To search this blog

Sunday, April 19, 2020

காக்கும் இயல்வினன் கண்ணபெருமான் : Anna Koota Uthsavam 2019


காக்கும் இயல்வினன் கண்ணபெருமான்
எழில்விழவில், பழநடைசெய் : அன்னக்கூட உத்சவம் 2019




Panic is not a good state of mind, will make us take irrational steps. A soldier guarding the Nation standing at the border will never panic – if situation changes, he needs to respond.  When the situation gets tough, the tough gets going.   Fortunately, we have a karmayogi, who thinks of the Nation and evolves protective plans is at the helm and we must all the instructions of our Prime Minister Narendra Modiji.

The novel coronavirus, or COVID-19, pandemic has spread across 185 countries and territories. Today is the 26th  day of India’s nationwide lockdown, which has been extended till May 3. Confirmed COVID-19 cases in India stand at 15,707. The death toll from the outbreak in India is at 507. Maharashtra, Delhi and Tamil Nadu have reported the highest number of cases.  Just forget statistics – the nos. mostly threaten us and when we hear news of covid cases in nearby localities, people tend to panic.
Globally, there have been over 23.17 lakh confirmed cases of COVID-19 with  1.59 lakh people having  died so far. The United States has the highest number of confirmed cases, followed by Spain, Italy, France, Germany and the United Kingdom. (Read again, there is no China there) The outbreak continues to have a major impact on the global economy.

Union Home Minister Amit Shah yesterday reviewed the government’s Covid-19 control room and the situation in various states amid the lockdown. Shah reviewed operations of the MHA Control Room, which is monitoring and getting feedback from all states and various other ministries during the period. According to media reports, Shah was also briefed about the migrant crisis situation in the country due to the lockdown till May 3.

While questions have been asked about India’s Covid-19 testing rate and apprehensions raised on rising number of undetected cases, Dr Raman R. Gangakhedkar, head of epidemiology and communicable diseases at the Indian Council of Medical Research (ICMR), tells The Print’s National and Strategic Affairs Editor Jyoti Malhotra why the nation is likely to fare well than most other affected nations.  He categorically stated that   the governmental efforts have been so strong and timely that it didn’t spread as much as the world had expected. You look at the rest of the developed countries that you have currently which are facing the severe outbreak, you suddenly start finding — compare yourself with France, compare with Italy, Spain or you compare even with China for that matter. If it is two and a half months of outbreak in China, things would had been different but we learnt from them that restricting international travel, going for contact tracing aggressively, trying to ensure that you limit the interaction between human beings, try and ensure that social distance is maintained by people and this humongous task has been so well compared to the rest of the countries. Today, we aren’t at the same cusp which we should have had minus these interventions, if you look at the other countries.

So let us not panic, this too shall pass by and by the Grace of our Emperuman we will become stronger – today, 19.4.2020 starts the annual uthsavam of Swami Emperumanar – and on this occasion, posting some photos of the  day 6 purappadu of Acarya Manavala Mamunigal, grand for it was Anna Koota Uthsavam on 28.10.2019.  Sure all of us have from our childhood heard of Lord Krishna lifting the mountain Govardhana giri – here is the prabhavam .. ..

Sri:
SrimatheRamanujaya Nama:
SrimathVaravaraMunaye Nama:

எழில்விழவில், பழநடைசெய்  ~  ஆழ்வார்கள்தமிழ்அற்புதமானது.  என்னே ஒரு நடை.  அநாதி ஆசாரமாக பல வருடங்களாக நடந்துவரும் சிறந்த உத்சவத்திலே .




மாயக்கண்ணன் ஜனித்த மதுரா நகரத்துக்கு அருகில் உள்ள கோகுலம், ப்ருந்தாவனம், கோவர்தன்  போன்றவை கண்ணன் விளையாடி திகழ்ந்த இடங்கள்.   திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே, இராப்பத்து உத்சவத்திலே ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளுக்கு 'கோவர்தன கிரி' சாற்றுப்படி.

ஆண்டுகள் ஒரே மாதிரி இருக்க மாட்டா ! ~ சரித்திரத்தில் தேசங்கள்/ நாடுகளுக்கு இடையே போர்களும், பஞ்சமும், பெரும் பிணியும், பெரு வியாதிகளும் மக்களை அல்லல்படுத்தி உள்ளன.  அல்லல் வரும்போது அஞ்சுற வேண்டா! - எம்பெருமானை துதிப்பீர். அவன் நம்மை சிறப்பாக காத்தருள்வான்.  இதோ இங்கே 'கோவர்த்தன கிரி பிரபாவம்'.

மழைக்கும் மேகத்துக்கும் அதிபதி இந்திரன். அவனே தேவர்களுக்கும் அதிபதியானதால் தேவேந்திரன் என்ற திருநாமத்தைப் பெற்றான். இந்திரனின் பெருங்கருணையால் மாதம் மும்மாரி பெய்து நிலங்களில் பயிர் செழுமையாக விளைந்து, மக்கள் பசிப்பிணியின்றி வாழ்ந்து வந்தனர். இந்த நன்றியை இந்திரனுக்குத் தெரிவிப்பதற்காக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் முதல் பயிரை அவனுக்கே படைத்தனர். இதனை ‘இந்திர விழா’ என்று கோலாகலமாகக் கொண்டாடினர்.  நான் மட்டுமே அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறேன். என்னையன்றி மக்களுக்கு நன்மைகள் செய்பவர்கள் வேறு யாரும் இல்லை!’ என்ற அகம்பாவம் இந்திரனுக்கு மிக அதிகமாக இருந்தது. இந்தச் செருக்கை அடக்கிட பரந்தாமனானகண்ணபிரான்,  ஒரு விருத்தாந்தம் அருளினார். 

ஒரு வருஷம் விருந்தாவனவாசிகள் ஒன்றுகூடி பசுக்களை அலங்கரித்து அவற்றிற்குப் புல் கொடுத்தார்கள். பசுக்களுடன் கோவர்த்தன கிரியை வலம் வந்தார்கள். கோபியர்களும் விமரிசையாக ஆடையணிந்து மாட்டு வண்டிகளில் அமர்ந்து கிருஷ்ணரின் லீலைகளைப் பாடியபடி பவனி வந்தார்கள். கோவர்த்தன பூஜையை நடத்தி வைத்த அந்தணர்கள் கோபாலர்களையும் கோபியரையும் ஆசீர்வதித்தார்கள். எல்லாம் சரிவர நடந்தேறிய பின் கிருஷ்ணர் மிகப்பிரமாண்டமான உருவத்தை மேற்கொண்டு கோவர்த்தன கிரிக்கும் தமக்கும் எவ்வித வேறுபாடுமில்லை, ‘இரண்டும் ஒன்றே’ என்பதை அங்கிருந்த மக்களுக்கு உணர்த்தினார். பின்னர், அங்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு முழுவதையும் கிருஷ்ணர் உண்டார்.  கோவர்த்தன கிரியும் கிருஷ்ணரும் ஒன்றே என்பது இன்றும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அம்மலையிலிருந்து கற்களை எடுத்துச்சென்று வீடுகளில் வைத்து கிருஷ்ணராக அவற்றை பாவித்து பூஜிக்கிறார்கள்.

கர்வத்தில் தன மதி இழந்த பலவகையான மேகங்களுக்கு அதிபதியான இந்திரன் ‘ஸாங்வர்த்தக’ என்ற கொடிய மேகத்தை அழைத்தான். இந்த மேகம், பிரபஞ்சம் முழுவதையும் ஒரே மூச்சில் அழித்துவிடும் ஆற்றல் கொண்டது. ஆகவே இந்திரன், விருந்தாவனத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கும்படி ‘ஸாங்வர்த்தக’ மேகத்திற்குக் கட்டளையிட்டான். இந்திரனின் கட்டளைப்படி பலவகையான அபாயகரமான மேகங்கள் விருந்தாவனத்தின்மேல் தோன்றி, தம் பலம் முழுவதையும் பிரயோகித்து அழிவை ஏற்படுத்தத் தொடங்கின. ஆயர்பாடி முழுவதும் நாசமாகும்படி பெருங்காற்றுடன் பெருமழையைப் பெய்தன. அப்படி மழை பெய்த ஒரு கணத்தில் பூமியும் ஆகாயமும் திசைகளும்  மழைத்தாரைகள் நிறைந்து ஒன்றாகக் காணப்பட்டன. மின்னல்களும் இடிகளும் கசையடிகளாகத் தாக்க, அந்த அடிக்குப் பயந்தவைபோல், மேகங்கள் திக்குகள் அதிரும்படி கர்ஜித்தன. ஆரம்பத்தில் கூரிய அம்புகள்போல் நீர் தாரை தாரையாகப் பெய்தது. பிறகு தூண் பருமனில் மழையைப் பொழிந்து, விருந்தாவனத்தில் நிலப்பகுதிகளை மேடு பள்ளம் தெரிய வொண்ணாமல் நீரால் நிரப்பின. உலகமே இருள் மயமானது.

மாடுகளும், கன்றுகளும் கஷ்டப்பட, மனிதர்கள் பெரும்பயத்துடன் கிருஷ்ணனைசரணடைந்து, ‘‘கிருஷ்ணா, நீயே எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று தீனக்குரலில் வேண்டினர்.   இடி, மின்னல், மழையோடு பெருங்காற்றும் வீசியதால் ஒவ்வொரு ஜீவராசியும் கடுங்குளிரால் நடுங்கின.  ‘பக்தர்களே! நீங்கள் யாவரும் இந்த மலையின் அடியில் வந்து சேருங்கள். இந்தக் காற்றுக்கும் மழைக்கும் அஞ்ச வேண்டாம். அதை நான் இந்த மலையைத் தூக்கிப் பிடித்துத் தடுத்துவிட்டேன். இதனடியில் உள்ள இடங்களில் அவரவர் விருப்பம்போலச் சுகமாக இருக்கலாம். மலை மேலே விழுந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்!’’ என்று கூறியபடியே மலையைத் தனது விரலாலே கிருஷ்ண பகவான் தாங்கிப்பிடித்துக்கொண்டார்.  தமது இடதுகையின் சுண்டுவிரலின் நுனியில் நிறுத்தியிருந்ததைக் கண்டும், பசி, தாகம், வேறு எந்தவிதமான கவலையுமில்லாமல்  அவர் முகம் ஒளிவிட்டதை எண்ணியும் ஆச்சர்யமடைந்தார்கள், அவ்வூர் மக்கள். . ஏழு தினங்கள் ஓயாமல் மழை பெய்ய, சுவாமியும் அந்த கோவர்த்தனகிரி மலையை குடைபோல ஏந்தி அனைவரையும் காத்தருளினார்.

On day 6  of Manavala Mamunigal Uthsavam on 28.10.2019    – what a dharshan it was - of Sri Parthasarathi  – sublime beauty,  draped in beautiful silk dress, dressed like a Cowherd King, wearing  a turban,  whip in his hand, the other hand resting, adorning many jewels, including impeccable shining ear rings ~ he was also wearing bangles - what a marvellous treat to His bakthas.  – and it is the day of   ~   Govardhanagiri Gopala.

We all go to temples and worship Lord in various forms.  For us the Lord is Omnipresent and the beautiful  Uthsavar symbolizing Him comes on the street to provide darshan and protect us.   Often we stand before the Lord and rekindle our worries beseeching His benevolence in getting remedy. There are others who visualize Him in various swaroopams and enjoy Him in their inner souls.   Saint Periyazhwaar, when he saw Lord Sriman Narayana astride Garuda, started thinking of His magnificence and started singing paeans seeking that no harm ever happen to the Greatest !

                        Our little Sri Krishna was born in Mathura in a prison of Kamsa ~ the kingdom of Mathura was earlier known as Braj, perhaps the name derived from Vajrasan.  All places associated with Lord Krishna enamour us .. .. nearer Mathura, is Gokulam, Brindavan, Govardhan – the places where Krishna exhibited so many wonders and grew up along with Balarama.  




This day of Swami ManavaalaMamunigalUthsavam celebrated as “Annakoota Uthsavam.” On this day,  lot of Chakkaraipongal, kadambam and other such offerings are made to Perumal. This is to commemorate the lifting of ‘Govardhana Giri’ by Lord Krishna on the day when it rained very heavily when the cowherds were making offerings to Indira.  Govardhana (गोवर्धन) is a 8km long hill located near the town of Vrindavan, in the Mathura district of Uttar Pradesh – it is the sacred hills of Braj.   Lord  Krishna as he grew up, saw  preparations for the annual offering to Indra and questioned his father Nandagopala, instructed the villagers on what their dharma as farmers was.  An angered Indira  flooded the village. Lord Krishna protected the village people and their cattle by lifting the Govardhana hill with his little finger.



Understand that in Northern part, hundreds of sweet dishes are offered to Lord Krishna on this day.  Here are couple of photos showing offerings at Vrindavan Ranganji Mandir (photos credit my friend APV Vijay)   - which depicts hundreds of sweets offered on the altar in the shape of Govardhan hill.

28.10.19 அன்று  மணவாள மாமுனிகள் உத்சவம் 6 -  அன்னக்கூட உத்சவம் என பிரசித்தி. இன்று பெருமாளுக்கு கதம்பம் முதலான அன்னங்கள் அமுது செய்விக்கப் படுகின்றன.  'இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில்’  என  'கோவர்தனகிரி'  பிரபாவம்   நினைவு கூறப்படுகின்றது. ஸ்ரீபார்த்தசாரதி  பெருமாள் 'ஆயர் குலத்தில்' வந்து உதித்தவராக  கோல் (சாட்டை), தலைப்பாகை,  தண்டம், என அணிந்து மிக அழகாக சேவை சாதித்தார். "சீலை குதம்பை ஒரு காது, ஒரு காது செந்நிற மேல் தோன்றிப் பூ" என கண்ணன் கன்றுகள் மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்ந்ததை பெரியாழ்வார் அனுபவித்த வண்ணம், ஸ்ரீபார்த்தசாரதி தனது காதுகளில் 'ஓலை மற்றும் பூ' போன்ற திருவாபரணங்களை அணிந்து கொண்டு அழகான பட்டு உடுத்தி, கைகளில் வளைகள் அணிந்து சேவை சாதித்தது நம் போன்றோர்க்கு கிடைத்தற்கரியது.  



The  evening at Thiruvallikkeni, on the occasion of Anna Kooda Uthsavam, was the magnificent purappadu of Lord Parthasarathi –    It was a very rare Darshan to behold… Here are some photos of  the  festive purappadu of Sri Manavala Mamuniga lUthsavam at Thiruvallikkeni divyadesam on 28.10.2019 posted today

~adiyen Srinivasa dhasan [Srinivasan Sampathkumar from Dusi Mamandur]
19.4.2020.










No comments:

Post a Comment