star of Ashwini in the month of Chittirai and had the name -  Andhra Purnar.  When our Acarya visited Thondanur – people became sishyas taking sripadha theertham of Swami Mudaliandan.  Vaduga Nambi requested Swami Ramanujar to keep his feet in the  pond,  took Sripadha Theertham of both Mudaliandan & Ramanujar and became Swami’s ardent sishya.  He was to live a life inseparable from our Acarya.  He suggested to the Queen and King Bittadeva of curing the curse of the princess.  The Jain King invited Ramanujacharya to his palace – and upon his daughter becoming normal, embraced Srivaishnavism. 

The reference to Thirukkurungudi divyadesam is because the presiding deity Sri Kurukungudi Nambi took the form of Vaduga Nambi to serve as his Sishya – this place where Nambi Himself adorned Thiruman in the hands of Acarya is known as ‘Thirupparivatta parai’.   Vaduga Nambi was exemplary in his devotion like Madhurakavi Azhwar – and as Azhwar was committed to only Swami Nammazhwar, Vaduga was committed to the feet of Emperumanar.    He was one of the 74 Simhasanaadhipatis established by Swami Ramanujar.  When Emperumaanar left the mortal coil , he rested his head on Embar’s lap and his feet on Vaduga Nambi’s lap and amalgamated into Namperumal’s Thiruvadi… listening to Divya Prabandam and Upanishads.

After Sri Ramanujar ascending to paramapadam,  Vaduga spent his last days in Saligramam worshipping Sri Ramanuja’s Thiruvadi and teaching Sri Ramanujars glories to his sishya and others and attained immortality due to his Acharya Abhimanam.  He lived for 95 years.    His contribution is chronicle on the life of Ramanuja known as ‘Yatiraja Vaibhavam’ detailing every incident of Emperumanar’s life concluding with the kainkaryam that he was to get at the feet of Ramanujacharya.

ஆச்சார்ய  அபிமானம் மிக உயர்ந்தது.  அதற்க்கு ஒரு எடுத்துக்காட்டாய்  விளங்கியவர் வடுக நம்பி.  சித்திரையில் அஷ்வினி நட்சத்திரம் அவரது பிறந்த தினம்.   ஆந்த்ர பூர்ணர் எனும் வடுக நம்பி,  எம்பெருமானாரிடம் கொண்ட  ஆசார்ய பக்தி அளப்பரியது, ஈடற்றது. எம்பெருமானார் இவர்க்கு சகல சாரார்த்தங்களும் போதித்தருளினார்.  மதுரகவி ஆழ்வார் எப்படி நம்மாழ்வாரை தவிர வேறு ஒருவரையும் தெய்வமாக கொள்ளாமல் “தேவுமற்றறியேன்” என்று இருந்தாரோ, நம் வடுக நம்பியும் ஸ்ரீராமானுஜரே தமக்கு எல்லாமும்  என்றிருந்தார்.

ஒரு முறை வடுகநம்பி எம்பெருமானாருக்கு, திருமடைப்பள்ளியில் பால் அமுது காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்பொழுது நம்பெருமாள் திருவீதியில் புறப்பாடாக  மடத்து வாசலில் எழுந்தருள, எம்பெருமானார் வெளியே சென்று சேவித்து, வடுக நம்பியை வெளியே வருமாறு கூப்பிட்டார். அப்பொழுது, நம்பியோ, வெளியே வராமல், உள்ளிருந்தபடியே “அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால், என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” என்று கூறும்படியான ஆசார்ய நிஷ்டையுடன் திகழ்ந்தார்.

எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளியபோது அங்குள்ள மிதிலாபுரி சாளக்கிராமம் சென்று, முதலியாண்டானை அங்கிருந்த தீர்த்தத்தில் திருவடி நனைக்கச் சொல்லவும், பின்னர் அதில் நீராடிய உள்ளூரார் அனைவரும் ஸ்வாமியின் சிஷ்யர்களாக மாறினர்.  அவ்வாறு முதலியாண்டான் மற்றும் எம்பெருமானாரின் ஸ்ரீபாத தீர்த்தம் பெற்று  அபிமானியாக மாறியவர்  ஆந்த்ர பூர்ணர் எனும் வடுக நம்பி.   வடுக நம்பி ஆசார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார். தினமும் இவர் எம்பெருமானார் திருவடி நிலைகளுக்கே திருவாராதனம் செய்வாராம். 

உடையவர் பற்பல ஊர்களுக்கு திக்விஜயம் செய்து வந்து - அனந்தபுரநகர் சென்று ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியை சேவித்து , அங்கேயே தங்கி அங்கும் வைணவ சம்பிரதாய பூஜை முறையை நடைமுறைப்படுத்த நினைத்தார்.  அதற்கு அவ்வூரில் எதிர்ப்பு இருந்தது. ஒரு நாள் ராமானுஜர் தன் சீடருடன் மண்டபத்தில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது பெருமாள், கருடனை அழைத்து ராமானுஜரின் உறக்கம் கலையாமல் தூக்கிச் சென்று திருக்குறுங்குடியில் விடச்சொன்னார்.

மறுநாள் கண்  விழித்துப் பார்த்த எம்பெருமானார்  திருக்குறுங்குடி தலத்தில் இருப்பதை அறிந்தார். தன்னுடன் படுத்துறங்கிய சீடன் வடுக நம்பியும் அங்குதான் இருப்பான் என்றெண்ணிய ராமானுஜர் வடுகநம்பியை அழைத்தார்.  திருக்குறுங்குடி அழகியநம்பி பெருமாள், சீடர் உருவத்தில் வந்து ராமானுஜர் முன் கைகூட்டிப் பணிந்து நின்றார்.  ராமானுஜர் நீராடி வந்தபின் வழக்கம்போல் சீடனுக்கு திருநாமம் இட்டு, அவன் முகத்தைப் பார்த்து, ‘‘நம்பி உன்முகம் தெய்வாம்சம் பொருந்தித் திகழ்கிறது. உன்னில் நான் பெருமாளையே காண்கிறேன். இன்று நான் உனக்கிட்ட திருநாமம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது என்றார். பின்னர், கூடையிலிருந்த மலரையெடுத்து வடுகநம்பியின் காதுகளில் வைத்தார். ‘‘நம்பி, இப்போது உன் அழகு கூடிவிட்டது’’ என்று மகிழ்ந்தார்.  திவ்யதேச திருக்கோவிலில் நம்பியை சேவிக்கும் போது  அழகிய நம்பி பெருமாள் நெற்றியில், வடுக நம்பிக்கு தானிட்ட திருநாமமும், காதுகளில் வைத்த பூவும் அழகாகத் திகழ்வதைக் கண்டு தன் சீடன் வடுகநம்பியாக வந்தது பெருமாளே என அறிந்து சிலிர்த்தார்.

ஸ்ரீராமானுஜர் அவருக்கு “ஸ்ரீவைஷ்ணவ நம்பி” என்று திருநாமம் அருளி,  தமது அபச்சாரங்களை பொருத்தருள வேண்டும் என்று வேண்டி,  தீர்த்தம், திருமாலை,  ஸ்ரீசடகோப பிரசாதங்கள் வேண்டிப்பெற்றார்.   ஸ்ரீவைஷ்ணவ  நம்பி, வடுக நம்பியாய்  ஸ்ரீராமானுஜர் நீராடி களைந்த காவி வஸ்திரங்களை துவைத்து பாறையின் மீது ஆறபோட்டு அவருக்கு வேண்டிய உபகாரங்களை செய்துவித்த  அப்பாறை ‘திருப்பரிவட்டப்பாறை’ என்று அழைக்கப்படுகிறது. கருடாழ்வார் ராமானுஜரை  திருவனந்தபுரத்திலிருந்து தூக்கிவந்து கிடத்திய பாறை இதுதான். திருக்குறுங்குடி கோயிலுக்கு  சில கி.மீ. தொலைவில்  இந்தப் பாறை உள்ளது.


வடுக நம்பி எம்பெருமானாரைப்பற்றி   114 ஸ்லோகங்கள் கொண்ட 'ஸ்ரீ யதிராஜ வைபவம்' என்ற நூலை அருளிச்செய்தார்.  வடுக நம்பியின் தனியன் இங்கே :
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே

நம் சிறந்த ஆசார்யர் மணவாள மாமுனிகள் தமது ஆர்த்தி பிரபந்தத்தில் பின்வருமாறு வடுகநம்பியை புகழ்ந்துரைக்கிறார்.
உன்னையொழிய ஒரு தெய்வம் மற்றறியா
மன்னுபுகழ்சேர் வடுக நம்பி - தன்னிலையை
என்றனக்கு  நீ  தந்தெதிராச என்னாளும்
உன்றனக்கெ ஆட்கொள் உகந்து.

ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம்.
அடியேன் ஸ்ரீனிவாச தாசன் [சோளசிங்கபுரம் தொட்டாச்சார் திருவடி சம்பந்தம்)
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
திருவல்லிக்கேணி  26.4.2020.

PS:  Sri D Ramanujam Swami living on the sannathi street, is  taking care of the nandavanam at Thiruparivattaparai and is doing great kainkaryam to all visiting bakthas to this divyadesam.











No comments:

Post a Comment