To search this blog

Sunday, September 23, 2012

Azhwar Thirunagari Emperumaanaar Jeeyar Swami - at Thiruvallikkeni Divyadesam


Sri Vaishnavam  dates back to centuries handed over to us through many generations by our Acharyars which include Sri Ramanujar and Sri Manavalamanunigal.   Of the Divyadesams, the one near Thirunelveli,  called ‘Azhwar Thirunagari’ [Thiruk Kurugoor] is of great significance – as this is the  divyadesam where Swami Nammalwar was born.  It is also the place, which gave us our Greatest Acharyar – Sri Varavara Muni ‘Swami Manavala Maamunigal’.

This Divyadesam is in the vicinity of Tirunelveli also known as Nellai, an ancient city with rich cultural heritage.  This place is located on the western side of Tamirabarani river and is known for its Tamil literature.   Tamirabarani is known as “van poru nal” in divya prabandham.  The Moolavar here is Aathi Nathan in standing posture. The lotus feet of the Moolavar idol is believed to be inside the earth. Uthsavar is ‘Polinthu Nindra Piraan’ and thaayar is – Aathinatha nayaki / Thirukurugoor nayaki.  

At this place, taking care of Bhavishthacharya Sannathi, is Emperumanaar Jeeyar Mutt.  Today,  the pontiff of this Mutt – ‘Sri Azhwar Thiru Nagari Emperumanaar Jeeyar’ Swami visited Triplicane.  Morning Jeeyar Swami did Mangalasasanam at Sri Parthasarathi Swami Temple, Thiruvallikkeni and in the evening there was the grand thiruveedhi purappadu on the occasion of Jeeyar Swamy’s ‘pattina pravesam’

Here are some photos taken this morning and during evening purapadu, a few minutes ago.

Adiyen – Srinivasa dhasan.

To see my earlier post on Thirukurugoor {Azhwar Thirunagari} divyadesam click : Azhwar Thirunagari Divyadesam

                                                              **************************************

திவ்யதேசங்களில் தொழுதல் மிகவும் உகந்தது. பல திருப்பதிகள் அருகருகே திகழும் இடம் திருநெல்வேலி.  இங்கே நவ திருப்பதிகளுள்  ஒன்றாக திகழும் திவ்யதேசம் திருக் குருகூர் உள்ளது.  108 திருப்பதிகளுள் ஒன்றான திருக்குருகூர்,   தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது.  நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார்.  இங்கு  மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக நம்பப்படுகிறது  தாமிரபரணி ஆற்றங்கரையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது.

நமது தென்னசார்யசம்ப்ரதாயத்துக்கு மாசற்ற செம்பொன் விசதவாக் சிகாமணிகள் என்றும், ஆதிசேஷனுடைய அவதாரம் என்றும், யதீந்த்ரரான இராமானுசருடைய மறுஅவதாரம் என்றும் புகழ் பெற்றஆச்சர்யர் மணவாள மாமுனிகள் ஐப்பசியில் திருமூலத்தில் அவதரித்த ஸ்தலமும் இதே.

திருவாய்மொழி தனியனில்   : - “திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும், மருவினிய வண்பொருநல் என்றும்” - பாண்டிய நாட்டு நாடு தாமிரபரணி நதியின் (வண்பொருநல்) பெருமையும் குருகூர் திவ்யதேசத்தின் பெருமையும் விளக்கப்படுகிறது.  

நம்மாழ்வார் தமது திருவாய்மொழி நான்காம் பத்து - பத்தாவது திருவாய்மொழியில் ஸ்ரீமன் நாராயணனின் பரத்வத்தை விளக்கி இவ்வூரின் பெருமையைப் பாடியுள்ளார்.

" நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் *
வீடில் சீர்ப்புகழாதிப்பிரான், அவன் மேவி உறைகோவில் *
மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருகுருகூரதனை *
பாடியடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் ! பரந்தே "

இங்குள்ள நம்மாழ்வாரின்  விக்ரஹம் மதுரகவிகளால் தாமிரபரணி நீரை காய்ச்சி உருக்கி செய்யப்பட்டதாக கொண்டாடப்படுகிறது.   இவ்வளவு சிறப்பு வாய்ந்த 'பவிஷ்தாசார்யர்' சன்னதி பொறுப்பில் உள்ள மடம் 'ஸ்ரீ ஆழ்வார் திருநகரி எம்பெருமானார் மடம்'.  இம்மடத்தின் வர்த்தமான ஜீயர் சுவாமி இன்று திருவல்லிக்கேணி எழுந்து அருளினார்.

காலை ஜீயர் சுவாமிகள் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோவிலுக்கு எழுந்து அருளி எல்லா சன்னதிகளிலும் மங்களாசாசனம் செய்து அருளினார். மாலை, ஜீயர் சுவாமி திறந்த பல்லக்கில் பட்டண பிரவேசம் சிறப்பாக பெரிய மாட வீதி புறப்பட்டு கண்டு அருளி, பக்தர்களை ஆசீர்வதித்தார்.

காலையும், மாலை புறப்பாட்டின் போதும் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 







Add caption

5 comments:

  1. Brilliant post. Acharyar thiruvadigale saranam - Malliga

    ReplyDelete
  2. miga arputhamana padangal; arputhamana solladal - thelivana varnanai - Sampradayathirku neer oru nalla kainkaryam seithu varugeerer. Poliga, Poliga melum - Sadagopan

    ReplyDelete
  3. Acharyan Thiruvadigale sharanam..i wanted to know the divya name of the jeeyar has taken the name Azhwar Thirunagari Emperumanar Jeeyar or does he have a name like his predecessor Sri Devaraja Ramanuja Jeeyar

    ReplyDelete
  4. laptop test
    Thank you for some other wonderful article. Where else could anyone get that type of info in such a
    perfect means of writing? I've a presentation next week, and I am on the look for such info.notebook test

    ReplyDelete